Skip to Content

12. அன்றைய தோல்வி, இன்றைய வெற்றி

 அன்றைய தோல்வி, இன்றைய வெற்றி

கர்மயோகி

"என் அம்சம் தரித்திரம். நான் தொட்டதெல்லாம் கரியாகும்''என்று வாழ்நாள் முழுவதும் உணர்ந்தவர், அன்னையிடம் வந்தபின் காரியங்கள் கூடிவருவதையும், பிறர்க்குப் பலிக்காதது அவருக்குப் லிப்பதையும், தம் வாழ்வில் அதிர்ஷ்டம் பிறந்துவிட்டதையும் காண்பது அநேகர் அனுபவம். அனைவருடைய அனுபவம் என்பது என் அனுபவம்.

அது உண்மையானால் அதற்கடுத்த உண்மையுண்டா? அதற்கு எதிரானது உண்மையா?
 

1) அதற்கடுத்த உண்மை, அன்றைய தோல்வி, இன்றைய வெற்றி.

2) அதற்கெதிரானது அன்பர், "எனக்கு எல்லாம் பலிக்கிறது. ஒரு விஷயம் மட்டும் பலிக்க மறுக்கிறது' என்பது. மேலும், "வந்த புதிதில் எல்லாம் லித்தது. இப்பொழுது எதுவும் பலிக்கமாட்டேன் என்கிறது' என்பதும் அன்பர் அனுபவம்.

ஒரு விஷயம் பலிக்கவில்லை என்பவர் அவ்விஷயத்தில் அவர் தம் சுபாவத்தை வயுறுத்துகிறார், மனம் மாற மறுக்கிறார் என்று பொருள். "எதுவும் பலிக்கமாட்டேன் என்கிறது' என்பவர் பிரார்த்தனை பலிப்பதைக் கண்டவர், எதிரியழியப் பிரார்த்தனை செய்து, மகிழ்ந்து, தொடர்ந்தால்,அதன்பின் அவர் அன்னையை விட்டு விலகுவார்; எதுவும் பலிக்காது.

அன்னையை அறிந்தபின் வாழ்க்கை மாறிவிட்டது; தோல்வி
என்பதேயில்லை. நான் திறமையாக வேலை செய்து ஜெயித்தபின், என் வெற்றி என்னை வந்து சேரவில்லை என்பது பலர் அனுபவம். அது பழைய அனுபவம். இப்பொழுது அது மாறிவிட்டாலும், ஏற்கனவே பெற்ற தோல்விகள் மனதை உறுத்தும். பிரார்த்தனையாலும் அவை முழுவதும் போகாது என்பதை "உறுத்தல்' என்ற கட்டுரையில் எழுதுகிறேன். இது என் மனத்தை ஆட்கொண்ட பிரச்சினை. இதற்குரிய விளக்கம் எனக்குத் தெரியும். விளக்கம் நிலைமையை மாற்றாது. நீண்டநாளாக என் மனதிலுள்ள கருத்து. சாவித்திரி இதை ஆமோதித்தும், மறுத்தும் பேசுகிறது.


 

Knowledge is Power ஞானமே சக்தி என்பது ஸ்ரீ அரவிந்தம். நமக்குப் பிடிபடாத விஷயத்தில் நமக்குத் தெளிவான ஞானமிருக்காதுதெளிவு பெற்றவுடன் நிலைமை மாறும்.

  • நம் எதிரிகள் உடன்பிறந்தவர்களாகவும், நண்பர்களாகவும், குரு ஸ்தானத்திலும், சிஷ்யர் உறவிலும் இருந்தால், அவர்கட்கு நம் மீதுள்ள வெறுப்பு நம்மை அழித்துக் கைதட்டிச் சிரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மீறி அவர்கட்கு நாம் முனைந்து நல்லது செய்ய ஆரம்பித்துத் தோல்வியடைகிறோம். அன்னை இதைச் சிறுபிள்ளைத் தனம் என்கிறார். பிறர் கர்மத்தை நாம் ஏற்கக்கூடாது என்கிறார்.

இந்த இடத்தில் சிரமப்படுபவர் குறைவு, மிகக் குறைவு.
 

இதில் தோல்வியுறாதவரைக் காண முடியாது.
 

