Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                (சென்ற இதழின் தொடர்ச்சி....)     கர்மயோகி
 

 

XV.The Supreme Truth -Consciousness

Page No.132, Para No.2

15. உயர்ந்த சத்தியஜீவியம்

The Truth-Consciousness is everywhere.

சத்தியஜீவியம் எங்குமுளது.

It is present in the universe.

அது பிரபஞ்சத்தில் உள்ளது.

By that the One becomes the Many.

இதன் வழி ஏகன் அநேகனாகிறான்.

It manifests its harmonies.

சத்தியஜீவியம் தன் சுமுகங்களை வெளிப்படுத்துகிறது.

The multiplicity has infinite potentials.

பல்வேறு ஜீவராசிகள் அனந்தமான வாய்ப்புகளையுடையன.

This is a self-knowledge.

இது தன்னைப் பற்றித் தானே அறிவது.

It is an ordering self-knowledge.

இந்த ஞானம் உலகைச் செப்பனிட வல்லது.

The potentiality is infinite.

அப்படிப்பட்ட வாய்ப்புகள் அனந்தமாக வித்தாக உள்ளன.

Without this power of ordering, there will be chaos.

இந்த முறைப்படுத்தும் சக்தியில்லாவிட்டால் ஒரே குழப்பமிருக்கும்.

It will be a shifting chaos.

அது குழப்பம் குழப்பமாக உருவாகும்.

There is the play.

இது லீலை.

It is an unbounded chance.

இங்கு அளவுகடந்து தற்செயலாய் நடக்கும் வாய்ப்புண்டு.

It is uncontrolled chance.

இந்த வாய்ப்புகள் கட்டுக்கடங்கா.

There is a law of guiding truth.

இது உலக நிகழ்ச்சிகளை வழிநடத்தும் சட்டம்.

It is a harmonious self-vision.

இது சுமுகமான சுயமான ஞானதிருஷ்டி.

It is pre-determining idea.

முன்கூட்டியே ஏற்பட்ட முழு எண்ணம் இது.

It is in the very seed of things.

பொருள்களின் வித்தாக இது உள்ளது.

It is cast out for evolution.

பரிணாமம் நடக்க இது பரிமாறப்படுகிறது.

Without that law, it will be a teeming chaos.

இந்தச் சட்டமில்லாவிட்டால், குழப்பம் அதிவேகம் பெறும்.

It is a chaos of uncertainity.

நிலையற்ற நிலையின் குழப்பம் இது.

It is confused and amorphous.

உருவம் பெறாத, பெற முடியாத குழப்பமான நிலையிது.

Here is a knowledge that creates.

இது சிருஷ்டிக்கும் ஞானம்.

It creates and releases form and powers of itself.

தம் ரூபங்களையும், சக்திகளையும் சிருஷ்டி வெளிப்படுத்துகிறது.

It does not create something other than itself.

தன்னைக் கடந்ததை அது சிருஷ்டிக்கவில்லை.

That law governs each potentiality.

இந்தச் சட்டம் இந்த வாய்ப்புகளை நிர்வாகம் செய்கிறது.

It is its own vision of truth.

அது தன்னுடைய சத்திய திருஷ்டி.

That knowledge possesses it in its own being.

தன் சொந்த ஜீவனில் அது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளது.

It also has an awareness.

அதற்கு ஒரு தெளிவும் உண்டு.

It is intrinsic.

இது பிறப்பில் ஏற்பட்டது.

It is an awareness of its relation to other potentialites.

இதர வாய்ப்புகளுடன் உள்ள தொடர்பை அறியும் தெளிவு இது.

It is aware of their harmonies too.

அவற்றின் சுமுகங்களையும் அது அறியும்.

Such a harmony exists between them.

அவற்றிடையே அப்படிப்பட்ட சுமுகங்கள் உள.

It holds all this pre-figured.

இத்தனையும் அது முன்கூட்டியே பெற்றுள்ளது.

It is a general determining harmony.

இது பொதுவான நிர்ணயம் செய்யும் சுமுகம்.

The whole rhythmic Idea of a universe must contain this harmony.

