Skip to Content

15. யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

 யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)
 

கர்மயோகி
 

90. அளவுக்குமீறிச் சாப்பிடாதே.

Self-control தன்னடக்கம் ஒருவனை மனிதனாக்கும். அது இல்லாதவன் அதிகமாகப் பேசுவான், அதிகமாகச் சாப்பிடுவான், அதிகச் சோம்பேறித்தனமாக இருப்பான். எந்த விஷயத்தில் கட்டுப்பாடு இல்லை என்றாலும் அது lack of control நிர்ணயமற்றவராகும். ஆனால் ஒவ்வொரு விஷயத்திற்கும் வரும் தவறானபலன் அதன் முத்திரையைத் தாங்கிவரும். 22 தோசை சாப்பிடுவது பசிக்கன்று; ருசிக்கும் அல்ல; வயிறு கனப்பது தரும் சந்தோஷத்திற்காக. பசி அடங்கியபிறகு ருசிக்குச் சாப்பிடுவது சரியில்லை; ஆனால் சாப்பிடுவதுண்டு; அது புலன் உணர்வு (for the delight of senses). வயிறு கனப்பது ருசிக்கிறது, திருப்தியாக இருக்கிறதுஎனில், அது உடல்உணர்வு. மனிதன் உணர்வுமற்ற மரக்கட்டை (physical hulk) என்றாகும். அப்படிச் சாப்பிடுபவனுக்குப் பொதுவாக அதிர்ஷ்டம் இருந்தால் நிலைமை மாறி சாப்பிட முடியாமற்போகும். அது நல்ல திருப்பம். அவன் துர்அதிர்ஷ்டசாலியான என ஆயுள் முழுவதும் வசதியாக, அளவுகடந்து சாப்பிடும் நிலைமை ஏற்படும். மனிதன் இதை துர்அதிர்ஷ்டம்என அறியாமல் விரும்புவான். சாப்பிட முடியாத நிலை பல வகைகளில் வரும்:

  • சாப்பிட முடியாத ஒரு வியாதி வரும்.
  • சாப்பாடு போடாத மனைவி வருவாள்.
  • அதிகமாகச் சாப்பிட்டால் கேலிசெய்யும் சந்தர்ப்பம் நிலையாக வரும்.
  • பிடித்தமான சாப்பாடு கிடைக்காது.
  • எப்படி வந்தாலும் இது ஆத்மாவுக்குரிய அதிர்ஷ்டம்.
  • அளவு மீறிச் சாப்பிடுவது வாய்விட்டுப் படிப்பதைப்போல அநாகரீகமான செயல். வாய்விட்டுப் படிப்பவன் புரியாது மனப்பாடம் செய்வான்; மடமை வளரும். அளவுமீறிச் சாப்பிட்டால் உடல் பெருக்கும், உணர்ச்சி மந்தமாகும், ஆத்மா இருளடையும், பர்சனாலிட்டி (coarse) மட்டமாகும்.
  • அளவுக்குமீறிச் சாப்பிட்டுப் பெருத்தால் (obese) அதற்குரிய வியாதிகள் வரும்.
  • அளவுக்குமீறிச் சாப்பிடுபவர் பொதுவாக மந்தபுத்தியுடையவராக இருப்பார்கள்.
  • சைத்திய புருஷனை அவர்கள் நினைக்கவே முடியாது.
  • ஆத்மாவே அவர்கட்கு நினைவு வாராது.

இடைவிடாமல் சாப்பாடு, குழம்பு, இனிப்பு, பாயசம், வடை,அப்பளம், பிரியாணி மனத்தை நிரப்பும்.

  • அவர்கள் இரண்டுகால் பிராணியாக இருப்பார்களேதவிர மனிதகுலத்து உறுப்பினர்களாக இருக்கமாட்டார்கள்.
  • "பெருந்தீனி' என்பது வழக்கு.

91. பொங்கிவரும் சந்தோஷம் இயல்பாக வேண்டும்.

சாதாரண மனிதன் நிலை சந்தோஷமில்லாத நிலை.

