Skip to Content

2. லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)


 

கர்மயோகி


 

XVII. The Divine Soul                                                 17. தெய்வீக ஆன்மா
 

These are the aspects of one Existence.

இவை ஒன்றான பிரபஞ்ச வாழ்வின் அம்சங்கள்.

The first is based upon Self-knowledge.

முதலில் கூறியது சுயஞானத்தின் அடிப்படையில் ஏற்பட்டது.

It can be understood in our human realisation.

மனித சித்தியால் அதைப் புரிந்துகொள்ள முடியும்.

The Upanishads give utterance to it.

உபநிஷதங்கள் அதைப் பற்றிப் பேசுகின்றன.

It is Self in us becoming all existences.

நம்முள் உள்ள பிரம்மம் எல்லாமாக மாறுவது அது.

The second is seeing all existences in the Self.

அடுத்தது அனைத்தையும் பிரம்மத்துள் காண்பது.

The third is described as seeing the Self in all existences.

மூன்றாவது பிரம்மத்தை அனைத்துள்ளும் காண்பது.

The Self becoming all existences is the basis of our oneness with all.

பிரம்மம் அனைத்துமாவது அனைத்துடனும் ஒருமை ஏற்படுவதற்கு அடிப்படை.

The Self containing all existences is the basis of our oneness in difference.

பிரம்மம் அனைத்தையும் தன்னுட்கொள்வது ஒருமையில் பன்மைக்கு அடிப்படை.

The Self inhabiting all is the basis of our individuality in the universal.

அனைத்துள்ளும் பிரம்மமிருப்பது பிரபஞ்சத்துள் தனித்தன்மை

உருவாவதற்குரிய அடிப்படை.

Our mentality is defective.

நம் மனப்பான்மை தவறானது.

It has a need of exclusive concentration.

அதற்கு ஒரு விஷயத்தை மட்டும் கவனிக்க வேண்டிய அவசியம் உண்டு.

It is compelled to dwell on any one of these aspects of self-knowledge.

சுயஞானத்தின் இந்த அம்சங்களில் ஒன்றை மட்டும் கருதும் அவசியம்

அதற்குண்டு.

That excludes others.

அது, மற்றவற்றை விலக்கும்.

Our realisation is imperfect.

நாம் அறிவது குறையானது.

It is exclusive.

அது மட்டும் தனித்து நிற்பது.

It moves us to bring in a human element of error into the very truth itself.

சத்தியத்துள் நம் மனப்போக்கால் தவற்றை நுழைக்க அது வழி செய்யும்.

It is a conflict and a mutual negation.

அது பிணக்கு. ஒன்று மற்றதை ரத்து செய்யும்.

Really it is an all-comprehending unity.

உண்மையில் அது அனைத்தையும் தன்னுட்கொள்ளும் ஐக்கியம்.

The divine supramental being is informed by the essential character of the Supermind.

தெய்வீக சத்தியஜீவன் சத்தியஜீவியத்தின் முக்கிய அம்சத்தை அறிவான்.

It is a comprehending oneness and infinite totality.

அது பூரணமான ஐக்கியம். அனந்தமான முழுமை.

To it they present themselves as a triple realisation.

தன்னை மூவகைச் சித்தியாக அது காட்டுகிறது.

It is a triune realisation.

உண்மையில் அது மூன்றில் ஒன்று - ஒன்றில் மூன்று.

Let us say this soul takes its poise in the consciousness of the individual Divine.

இந்த ஆத்மா அந்த நிலையை எடுத்துக்கொண்டதாகக் கொள்ளலாம். அது ஜீவாத்மாவினுடையது.
 

It lives and acts in distinct relation with the 'others'.

மற்றவருடன் தனித்துக் குறிப்பிட்ட தொடர்புடன் அது வாழ்ந்து செயல்படுகிறது.

Still it will have its entire unity.

இருப்பினும் அதற்கு அந்த முழுமையான ஐக்கியம் உண்டு.

It will be in its foundation of consciousness.

அதற்கு ஜீவியத்தின் அடிப்படையுண்டு.

All emerges out of that.

அனைத்தும் அதனின்று புறப்பட்டு வெளிவரும்.

It will have in the background of that consciousness the extended and modified unity.

நீண்டு மாறுபடும் அதன் ஜீவியம் அதன்பின் திரையாக அமையும்.

It is capable of returning to any of these and contemplating from its individuality.

எதற்கும் அதனால் திரும்ப வர முடியும்; வந்து தன் தனித்தன்மையிருந்து சிந்திக்க முடியும்.

In the Vedas all these poises are asserted of the gods.

வேதத்தில் தெய்வங்கட்கு இந்த எல்லா நிலைகளும் உண்டு.

In essence the gods are one existence.

சாரமாகக் கருதினால் எல்லாக் கடவுள்களுக்கும் ஒரே வாழ்வுண்டு.

The sages call them by different names.

ரிஷிகள் அவர்களைப் பல்வேறு பெயர்களால் குறிக்கின்றனர்.

In their action they are said to be all the other gods.

செயல் ஒவ்வொரு தெய்வமும் மற்ற எல்லாத் தெய்வமுமாகும்.

It is founded in and proceeds from the large Truth and Right.

பரந்த சத்தியம், உண்மையின் அடிப்படையில் அது எழுந்தது.


 

தொடரும்.....


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

உயர்ந்த நிலையை அடைந்தபின்னும், நம் பழைய பழக்கம் பின்னணியில் இருப்பதைக் காணலாம்.
 

நிலை உயர்ந்தாலும், பழக்கம் பழையதுவே.


 



ஸ்ரீ அரவிந்த சுடர்


 

ஒரு திட்டத்தை அதற்குரிய நிலையில்தான் ஆரம்பிக்க முடியும். வேறு ஒரு நிலையில் நிச்சயமாக அதை ஆரம்பிக்க முடியாது. (e.g.) உணர்ச்சிக்குரிய சேவையை மனத்திற்குரிய திட்டத்தால் ஆரம்பிக்க முடியாது. ஆன்மீக தியானத்தைச் சிந்தனையால் செய்ய முடியாது. யோகம் ஆன்மீகமானது. அதைச் சமர்ப்பணத்தாலோ, மனதை ஒரு நிலைப் படுத்துவதாலோ ஆரம்பிக்கலாம். விவாதத்தாலோ, படிப்பாலோ, பூஜையாலோ யோகத்தை ஆரம்பிக்க முடியாது.

விஷயம் முடியுமிடத்தில் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.


ஸ்ரீ அரவிந்த சுடர்

ஐந்தாண்டுத் திட்டங்களை இராஜாஜியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குரிய (strategy) சூட்சுமத்தை நேருவால் கண்டுகொள்ள முடியவில்லை. அது அவர்களுடைய அறிவின் குறையல்ல. சுயமாகச் சிந்திக்க முடியாதவர் எனவும் கொள்ள முடியாது. அவர்களுடைய சிந்தனையாற்றல் அவர்கள் வளர்ந்த சமுதாயத்தால் நிர்ணயிக்கப்பட்டது என்றே பொருள். தான் பிறந்த சமுதாயத்தைத் தாண்டி வருவது அன்னையை ஏற்றுக்கொள்வதற்கு அவசியம். அத்துடன் தான் பிறந்துள்ள பரிணாம நிலையையும் (evolutionary plane) கடந்து வருதல் அவசியம். குறைந்தபட்சம் சிந்தனையிலாவது அதைத் தாண்டி வர வேண்டும்.

சமூக சிந்தனைக்கு முடிவுண்டு; சிந்தனைக்கு முடிவில்லை.


 


 


 


 



book | by Dr. Radut