Skip to Content

9. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

என் கணவர் 30 வருடமாக ஒரே கடைக்கு நகைப் பெட்டி செய்து கொடுத்தார். ஆனால் 10 வருடமாகப் பெட்டி செய்து கொடுக்கவில்லை. என் கணவருக்கு வேலை இல்லாமல் நாங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தோம். நான் தினமும் அன்னையை வந்து வணங்குவது வழக்கம். திடீரென்று ஒரு நாள் போன் வந்தது, முதல் என் கணவர் வேலை செய்த கடையிலிருந்து. எங்களுக்கு ரொம்ப ஆச்சரியம். ஜனவரி முதல் நாளே (1-1-2008)"பெட்டி செய்து கொண்டு வா'' என்று சொன்னார்கள். நாங்கள் மறுபடியும் போன் செய்து கேட்டோம். "எங்களையா பெட்டி செய்துகொண்டு வரச் சொன்னீர்கள்?'' என்று ஆச்சரியமாகக் கேட்டோம். அந்த அளவிற்கு அன்னை எங்கள் வாழ்நாளையே மாற்றிவிட்டார்கள். இப்பொழுது அன்னை இல்லாமல் எங்கள் வாழ்வில் ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு எங்களை முற்றிலும் மாற்றிவிட்டார்கள்.
 

- R. ஜெயலட்சுமி, பெரம்பூர், சென்னை-11.

***

     

     

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

எண்ணம், மனத்தின் ஆசை.
 

தனக்குக் கிடைக்காததை உணர்வு ஆசையால் எட்டுவது போல், தனக்குப் புரியாததை மனம் எண்ணத்தால் எட்டித் தொட முனைகிறது.
 

மனம் பொருளைத் தொட முனைவது எண்ணம்.
 


 

 



book | by Dr. Radut