பலருக்கு விரக்தியிருக்கும். சிலருக்கு எதுவுமிருக்காது.

சந்தோஷத்தை உற்பத்திசெய்ய முயன்றால் விரக்தியோ, எரிச்சலோ
வளரும்.

எரிச்சல் உள்ளவர் எரிச்சலைப் போக்க ஆயுள் போதாது; சமர்ப்பணம் செய்யும்.

Supreme ecstasy உச்சக்கட்டப் பூரிப்பு வந்தால் அது 3
நிமிஷமிருக்கும். அத்துடன் மீதி நாள் முழுவதும் அதற்கெதிரான லி, எரிச்சல், விரக்தி இருக்கும் என்கிறார் அன்னை. அந்த நிலையிலிருந்து தானே சந்தோஷம் உள்ளிருந்து எழ நாம் செய்யக்கூடியது ஒன்றில்லை. அது தானே வர வேண்டும். 40 வயதிற்குமேல் நாய்க்குணம் என்பது மனிதகுலத்தின் நீண்டநாள் அனுபவம்.

அன்னை, சமர்ப்பணம், அருள், சரணாகதி, சேவை, பேரருள்,
காணிக்கை ஆகியவையுள்ள அன்பர் தாம் செய்யக்கூடியவற்றை எல்லாம் செய்யும் முன் பொதுவாக மனம் சந்தோஷமாக இருப்பதைக் காணலாம். இது அன்பர்க்கு மட்டும் உரிய அரிய வாய்ப்பு. அன்னையை அறிவதால் இதைப் பயிற்சியாலும், பக்குவத்தாலும், பவித்திரத்தாலும் பொங்கிவரும் சந்தோஷமாக மாற்றலாம்.

ஒரு சிலருக்குச் சந்தோஷம் பொங்கிவந்தால் அவருலகம் முழுவதும் வருத்தத்திலாழ்ந்துவிடும். அது அவர் இராசி, அவர் கொண்ட இலட்சியம். எவரும் சந்தோஷப்படக்கூடாது என்ற கொள்கையுடையவர். வேறு சிலருக்குச் சந்தோஷம் பொங்கிவந்தால் அவருடன் உள்ள
அனைவரும் அதையே உணர்வர்.

நாமுள்ள நிலைமைக்கும் சந்தோஷம் பொங்கிவரும் நிலைக்கும் உள்ள தூரம் சாதாரண மனிதனுக்கும், ஜனாதிபதிக்கும் உள்ள தூரம்.

சமர்ப்பணம், அதுவும் தொடர்ந்த சமர்ப்பணம், அதையும் செய்யும்.

அது பலித்த பின் அது இயல்பாக வேண்டும்என்பது அடுத்த உயர்ந்த கட்டம்.

ஒருவர் ஜனாதிபதியாகலாம். அவரே வாழ்நாள் முழுவதும்
ஜனாதிபதியாக இருக்க முடியுமா?

அதுபோன்ற சாதனை சந்தோஷம் இயல்பாக இருக்க வேண்டும் என்பது.

நம் ஜீவனின் ஆழம் இருண்டது. அதற்குச் சந்தோஷம் ஒத்துவாராது.

நமக்குச் சந்தோஷம் எழுந்தால், ஆழம் எதிர்க்கும், எதிரானவற்றைச் செய்யும்.

இயல்பாகச் சந்தோஷமாக இருக்க இயல்பாக ஆழ்ந்தமனம் நல்லதாக, ஒளிமயமானதாக இருக்க வேண்டும்.

அது திருவுருமாற்றம்.

நாம் அதை நோக்கிப் போகலாம்.

அதை இலட்சியமாகக் கொள்ளலாம்.

அவ்வளவு உயர்ந்த நிலையை இலட்சியமாகப் பெறுவதும் பாக்கியம்.

இலட்சியமாக மனம் ஏற்று, அதில் சிறு துளி பலிப்பதும் பெரியது.

