Skip to Content

14.சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி

EBயில் வேலை செய்பவர் அவர்கள் பயிற்சிக்காகப் போகுமுன் (physical checkup) டாக்டரின் பரிசோதனைக்குப் போனார். அனைவரும் போகும்பொழுது அவரும் போகவேண்டியதாயிற்று. பயிற்சிக்காகப் போன இடத்தில் இந்தப் பெண்மணிக்கு B.P.. அதிகம், இதயத்தில் கோளாறு, சர்க்கரை 300க்குமேல் எனக் கூறியபின் மேலே அவர்கள் பேசியது எதுவும் காதில் விழாமல் வீடு வந்து, "என் பிள்ளைகட்குக் கல்யாணம் ஆகவில்லை. எனக்குப் பொறுப்புகள் ஏராளம். ஏன் எனக்கு இந்த விதி?''என அழுது புலம்பினார். கணவன் அன்னை பக்தர். ஆழ்ந்த பக்தர். மகள் தீவிரபக்தை. மகளுக்கு அன்னை நிதர்சனம். "டாக்டர் கூறியதை நான் பொருட்படுத்தவில்லை. அன்னையிருக்கும்பொழுது எனக்கேன் பயம். அன்னையிடம் கூறிவிட்டால், என் கடமை முடிந்தது என நினைத்துக்கொண்டு நான் மையத்தை நோக்கிப் புறப்பட்டேன். மையத்தின் வாயிலில் அன்னை முகமலர்ந்து சிரித்துக்கொண்டு எனக்காகக் காத்திருப்பது போல் இருந்தார்கள். அன்னையிடம் என் தாயார் கூறியனவெல்லாம் கூறினேன். என் தாயாருக்கு sugar தொந்தரவு கூடாது என்றேன். பலமாகச் சிரித்து தலையை வெகுவாக ஆட்டினார்கள். நாழியாகிறது வீட்டிற்குப் போகிறேன் என்றேன். அன்னை முகம் வாடியது. மேலும் கொஞ்ச நாழிகை இருந்தேன். அன்பர்கள் கூறுவதை அன்னை அகல கண்விரித்து ஆர்வமாகக் கேட்கக் காத்திருப்பதைக் கண்டேன்''. இதனிடையில் அவர் தாயார் வேறு ஒரு டாக்டரிடம் சோதனை செய்திருக்கிறார். Sugar 275 என்றனர். அடுத்த டாக்டர் 190 என்றார். இதைக் கேட்டு அவர் வீட்டிலுள்ள அன்னை படத்துடன் பேசி ஏன் 190? எதுவும் வேண்டாம். நார்மலாக்கக் கூடாதா என வேண்டியிருக்கிறார். ஓரிரு நாட்களாயிற்று. எதிர்த்த வீட்டிலுள்ளவர் டாக்டர். வெகுநாளைய பழக்கம். செய்தி கேட்டு வந்து ரத்தம் எடுத்து பரிசோதனை செய்தார்.

Sugar நார்மலாக இருக்கிறது.

யார் சொன்னது 190, 275, 300க்குமேல் என்றார்.

அன்பர்கட்கும் sugar உண்டு. பலருக்கும் உண்டு. இதுபோன்ற செய்தியை அவர்கள் கேட்டதில்லை. பிறர் விஷயத்தில் கேட்டால், அன்னையின் பெருமையை அறிந்தால் நம்பிக்கை வருவதில்லை. நமக்குப் பல விஷயங்கள் அற்புதமாக நடந்திருந்தாலும் மருந்து குணப்படுத்த அன்னை அருளிருந்தால் போதும் என மனம் கூறுகிறது.

அன்னையின் சக்தி நம் நம்பிக்கையுள்ள அளவிற்குப் பலிக்கும்.

நம்பிக்கை பெரியது. மலையையும் நகர்த்தவல்லது.

*******


 



book | by Dr. Radut