Skip to Content

14.ஆத்மாவின் குரல்

ஆத்மாவின் குரல்

குரல்கள் பல வகையின. அபயக்குரல், நெஞ்சு நிறையும் நெகிழ்ந்த குரல், ஆத்மாவின் அழைப்பு, ஜீவன் மலர்ந்த சிறப்பு,அன்னையே உள்ளிருந்து அழைக்கும் அற்புதம் என அவை பல வகையானவை. எவரானாலும், அன்னையை அறியாதவரானாலும்,ஆபத்தில் எழுப்பும் குரல் அன்னையை எட்டி பதிலைப் பலனாகக் கொண்டு வரும்.

- அது வாய்ச் சொல், வெறுஞ் சொல். அதற்குப் பிரச்சினையை முழுவதும் தீர்க்கும் திறனுண்டு.

சொல் வாயிலிருந்து தடம் மாறி நெஞ்சுக்குப் போய், அங்கிருந்து எழுந்தால் பிரச்சினை எழுப்பும் பீதி கரைந்து, திரை விலகி,பிரச்சினையின் ஆன்மீக ரூபமான வாய்ப்பு எழும்.

- எண்ணம் விலகி எழும் குரல் பிரச்சினை வாய்ப்பெனக் காட்டும்.மனம் அழைத்தால் வாய்ப்பு பதில் கூறும்.

குரல் எண்ணத்தைக் கடந்தும் செல்லும். எண்ணத்தைக் கடந்த நிலை மனத்தைக் கடந்தால், மனம் திறந்து மறைந்துள்ள ஆத்மாவைக் காட்டும். ஆத்மாவுக்கு ஆர்வமெழுந்தால் அது அன்னையை அழைக்கும்.

- ஆத்மாவுக்கு பிரச்சினையில்லை, வாய்ப்பு பொருட்டில்லை.

குரல் ஆத்மாவிலிருந்து எழும் பொழுது  குரலைக் கேட்டுக் கொள்வது பரமாத்மா.

ஆத்மாவின் குரல் ஜீவனைப் பரவசமாக்கும்.

பரவசமான நிலையில் எழும் குரல் பலரும் கேட்கும் குரல் -பலருள்ளும் உள்ள ஆத்மா கேட்கும் குரலாகும்.

 

****


 



book | by Dr. Radut