சாதாரணக் குடிமகன் மத்திய மந்திரி சபையில் ஒரு கூட்டத்திற்கு விசேஷ அழைப்பாளராக வந்தது போன்ற நிலை அது.

92. கோள் சொல்லக்கூடாது.

ஆபீஸ் வாழ்வில், அரசியல் தலைமையில், பெரிய குடும்பத்தில் கோள் சொல்வது பரம்பரையான பழக்கம்.

தலைவர் கோள் சொல்வதைக் கேட்டுக்கொள்ளமாட்டார் என்பது அரிது. அது சமயம் அவருக்குச் செய்தியைத் திரித்து அனுப்ப முயலும் திறமை மனிதத் திறமைகளில் (negative) பெரியது.

கீழிருந்து செய்தி வாராமல் பெரிய நிர்வாகம் செய்ய முடியாது.

அது கோள் சொல்வதை வளர்க்கும்.

இந்த இரண்டு நிலைமைகளையும் பாஸிட்டிவாகச் சமாளிக்க, நிர்வாகத்தின் பெரிய நேர்மையான தலைமைக்குப் பொருத்தமான வழிகள் உள்ளன.

அன்னையை மட்டும் நம்பினால், கோள் நம்மிடம் வாராது.

சிறுவர் கோள்என அறியாமல் செய்திகளைக் கூறுவர். வயதான பின்னும் விதரணையற்றவர் எதைச் சொல்வதுஎனத் தெரியாமற் பேசுவர்.

கோள் சொல்வதில் ஆதாயம் தேடுபவர், கோள் சொல்வதில்  பிரியமுள்ளவர், நான் இங்கு எடுத்துக்கொள்வது.

நாம் சொல்லியது நமக்கே அன்னையிடம் உடனடியாகப் பலிக்கும் என்பதை இவர்கள் பார்த்தால் பயந்துவிடுவார்கள். அது தெரியாதது மடமை. கோள் என்பது இல்லாத சௌகர்யத்தைப் பொய் சொல்லிப் பெற முயலும் பழக்கம் - அது தவறு, அல்பம், அசிங்கம் என உணர்வது அன்பராவது. "இந்தச் செய்தி மேலே போகக்கூடாது'' என்று நினைப்பவர் ஆபீசில் வேலைக்கு லாயக்கற்றவர்; குடும்பம் அவருக்கு ஒத்து வாராது. அது அநாகரீகம்என்று அறியாதவர் மனம் மாற வேண்டும்.

இதையே தொழிலாக உள்ளவர், செய்தி சேகரம் செய்பவர் மனநிலை கூலிக்காரன் மனநிலைக்குத் தாழ்ந்தது.

அத்தனை பேரும் அப்படித்தானேயிருக்கிறார்கள்என நினைப்பது நல்லதன்று. அதிலும் சற்று யோசனை செய்தால், நாம் அவர்களைவிட மட்டமாக இருப்போம்.

  • கோள் சொல்ல முடியாதவன் மனிதன்.
  • பிறர் சொல்லும் கோளைக் கேட்க மறுப்பவன் உத்தமன்.
  • எவரும் அதுபோல் மாறமுடியும்.
  • மாற விரும்புபவர்க்கு அன்னை அமுதசுரபி.
  • மாறவேண்டாம்என நினைப்பவரிடம் நமக்குப் பேச்சில்லை.
  • நமக்கு நாம் மட்டும் பிரச்சினை, பிறரல்லர்.
  • குறைந்தபட்சம் கோள் எப்படி நம்மைப் பாதிக்கிறதுஎன அறிந்து, அத்தவற்றிலிருந்து விலகுவது முறை.
  • கோள் சொல்பவருக்கு அடையாளம்: பிறர் கோள் சொல்வதாக நினைப்பார்கள், பேசுவார்கள்.

93. காணிக்கை

காணிக்கை நம் பரம்பரையில் சிகரமானது.

நடைமுறையில் எதுவும் முடியாதவர்க்குரிய எளிய முறை.

