Skip to Content

10. முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

முன்னேற்றம் தரக்கூடிய சாதனை
(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

HARMONY - சுமுகம் :
 

சுமுகம் என்பது சத்தியஜீவியத்தைச் சேர்ந்தது என்று ஸ்ரீ கர்மயோகி அவர்கள் கூறியிருக்கின்றார்கள். சுமுகம் இருந்தால் வெற்றி நிச்சயம் என்றுகூடக் கூறலாம். ஒரு தனி மனிதனோ, குடும்பமோ, organisationனோ முன்னேறியிருக்கிறது என்றால் அதன் பின்னணியில் சுமுகம் நிச்சயமாக இருக்கும். சுதந்திரத்திற்கு முன்பாகப் பல குறுநில மன்னர்களுக்கிடையே தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருந்த பூசலால் இந்திய நாட்டின் வளர்ச்சி தேங்கிக் கிடந்தது. அந்த நிலையிலே அன்னியப் படையெடுப்பு அவசியமாகி, நாடு ஒற்றுமைப்பட்டு, சுதந்திர இந்தியா வெளிப்பட வகை ஏற்பட்டது.
 

அதேபோல் ஒரு கம்பெனியில் நிர்வாகத்திற்கும், தொழிலாளர்-களுக்குமிடையே சுமுகம் இருந்தால், அந்தக் கம்பெனி தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காணலாம். அப்படியில்லாமல் எப்பொழுதும் கொடி பிடிக்கும் நிலையிலுள்ள கம்பெனி விரைவில் மூடப்படுவதையும் காணலாம். ஒரு நாட்டிற்கு, ஒரு organisationக்கு எந்தச் சட்டமோ அதுவேதான் ஒரு தனி மனிதனுக்கும்.
எந்தவொரு கம்பெனி, societyயின் எதிர்பார்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனுடன் இணைந்து செயல்படுகின்றதோ,அந்தக் கம்பெனியின் விற்பனை (turn over, sales) பெருகிக் கொண்டு போவதை நாம் காணலாம். அதாவது அந்தக் கம்பெனி has related its harmoniously with the society என்று கூறலாம்.

கல்வித் துறையை எடுத்துக்கொண்டால், நாடெங்கிலும்
ஆயிரக்கணக்கான கல்வி நிலையங்கள் இருந்தாலும், சமூகம் (குடும்பம்) தங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வி வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுகின்ற கல்வி நிலையங்கள் கூடுதல் fees வசூலித்தாலும், அங்கு admissionக்குப் பெரிய க்யூ (Q) நிற்பதைப் பார்க்கலாம். இதை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது Government பள்ளிக்கூடத்தின் நிலை என்ன? இதையே வேறுவிதமாகக் கூறினால், எந்த நிறுவனம் (society) சமூகம் எதிர்பார்க்கின்ற பண்புகளைக் (values) கடைப்பிடிக்கின்றதோ, அதற்கு வரவேற்பு அதிகமாகவும், மற்றவற்றிற்குக் குறைவாகவும் இருப்பதை நாம் காணலாம்.
 

ஸ்ரீ கர்மயோகி அவர்கள், "நாம் சுமுகத்தின் முக்கியத்துவத்தை அறியவில்லை, அனுபவிப்பதில்லை'' என்று கூறுகின்றார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் முன்னேறுவதற்குச் சுமுகம் மிகவும் அவசியமான ஒன்று. அழகாகப் பழகுவது நமக்குச் சுமுகம் எனப் பெயர். அது நல்லது. ஆனால் சாதிக்கும் திறன் அற்றது. உள் உணர்விலிருந்து எழுகின்ற சுமுகமே உண்மையான சுமுகம். எனக்கு என் குடும்பத்தின் சுமுகம் முக்கியம். அதற்காக நான் எதையுமே சந்தோஷமாக, எரிச்சல், எதிர்பார்ப்பு, மனக்கசப்பு இல்லாமல் விட்டுக்கொடுக்கின்றேன் என்ற மனநிலை அந்தக் குடும்பத்தை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அப்படிப்பட்ட சுமுகம் உண்மையாகப் பிறர் மீதுள்ள நல்லெண்ணத்தால் ஏற்படும் சுமுகமாகும். அந்தச் சுமுகம் வாழ்வில் சாதிக்கும் திறனுடையது.
 

ஆன்மீகத்தில் சுமுகம் என்பது முக்கியமாக நம்முள்ளிருந்து எழும் சுமுகமாகும். அதாவது நம்முடைய ஆன்மீக ஆர்வத்திற்கு நம்முடைய personality முழுமையாகக் கொடுக்கும் ஒத்துழைப்பு ஆகும். நம்முடைய எண்ணம், உணர்வு, செயல், கரணங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இறைவனை நோக்கி முன்னேற எடுக்கும் முயற்சியாகும். நம்முடைய தாழ்ந்த பாகங்கள், குணங்கள், எண்ணங்கள் வெளிவந்து நம்மைத் தொந்தரவு செய்யுமானால் ஆன்மீக முன்னேற்றம் அந்த அளவுக்குப் பாதிக்கப்படும். நம்முடைய இலக்கை எட்டும் காலமும் நீண்டுவிடுகிறது. அன்னை சுமுகம் என்று ஒரு மலருக்குப் பெயரிட்டு இருக்கின்றார்கள். அதைத் தினமும் சமர்ப்பணம் செய்து வழிபட்டால் அங்கு சுமுகம் ஓங்குவதைக் காணலாம்.

***

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

ஒரு சிலரைத் தவிர, அன்னையை நாடி வருபவர்களில் மற்றவர்கள் கடைசிவரை அன்னையோடிருப்பதில்லை. கடைசிவரை இருப்பவர்கள் அன்னையிடம் நெருங்கி வந்து அவர் இதயத்தில் தங்கிவிடுவார்கள். மற்றவர்கள் விலகி விடுகின்றனர். அவர்களில் சிலர், அன்னையை மறந்து விடுகிறார்கள். யாரோ ஒரு சிலர் அன்னையிடமிருந்து பெற்றதையும் விட்டுவிடுகிறார்கள். இவர்களில் ஒருவரைக்கூட அன்னை மறப்பதில்லை. எந்த அளவில் தொடர்பு நிற்கின்றதோ, அதே அளவில் அருள் செயல்படுகிறது.
 

விலகியவர்கள் அன்னை மூலமாக வந்த செல்வத்தை இழப்பது இல்லை. ஏற்கனவே தானே வந்த பெருஞ்செல்வத்தை இப்பொழுது பெற அதற்குரிய உழைப்பைக் கொடுத்துப் பெற வேண்டியிருக்கும்அது வாழ்க்கைக்குரிய போராட்டமாக இருக்கும்.
 

அன்னையை மறந்தவர்கள் ஏதோ ஒரு சமயம் மீண்டும் அன்னையை நினைவுபடுத்தும்பொழுது அருள் முன்போல் மழையாகப் பொழிந்து செயல்படுவதைக் காணலாம். அருளை வீசி எறிந்தவர்கள் மீண்டும் அதை அடைய அதற்கே உரிய பிரம்மப்பிரயத்தனத்தை மேற்கொண்டு கண்ணால் இரத்தம் சொரிய வேண்டியிருக்கும்.
 

வலிய விலகியவருக்கும் வழங்கும் அருள்.


 


 



book | by Dr. Radut