Skip to Content

12. அஜெண்டா

 "Agenda"

You have a diamond look.

It used to be one of Infinity
உங்கள் பார்வை வைரமாக உள்ளது.

ஏற்கனவே அது அனந்தமாக இருக்கும்,

என்று சத்பிரேம் அன்னையிடம் கூறுகிறார்.

.கண்பார்வை ஆத்மாவை வெளியிடும்.

.சுறுசுறுப்பான சூட்சுமமுடையவருக்கு அடுத்தவர் பார்வையில் அவர் யார் எனத் தெரியும். நல்லவர், கெட்டவர், கோபக்காரர் என்பவை தெரியும்.

.மனவளர்ச்சியால் இந்த சூட்சுமம் மங்கிப்போகும்.

.மனம் முகத்தின் குறியை உணரும். முகம் உணர்ச்சியை வெளிப்படுத்தும்.

.சந்தோஷம் புன்னகையாக வருவதை உதடு காட்டும்.

.சாப்பாட்டு ருசியுள்ளவர் உதடு அதைத் தவறாமல் வெளியிடும்.

.பகவானை நெருங்கும்பொழுது அனந்தத்தின் அன்பலைகளில் மிதப்பது தெரியும்.

எல்லையுள்ளது சிறியது.

சிறியது மிகச் சிறியதானால் முனை கூராகும்.

பொறாமைக்காரர் அருகில் வந்தால் உள்ளத்தில் முள் குத்துவது போல் இருக்கும்.

சிறியது பெரியதானால் எல்லை விரிவடையும்.

எல்லை, எல்லையைக் கடந்து விரிவடைந்தால் சூழல் இதமாக இருக்கும்.

எண்ணம் எல்லையை இழந்தால் சுதந்திரம் அனந்தமாகும்.

அனந்தத்தை எல்லையற்ற ஆனந்தம் எனத் தத்துவம் கூறுகிறது.

பகவானிடமிருந்து எழும் சூழலில் எதற்கும் எல்லையில்லை.

.எல்லையற்றது அனந்தம்.

 .அன்னையின் பார்வை - ஆத்ம எழுச்சி - அனந்தமாக இருந்தது என்பது அதுவே.

.வைர ஒளி தீயசக்தியைக் கரைக்கவல்லது.

.வைர ஒளிக்கு அனந்தம் அஸ்திவாரமாக இருக்க முடியும்.

.வைரம் என்பது ஒளி பெறும் கூர்மை.

.அன்னையின் பார்வை வைர ஒளியாக உள்ளது எனச் சத்பிரேம் கூறுகிறார்.

அது பட்டால் தீயசக்திகள் கரையும்.

ஆசிரமத்திற்குத் தொந்தரவு கொடுத்த இளைஞன், ஆஸ்த்ரேலியாவைச் சார்ந்தவன்; அன்னை அவனை தம் நாட்டிற்குப் போகச் சொன்னார்.மறுத்துவிட்டான்.

காளியை அவன் தலையில் நடனம் செய்ய அன்னை ஆணை பிறப்பித்தார்.

காளி ஆணையை நிறைவேற்றினாள்.

இளைஞன் மனம் மாறி புதுவை விட்டகன்றான்.

.செய்வினை செய்த இடத்தில் அன்னையின் சிம்பல், மலர், பிரசாத பாக்கெட் ஆகியவற்றுள் ஒன்று வந்தால் செய்வினை கரையும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

எந்த விஷயம் மீண்டும் மீண்டும் ஆயிரம் முறை நம் மனத்தைத் தொடுகிறதோ, அந்த விஷயத்தில் நமக்கு அதிகபட்ச அக்கறை உள்ளது என்று பொருள். அதுவே நம் ஜீவியத்தின் நிலை.

இடையறாது நம் மனத்துள் உள்ளது நம் ஜீவிய நிலை.


 


 


 


 



book | by Dr. Radut