அரெஸ்ட் வாரண்ட்டிருந்து தப்பியபின் காணிக்கையை "நீங்களே கொடுங்கள்''எனத் தப்ப உதவியவருக்குச் சொல்லியது ஒரு பெரிய ஆத்மா.

$10 காணிக்கை கொடுக்க மறுத்து $30 மில்யன், ரூ.800 கோடி திட்டத்தை இழந்தவர் ஓர் அமெரிக்கர்.

பலன் வரும்வரை காணிக்கையின் அவசியத்தைப் பேசியவர், பலன் வந்தபின் "அவ்வளவு பெரிய மனம் எனக்கில்லை'' என்றார்.

Water Diviner போர் முதலியாராவது வீராப்பாகப் பேசியபின் நடைமுறையைக் கண்டு இரண்டு மாத வருமானத்தைக் காணிக்கையாகக் கொடுத்து முழுப்பலன் பெற்றார். சாதுர்யமாகக் காணிக்கையிலிருந்து தப்ப முயல்வது அன்னை வேண்டாம் என்பது.

அன்னையின் அருள் எவர்மூலமாக வருகிறதோ அவரை மனத்திலிருந்தும், செயலிலிருந்தும், தம் வாழ்விலிருந்தும் விலக்க எண்ணிக் காணிக்கையைப் பெரிய அளவில் வேறொருவர் மூலம் கொடுக்க முயன்ற அன்பர் காணிக்கை, வீட்டில் பூகம்பம் எழுப்புவதைக் கண்டார். உரியவரை விலக்கினால் அதற்கெதிரான hostile force தீயசக்தி வரும் என்பது சட்டம்; ஒருவருக்குப் பேய் மனைவியாக வந்தது; அடுத்தவருக்கு அன்னைமூலம் வந்த அத்தனையும் அழிந்தது; உயிரையும் மாய்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

  • அன்னையை அருளாக நினைத்தால் பேரருளாவார்.
  • அன்னையை ஆதாயமாக நினைத்தால் ஆதாயம் வரும்; அன்னை விலகுவார். முடிவில் ஆதாயம் விலகும்; முடிவாக ஆதாயம் நஷ்டமாகும்.
  • அன்னையின் இரகஸ்யம் மனத்தின் உண்மையிலும்,அடக்கத்திலும் இருக்கிறது.
  • அடுத்தவரை அண்டி வாழவும் தகுதியற்றவர், அவர்தம் ஆதிக்கத்திற்குட்பட வேண்டும் என்ற கனவு கண்டால், கனவு தலைகீழே தவறாது பலிக்கும்.
  • காணிக்கை எளிய முறை; பவித்ரமானது.
  • பவித்ரமான மனத்துடன் காணிக்கை செலுத்துவது சரி.
  • குள்ளநரி உள்ளம் பள்ளம் பறிக்கும்.
  • அன்னை வாழ்வுமூலம் செயல்படுவார்.
  • அன்னையிடம் நம் தில்லுமுல்லுகளைக் காண்பித்தால் அன்னை நம்மை வாழ்விடம் ஒப்படைத்துவிடுவார்.
  • வாழ்வு தரும் தண்டனை வாள்வீச்சு போலாகும்.
  • அன்னை தம் அருளைப் பேரருளாக்கி அவர் பிரசாதத்தை நமக்கு அளிக்கும்பொழுது அவர் அஞ்ஞானத்திற்கு அளிக்கும் காணிக்கை விளங்கும். அது அதிஅற்புதம்.

தொடரும்....

