Skip to Content

8. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)
 

கர்மயோகி


 

41. உயர்ந்தார் படுங்குற்றம் குன்றின் மேல் இட்ட விளக்கு. (சிறியவர்கள் நிறைய குற்றங்கள் செய்தாலும் அதனை உலகம் பெரிதாகக் கொள்ளாது. ஆனால் உயர்ந்தவர்கள் சிறிய குற்றத்தைச் செய்தாலும் அதைப் பெரிதுபடுத்தி, உலகுக்குச் சொல்லும்). 

  • சிறு நல்லதற்கு பெரும் பலனுண்டு.
  • சிறு தவறுக்கும் பெரும் தண்டனையுண்டு.

42. பூவோடு நாரியைக்கு மாறு. (பூவோடு நாறும் மணக்கும் - வழக்கிலுள்ள பழமொழி).

  • அன்பர் சூழலும் அருளைத் தாங்கி வரும்.

43. கைக்குமே தேவரும் தின்னினும் வேம்பு. (தேவர்கள் தின்றாலும் வேம்பு கசக்கும். வேம்பின் குணம் கசப்பு). 

  • வேம்பும் இனிக்கும் சமர்ப்பணம்.

44. அறிந்து, அறிந்து செய்கிற பாவத்தை அழுது, அழுது தொலைக்க வேண்டும்.

  • அறிந்து, அறிந்து செய்த பாவத்தை உணர்ந்து, நெகிழ்ந்து, சமர்ப்பணம் செய்வது புனர்ஜென்மம்.

45. அறிவு ஆரறிவார், ஆய்ந்தவர் அறிவார்.

  • அன்னையை யாரறிவார், அனுபவித்தவர் அறிவார்.

தொடரும்....


 


 


 


 



book | by Dr. Radut