Skip to Content

09.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                      (சென்ற இதழின் தொடர்ச்சி....)            கர்மயோகி

 855) வெறுப்பிலும் எதிர்ப்பின் கவர்ச்சியிலும் உணர்வின் பரிணாம இரகஸ்யம் உள்ளது. அதுவே மனதில் புரிந்து கொள்ளும் ஆர்வமாகும். ஒவ்வொரு நிலைக்கும் இதற்குரியதுண்டு. பரம்பொருள் ஜடத்தில் வெளிப்படுமுன் பகவானின் பொறுக்கமுடியாத ஆனந்தப் பூரிப்பு என்பது தெரியும். அன்னை அதையே இடையறாத தீவிர ஆனந்தமென்கிறார்.

பரிணாமம் லீலையாகும்.

. வெறுப்பு என்பது உணர்ச்சி வேண்டாம் என விலக்குவது.

. எதிர்ப்பானாலும் பல சமயங்களில் அது கவர்ச்சியாக இருக்கும். எதிர்ப்பு என நாம் அறிகிறோம். அதன்பின் கவர்ச்சியுள்ளது.

. நம்மையறியாமல் அங்குள்ள விஷயம் இரகஸ்யம்.

. உலகத்திற்குரிய இரகஸ்யம் வேறு, வீட்டிற்குரிய இரகஸ்யம் வேறு.

. ஒருவருக்குள்ள இரகஸ்யம், பலருக்கும் தெரியும்படி நேர்வது உண்டு.

. மனம் புரிந்துகொள்ள முயல்வது வெறுப்பாகவும், எதிர்ப்பாகவும், கவர்ச்சியாகவும் தெரியும்.

. நாம் வெறுப்பு என்றறிவது உணர்வில் மனம் புரிந்து கொள்வதாகும்.

. உணர்வில் மறைந்துள்ள மனம் புரிந்து கொள்கிறது என்பதை நாமறியாதது வெறுப்பு எனத் தெரிகிறது.

. இது உணர்வின் இரகஸ்யம்.

. ஊர் அறியாமல் வீட்டில் நடப்பது ஊருக்கு இரகஸ்யம்.

. வீடறியாமல் ஊரெல்லாம் அறிவது வீட்டிற்குரிய இரகஸ்யமாகும்.

. அதுபோல் இரகஸ்யங்களைக் கடந்த முடிவில் பரிணாம இரகஸ்யம் உண்டு.

. அந்த இரகஸ்யமும் 4 பாகங்களாகப் பிரிந்து மனம், உணர்வு, உடல், ஆன்மாவுக்குரிய இரகஸ்யம் எனப்படும்.

. நாம் திருமணம் குறித்த நாளில் பந்த் வந்தால் அது வாழ்வின் இரகஸ்யமாகும்.

. பெரிய வேலையில் சேர்ந்தபின் டாக்டர் இதயம் சரியில்லை என்றால் வேலை போய்விடும். விதி சதி செய்தது என்கிறோம்.

. எந்த நிலையிலும், அந்த நிலைக்குரிய இரகஸ்யம் உண்டு.

. பயித்தியம் பிடித்து உளறுபவரும் வெளியிடாத இரகஸ்யம் உண்டு.

. அடி தாங்காமல் உயிர் போகும்பொழுதும் வாயால் வெளிவாராத இரகஸ்யமுண்டு.

. 70ஆம் வயதில் கண்பார்வை சரியில்லை என டாக்டரிடம் போனபொழுது அடுத்த கண்ணைப் பற்றி டாக்டர் கேட்டார். அது 5-ஆம் வயதில் பார்வையை இழந்துவிட்டது என்றார். 5-ஆம் வயதில் பார்வைபோன விஷயம் 70ஆம் வயதுவரை வீட்டில் எவருக்கும் தெரியாது.

. டாக்டர் பிழைக்காது என்று வீட்டிற்கு அனுப்பியபின் பிழைப்பது உடலின் இரகஸ்யம்.

. பகவான் உடலின் இரகஸ்யத்தை அன்னையிடம் சொல்லாமலே போய்விட்டார்.

. எந்த நிலையிலும் இரகஸ்யமிருப்பதைப்போல் பரிணாமத்திற்கு எல்லா நிலைகளிலும் இரகஸ்யமுண்டு.

