Skip to Content

5. அஜெண்டா

"Agenda"

Mother wants Nixon to be removed.
 

நிக்ஸனை அன்னை பதவியினின்று நீக்க விரும்பினார். - அஜெண்டா
 

அன்னை எவரையும் தம் ஸ்தாபனத்தினின்று நீக்க முயலவில்லை. தனக்கே பாதகம் செய்தவரையும் விலக்கவில்லை.இதுவே அவர் சட்டம். அதற்கு எதிரான சட்டமும் உண்மை. நிக்ஸன் போக வேண்டும் என்று கூறியதுபோல் மொரார்ஜி தேசாயும் போக வேண்டும் என்றார். இருவரும் விலக்கப்பட்டனர்.
 

நிக்ஸன் செனட்டால் குற்றம் சாட்டப்பட்டு விலக்கப்பட்டார்.
 

மொரார்ஜி நிதிமந்திரியாக இருந்தபொழுது நிதி இலாக்காவை அவரிடமிருந்து எடுத்துவிட்டதால் அவர் ராஜினாமா செய்தார். பிறகு எமர்ஜென்ஸி போனபின் பிரதமராக வந்து, 2 ஆண்டிருந்து, ஆதரவையிழந்து, பதவியினின்று விலகினார். அந்த வருஷங்களிலும் மொரார்ஜி தமக்குப் பிடிக்காத "பாங்கு தேசியமயமானதை'' ரத்து செய்ய முயலவில்லை.

  • அன்னை தண்டிப்பதில்லை என்றால் இதெல்லாம் எப்படி என்பது கேள்வி.
  • வாழ்வில் வேலைக்குத் தடையானவருக்குத் தண்டனை வரும்.

       அன்னை அந்தத் தண்டனையைத் தருவதில்லை.

      அது உலகில்லாத சுதந்திரத்தை அன்னை தருவதாகும்.

மனிதன் அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி வேலைக்குத் தடையாக இருக்கிறான்.

அதையும் சில சமயம் அன்னை அனுமதிப்பார்.

பல சமயம் அவனை விலக்குவார்

  • தறுதலை அன்னை ஸ்தாபனத்தில் நியமிக்கப்பட்டார்.

      பொறுப்பில்லாதவர், அவர் சோம்பேறியாயும் இருந்தார்.

ஒரு வருஷ காலத்தில் ஸ்தாபனத்தை மூடும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்.

அதற்கு வெட்கப்படவில்லை. "ஸ்தாபனத்தை மூடிவிடுவோம்'' என்று அன்பரிடம் கூறினார்.

ஸ்தாபனத்தை மூட வேண்டாம், தறுதலையை அனுப்பிவிட்டால் போதும் என அன்பர் அறிவார்.

அன்பர் தறுதலையை நீக்கவில்லை.

அவரை அனுப்பிவிட்டுச் சமர்ப்பணத்தை அன்பர் மேற்கொண்டார்.

நிலைமை மூன்று நாளில் மாறியது.

ஸ்தாபனம் தொடர்ந்தது.

தறுதலையின் சொந்தச் சந்தர்ப்பங்கள் மாறின.

ஸ்தாபனத்தை விட்டுப் போவது நல்லது என அவருக்கே தோன்றியது. அவரே போய்விட்டார்.

நாம் உள்ளே மாறினால் தொந்தரவு கொடுப்பவர் விலகுவார் என்பது அன்னை சட்டம்.

  • அன்னை அன்பர் என்ற பெயரில் சம்பிரதாயங்களைத் தீவிரமாக ஒருவர் பின்பற்றினார்.

அதனால் பெரும் ஆபத்து எழுந்தது.

ஸ்தாபனத் தலைவர் சம்பிரதாயங்களை விட வேண்டும் என வற்புறுத்தவில்லை.

மேலும் தீவிரமாக அவர் சம்பிரதாயங்களைப் பிடிவாதமாகப் பின்பற்றினார்.

அதனால் ஸ்தாபனத்திலுள்ளவர்க்கு உயிருக்கு ஆபத்து வருகிறது.

அதை ஏழு முறை பார்த்தும் அவர் சம்பிரதாயங்களை விடவில்லை.

அவர் செய்வது பிறரைப் பாதிக்கும்வரை சட்டம் பேசுவார்கள்.

செய்பவரையே பாதித்தால் உடனே மாறுவார்.

ஆபத்து அதிகமானதால் அவரைத் தலைவர் விலக்கினார்.
 சம்பிரதாயம் கடுமையானது.

அவர் விலகிய பின்னும் ஸ்தாபனம் பாதிக்கப்பட்டது.

செய்தவரையே பாதிக்க ஆரம்பித்தது.

அவர் ஸ்தாபனத்தைப் பாதித்தது.

மனிதன் சுயநலம்.

நாம் அவனை ஏற்றால், அவன் சுயநலம் நம்மைப் பாதிக்கும்.

நம்மை மட்டும் பாதிக்கும்வரை அவன் சுயநலமான காரியத்தை விடமாட்டான்.

ரூ.64,000 தர வேண்டியவனுக்கு அது நினைவேயில்லை.

கொடுத்தவர் கேட்கவில்லை.

நாள் கழித்து 64 இலட்சம் அவன் பலருக்கு அநியாயமாகத் தர வேண்டியதாயிற்று.
 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

நட்பு - குடும்பம் - வாழ்வு - கூட்டு - மனிதனுடைய சிறப்பு (personality).
கூட்டாளியைவிடப் பணம் முக்கியம் என்று நினைத்தவுடன் கூட்டு முறிந்துபோகும்.
ஆதாயமான நினைவு நட்பைப் பொசுக்கும்.
சோகம் எழுந்தால், வாழ்வு நலியும்.
தயக்கம் ஏற்பட்டால் மனிதனுடைய சிறப்பு இறக்கும்.
அடுத்தவரை மனம் ஆழ்ந்து நாடினால், திருமணம் முடிகிறது.
 

உறவில் உண்மை போனால் உறவு அழியும்.
 


 


 


 



book | by Dr. Radut