Skip to Content

13.டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

"ஈசனோடாயினும் ஆசை அறுமின்'' என்பது பெரியோர் வாக்கு.தியான மையத்தில் சிறப்பாக வேலை செய்பவர், அது சேவையாகும் பொழுது மையத்தின் அம்சத்தை அறிகிறார்கள். மையத்தில் அன்னை இருப்பது நிதர்சனமாகத் தெரியும். அதைக் கண்ட அன்பர், அதை விட்டகலமாட்டார்.

- தான் கண்ட அன்னை மையத்திலிருப்பதை அவர் மனம் அறி-கிறது.

- மையத்திலிருப்பதாக உணர்ந்த அன்னை இருக்குமிடம் எது?

மையம் என்பதிலையமில்லை.

அதைக் கடந்த உண்மை எது?

மையத்தில் அன்னையைக் காண்பது மனத்தில் உள்ள அன்னை.

அப்படிப்பட்ட ஓர் அன்பருக்கு டிரான்ஸ்பர், பிரமோஷன் வந்தது.மனம் மையத்தை விட்டகலப் பிரியப்படவில்லை. இந்தச் சிக்கலான நேரத்தில் அறிய வேண்டியது என்ன? டிரான்ஸ்பர் அன்னை போட்டது என ஏற்பது சரி எனக் கேள்விப்பட்டது முதல் மனம் டிரான்ஸ்பரை ஏற்றது. வேலையில் சேர ஒரு வாரம் காலம் உண்டு. மனம் டிரான்ஸ்பரை ஏற்றவுடன், டிரான்ஸ்பர் அன்னையை ஏற்று,பிரமோஷனுடன் மீண்டும் பழைய இடத்திற்கே டிரான்ஸ்பர் வந்தது.

அன்னையை ஏற்கும் பொழுது அவர் நம் மன அபிலாஷைகளை ஏற்கிறார்.

- நம் இஷ்டத்திற்கு அன்னை செயல்படுவதை எதிர்பார்ப்பதை விட அன்னை இஷ்டத்திற்கு நாம் செயல்படுவது அன்னைக்குரிய முறை.

- மையத்திலிருந்து மனம் விலகி நம் உள்ளே டிரான்ஸ்பராக வேண்டுவது சிறப்பு.

 

****


 



book | by Dr. Radut