Skip to Content

14. சாவித்ரி

 

சாவித்ரி
 

P. 87 This bizzare kingdom passed into his charge.

இக்குழப்பமான ராஜ்யம் அவன் உரிமையின் வாரிசாயிற்று.  

  • வளரும் பிரியம் விலகும் நடைமுறை.
  • அவளுடைமையும், உரிமையும், சக்தியும், தர்மமும் பிரம்மாண்டம் ஆனவை.
  • தயக்கமான அர்ப்பணம் தன்னை மீறிய சந்தோஷம்.
  • தன்னையே கொடுத்துப் பூரித்தாள். அடுத்தவர் பயன் அவள் இலட்சியம்.
  • ஆழ்ந்த முறைகள் தடம் மாறும். அந்நிலை அவளுக்கில்லை.
  • சிருஷ்டிப் பயனைத் தேடிப் பிடித்தாள்.
  • தான் சேவை செய்த கொடுமைக்கு எதிரானாள்.
  • அவள் கோபாக்கினியின் மெஷின், சூட்சும அழிவுக்கருவி.
  • எந்த வகையிலும் செயல்படும் அவள் சக்தி ஆபத்தான குணமாக வெளிவரும்.
  • ஆத்மசேவைக்கு அவள் சரணடைந்தாள்.
  • ஆத்ம உறுதிக்கு அவள் அடங்கினாள்.
  • அவள் எதேச்சாதிகாரம், அதன் தலைவனுக்குக் கட்டுப்பட்டது.
  • பிரம்மத்தின் கோட்டையுள் அது தாக்கப்பட்டு, ஆச்சரிய அதிர்ச்சி எழுந்தது.
  • அரசனாக எழுந்து அவளை ஆதிக்கம் செய்கிறான்.
  • அடிமை கொத்தடிமையாகப் பூரணத்தில் பூர்த்தி பெறுகிறான்.
  • தோல்வியின் பூரிப்பு அவளைக் காந்தமாக இழுத்தது.
  • பூட்டிக் கிடந்த பொக்கிஷமான விவேகம் கொள்ளை போயிற்று.
  • அகண்டத்தின் கண்டம் புதிரென எழும்பியது.
  • கண்ணுக்குத் தெரியாத சக்தி ராஜ்யத்தின் எல்லையாகும்.
  • புவியைக் கடந்த புதுமையின் வாயிலில் துவாரபாலகன்.
  • சொர்க்கத்தின் பிரவாகம் அவள் கால்வாயால் பாய்ந்தது.
  • ஞானதிருஷ்டியின் இராஜப்பாதையைக் கடந்து சென்றான்.
  • பளபளக்கும் புதுப் புது விஷயங்களைக் காணும் நெடுஞ்சாலை.
  • அது அறியமுடியாத உலகின் அற்புதம்.
  • அதன்பின் சொல்லுக்கு அகப்படாத தரிசனம் நின்றது.
  • அவளுடைய ஆட்சி புதிரான புத்துணர்ச்சியாலானது.
  • அவள் காலடியில் சிங்கநாதம் மண்டியிட்டது.
  • எதிர்காலம் கதவின் பின்னே கண்மூடி உறக்கத்திலாழ்ந்துளது.
  • ஆத்மாவின் அடிச்சுவடுகளில் நரகத்தின் பாதாளம் வாயைத் திறக்கிறது.
  • ஆண்டவன் உறையும் மலைச்சிகரம் அழைக்கிறது.
  • முடிவற்ற முயற்சி உயர்ந்த எண்ணங்களைப் போராடிப் பெறுகிறது.
  • வீரனின் தீரம் அலுக்காமல் அழைப்பின் குரலைக் கேட்கிறது.
  • ஏராளமான குரல் காதில் இனிமையாக ஒலிக்கின்றன.
  • கோடிக்கணக்கான பேர் கடந்து சென்று மறந்தனர்.
     


     

    ஸ்ரீ அரவிந்த சுடர்


    நீண்ட - நெடிய - கடினமான பாதையாக நாம் அறிவதே சுருக்கமான வழி.


     

    நீண்ட வழியே சுருக்கமான வழி.
     


     

 



book | by Dr. Radut