***
 

டேபிள் கிளாத்

ஒரு பாதிரியார் பழைய சர்ச்சைப் புதுப்பித்தார். பெருமழை வந்து அவர் செய்த வேலைகளைச் சிதைத்தது. மனம் கசந்து விழாவுக்கு முன் ஓரளவு செப்பனிட முடிவு செய்து, ஒரு பழைய பொருள்கள் விற்கும் கடையில் டேபிள் கிளாத் ஒன்று வாங்கி வந்து ரிப்பேரான இடங்களை மறைக்கும்படிப் போட வந்தார். பனி பெய்கிறது. சர்ச்க்கு முன்னால் ஒரு பெண்மணி பனியில் நிற்கிறார். அவரை உள்ளே அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டு டேபிள் கிளாத்தை சுவற்றில் பொருத்தினார்.அப்பெண் டேபிள் கிளாத் அடியில் initials EBLC இருக்கிறதா என்றாள். அது இருந்தது. 35 வருஷங்கட்கு முன் ஹிட்லருக்கு பயந்து நாட்டை விட்டுத் தம்பதிகள் ஓடுமுன் வீட்டிலுள்ள பொருள்களை எல்லாம் விற்றனர். அதில் ஒன்று இந்த டேபிள் கிளாத். அப்பெண் இவ்விஷயத்தைப் பாதிரியாரிடம் கூறினாள். அவர் நெகிழ்ந்து அந்த டேபிள் கிளாத்தை அப்பெண்ணுக்குக் கொடுக்க முன்வந்தார். பெண் மறுத்துவிட்டாள். பாதிரியாருக்கு ஏதாவது அவளுக்குச் செய்யத் தோன்றியது. அவள் வீடு 20 மைலுக்கு அப்பால் என்றறிந்து தம் காரில் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இரண்டு நாள் கழித்து விழா இனிதே நடந்தேறியது. அனைவரும் கலைந்தனர். ஒருவர் மட்டும் போகவில்லை. பாதிரியாரை நோக்கி,

"எங்கே இந்த டேபிள் கிளாத்தை வாங்கினீர்கள்? இது 35 ஆண்டுகட்கு முன் நான் விற்ற பொருள்'' என்றார்.

பாதிரியார் "என்னுடன் வாருங்கள்'' என அவரைத் தம் காரில் அப்பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். 35 ஆண்டு பிரிவுக்குப் பின் கணவனும், மனைவியும் சேர்ந்தனர்.

பொருள்கட்கு ஜீவனுண்டு. கணவனும், மனைவியும் அந்த டேபிள் கிளாத்தைப் பிரியமாகப் பயன்படுத்தினர். அவர்கள் பிரிந்திருப்பதை டேபிள் கிளாத் சேர்க்க முனைந்து செயல்பட்டு வெற்றிகரமாகச் சேர்த்து விட்டது.

மனிதன் மறக்கலாம்; பொருள்கள் மறப்பதில்லை.
 

***

வைர மோதிரம்

  • ஸ்வீடன் ஓட்டல் 12 வயதுப் பெண் நீச்சல் குளத்தில் குளித்த பொழுது தரையில் ஒரு மோதிரம் இருப்பதைக் கண்டு, அதை எடுத்தாள்.
  • தான் கண்டெடுத்ததைத் தான் பெற வேண்டும் என அவளுக்குத் தோன்றவில்லை.
  • மோதிரத்திற்குச் சொந்தக்காரரைத் தேடிப் பிடிக்கும் வயதில்லை.
  • ஓட்டல் மேனேஜரிடம் மோதிரத்தைக் கொடுத்தாள்.
  • தானே எடுத்துக்கொள்ளாமல், பெண் அதை அவரிடம் தருவது மானேஜருக்கு வியப்பாக இருந்தது.
  • மோதிரம் வைர மோதிரம்.
  • பெண் டிரஸ் செய்துகொண்டு சாப்பிட உட்கார்ந்தாள்.
  • சாப்பாட்டின் பகுதியாக ஒரு ஆப்பிள் இருந்தது.
  • ஆப்பிளை வெட்டினாள்.
  • அதனுள் ஒரு வைர மோதிரம் இருந்தது.
  • நாம் இதை Life Response என்று கூறுகிறோம்.
  • Life அவளுக்கு ஒரு வைர மோதிரம் தர முடிவு செய்து,முதல் மோதிரத்தை அவள் கொடுத்துவிட்ட பின்னும் வற்புறுத்தி அடுத்ததைக் கொடுக்கிறது.

 

***


 



book | by Dr. Radut