. அந்த இரகஸ்யம் வெளி வந்தால் எழுவது ஆனந்தமான பூரிப்பாகும்.

. அன்னை அதையே தாங்க முடியாத ஆனந்தமாகும் என்றார்.

. பேர்ஆனந்தம் பெற அந்நிலை இரகஸ்யம் தெரியவேண்டும்.

. ஆனந்தத்தைத் தெரிவிக்கும் இரகஸ்யம் ஆனந்த இரகஸ்யம்.

*******

856) உடலில் பரம்பொருளைத் தாண்டி, ஜடத்தில் பரம்பொருளுண்டு. அதுவே நம் ஜீவனின் அஸ்திவாரம். ஜடத்திலும் பரம்பொருள் தன்னை வெளிப்படுத்தும்.

ஜடத்திலும் பரம்பொருள் தன்னை வெளிப்படுத்தும்.

. பரம்பொருள் இல்லாத இடமில்லை.

. எல்லாமே பரம்பொருள்.

. மனிதன் பேசுகிறான்.

. பேச்சு தோற்றம், மனிதன் பரம்பொருள்.

. பரம்பொருள் என்ற மனிதன் பேச்சாகக் காட்சியளிக்கிறான்.

. பரம்பொருள் மனிதனில் பேச்சாக வெளிப்படுகிறது என்பதை,

. பேச்சே பரம்பொருள் எனக் கூறலாம்.

. உடல் என்பது ஆழ்மனம் subconscient.

. அதைக் கடந்த நிலை Inconscient ஜடம்.

. Inconscient என்ற ஜடத்தைக் கடந்த நிலை சிருஷ்டியிலில்லை.

. நம் உடல் ஆழ்மனத்தாலானது என்றாலும் உண்மையில் ஜடத்தால் ஆனது.

. அதுவே நம் ஜீவனின் அஸ்திவாரம்.

. அதுவே சிருஷ்டியின் அஸ்திவாரம்.

. அந்த அஸ்திவாரத்திலுள்ளது பிரம்மம், பரம்பொருள்.

. பரம்பொருள் எங்கிருந்தாலும், எவ்வளவு ஆழத்தில் ஒளிந்து இருந்தாலும், தன்னை வெளிப்படுத்தியபடியிருக்கும்.

. வெளிப்படும் பரம்பொருள் செயல்படும் லோகத்திற்கேற்ப வெளிப்படும்.

. வாயில் சொல்லாக வெளிப்படும் பரம்பொருள் மனத்தில் எண்ணமாக வெளிப்படும்.

. பரம்பொருள் இல்லாத இடமில்லை.

. அது வெளிப்படாத நேரமில்லை.

. வெளிப்படும் ரூபம் வெளிப்படும் லோகத்தைப் பொருத்தது.

. எதைப் பார்த்தாலும் அது பரம்பொருளின் வெளிப்பாடு என அறியவேண்டும்.

. அவை பரம்பொருளே என அறியவேண்டும்.

. ரூபத்தைக் கடந்து பரம்பொருளைக் காண்பது திருஷ்டி.

. திருஷ்டியை, அதன் இரகஸ்யத்தை அறிவது விவேகம்.

. அறிந்ததை உணர்வது அடுத்த கட்டம்.

. நன்றியறிதல் நல்லுணர்வு.

. நன்றியறிதல் புல்லரிக்கும்.

. புல்லரிக்கும் நல்லுணர்வான நன்றியறிதலை எந்நேரமும் உணர்வது ஜடத்திற்குரிய பரம்பொருள்.

தொடரும்...
 


 

ஜீவிய மணி

உயர்விலும் சரிவு உள்ளது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

"இறைவன் திருவுள்ளம் நிறைவேறட்டும்; என் விருப்பம் வேண்டாம்''என்பது மேல்மனத்தை ஆழத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் சக்திவாய்ந்த மந்திரம். நமக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேறவேண்டும் எனும்பொழுது அதைத் தவிர்த்து, இதை மேற்கொண்டால், இம்மந்திரம் மிகச்சக்தி வாய்ந்ததாகப் பயன்படும்.

திருவுள்ளம் திருப்தியானால் பிரச்சினை தீரும்.


 


 


 



book | by Dr. Radut