அந்தச் சட்டத்திற்கும் விதிவிலக்குண்டு.
 

தனக்கு அருள் தரும் பெரிய அதிர்ஷ்டத்தை இழந்து எதிரிக்குச் சிறு
பலன் தர முயன்று வெற்றி பெறுவதாகும்.
 

அன்னையை அறிவதன் முன் நிதானமில்லாமல், பொறுமை இல்லாமல், முன்யோசனையில்லாமல், இழந்தவற்றை நினைத்து மனம் பொருமுவது இப்பொழுது குறைந்து, நீங்கும். கல்லூரியில் முதல்வனாக வர முயன்று இழந்தது நிலை மாறி இன்று செய்யும் காரியங்களில் முதல்வனாக வருவதைக் காணலாம். 25 ஆண்டுகட்குமுன் கோவாப்பரேட்டிவ் பாங்கில் வேலை செய்து, அகில இந்தியாவில் முதன்மை பெற்றவர் ஓய்வெடுத்த பின், அன்று அன்பரை வழியில் கண்டு பேசி மகிழ்ந்த பின், அந்த நிறுவனம் அவரை அழைத்து விழாக் கொண்டாடி, விருது அளித்தது. நெடுநாள் முன் தோற்ற காரியத்தில் இன்று அன்னையை ஏற்றதைப் போல், அன்று ஏற்றிருக்க முடியும் என்ற தெளிவு பூரணமாக ஏற்பட்டால், அதன் நிலைமை மாறி  அன்று பெற்றிருக்க வேண்டிய விருது, பாராட்டு, பதக்கம் இன்று வரும் என்று மனம் தெளிவாக ஏற்றபின், அறையிலிருந்து வெளியே வந்தேன். ஒரு செய்தி எனக்குக் காத்திருந்தது. பழைய விஷயங்கள் மாற வேண்டும் என்பது அவசியமில்லை. அவை மாற முடியும் என்பது அன்னை கூறும் உண்மை என மனம் தெளிவு பெற்றது.

ஆங்கில உரைநடையில் பெயர் பெற்றவர் அடிசன், ஸ்டீல்,மேத்தியூ ஆர்னால்ட். அவர்கட்கெல்லாம் சிகரமானவர் மில்டன். பேராசிரியர்கட்கு அவர்கள் எழுதியது பரிச்சயம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் உரைநடையுடன் அவற்றை ஒப்பிடும் அளவுக்கும் அவை உயர்ந்தவையல்ல என எளிமையாக அறியலாம். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு நோபல் பரிசு தவறியது அவர்கட்கு தகுதியில்லாமல்லை. அபரிமிதமான தகுதி பெற்றவர்கள் என்பது வெள்ளிடைமலை. இது என் மனத்தை உறுத்தும் விஷயங்களில் முக்கியமானது. யோகச் சட்டப்படி மனத்தில் உறுத்தல் இருப்பது தவறு. என் முயற்சிகளால் உறுத்தலின் வேகம் குறைந்தது, விலகவில்லை. நான் இவ்விஷயத்தில் தெளிவு பெற்று, அறையிலிருந்து வெளிவந்தபொழுது எனக்காகக் காத்திருந்த செய்தி,

நோபல் கமிட்டி மகாத்மாவுக்குப் பரிசு தராதது

சரியில்லை என அக்கமிட்டியே கூறிய செய்தி

இன்டர்நெட்டிலிருந்து எடுக்கப்பட்டு எனக்கு வந்தது.

  • அன்னை அருள் நிகழ்த்தாத அற்புதமில்லை.

நடக்காதது அவ்வருளால் நடக்கும் - அதற்குரிய நிபந்தனை

மனித மனத்தால் முடியாத நம்பிக்கை ஞானமாக அங்கு எழ வேண்டும்.

  • நடக்காதது நடக்க, முடியாதது முடிய வேண்டும்.
  • முடியாதது முடிய அன்னையை மனம் முடிந்த உயரத்தில் ஏற்க வேண்டும்.

முடிந்ததெல்லாம் முடித்தவர்க்கு முடியாததெல்லாம் முடியும்.

அவருக்கு நடக்காததெல்லாம் நடக்கும்.

நடக்காதது நடப்பது அன்னையின் அருள்.

***
 


 



book | by Dr. Radut