பிரபஞ்சத்தில் சுமுகமான எண்ணம் இந்தச் சுமுகத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

It must be there in its very birth.

இது அது பிறக்கும் பொழுதே அதனுள் இருந்திருக்கும்.

There is such a self-conception.

அப்படிப்பட்ட சுயமான கருத்துண்டு.

There fore it must inevitably workout.

எனவே அது நடைமுறையில் பலன் தரும்.

It works out by the interplay of its constituents.

அதன் பகுதிகள் ஒன்றோடொன்று மோதுவதால் அப்பலன் வரும்.

It is the source of Law.

அது சட்டத்திற்கு உற்பத்தி ஸ்தானம்.

It is the keeper of the Law in the world.

அது உலகில் சட்டம் இயங்க உதவுகிறது.

For that Law nothing is arbitrary.

அந்தச் சட்டம் எதையும் முடிவாக ஏற்காது.

It is the expression of self-nature

அது தன் சுய சுபாவத்தை வெளிப்படுத்தும்.

It is determined by the compelling truth.

உள்ளிருந்து வற்புறுத்தும் சத்தியம் அதை நிர்ணயிக்கிறது.

It is the real idea that each thing is.

ஒவ்வொன்றும் முழு எண்ணமாகும்.

It is so in its inception.

ஆரம்பத்திலேயே அது அப்படி அமைந்துள்ளது

Therefore the whole development is predetermined.

எனவே இந்த முழு விபரமும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.

It is so from the beginning.

முதலிலிருந்தே அது அப்படியுள்ளது.

It is predetermined in its self-knowledge.

தான் தன்னையறிவதால் அது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.

It is so at every moment in its self-working.

தானே அது செயல்படும்பொழுது ஒவ்வொரு நிமிஷமும் அது அப்படியுள்ளது.

It is what it must be at each moment.

ஒவ்வொரு நிமிஷமும் அது அப்படியிருக்க வேண்டும்.

It is so by its own original inherent Truth.

தன் பிறப்பிலேயே உள்ள சத்தியத்தால் அது அப்படியுள்ளது.

It moves to what it must be at the next.

அடுத்தாற்போல் அது எதுவாக வேண்டுமோ அதற்கு அது போகிறது.

It is so still by its own original inherent Truth.

பிறப்பிலேற்பட்ட சத்தியத்தால் அது இதுவரை அப்படியிருக்கிறது.

It will be at the end that which was contained in its seed.

அதன் விதையில் அது என்னவோ அதாக அது முடிவில் முடியும்.

It was originally intended.

அப்படியே அது ஆரம்பத்திலிருந்து விதிக்கப்பட்டது.

Contd...

தொடரும்....

****

****


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆன்மீக முன்னேற்றம் அருளை அளவுகடந்து கொண்டு வரும்.பொதுவாக அதன் அறிகுறியாகப் பெருமழை வரும்.

அருளாக வரும் பெருமழை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

நமது கரணங்கள் வீறு கொண்ட தன்மை வாய்ந்தவை. சுமுகமாகச் செயல்படவோ, விட்டுக் கொடுக்கவோ அவற்றால் முடியாது. தானே ஒன்று சேர்ந்திணைவது இயலாத ஒன்று.

கரணங்களை இணைப்பது பல பெண்கள் சேர்ந்து செயல்படுவது போலாகும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

தன்னை அறிதல்:

பரிணாமத்தில் நம் நிலையை அறிய நம் பரிணாமத்தின் முறையை (process) அறிய வேண்டும். அதை அறிவதற்கு முன் உணர்ச்சியின் முறையையும், அதன் முன் சமூகத்தின் முறையையும் அறிய வேண்டும்.

பரிணாமத்தை அறியுமுன் தன்னையும் சமூகத்தையும் அறிய வேண்டும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

வாழ்வையும், அதன் வாய்ப்பையும் மனிதன் தன் திறமை, நோக்கம்,குறிக்கோளுக்கு ஏற்ப அனுபவிக்கிறான். அவை பல நிலைகளில் அமைந்துள்ளன. பகவான் ஸ்ரீ அரவிந்தரின் அருளும் அதே போல் பல நிலைகளில் அமைந்துள்ளது. நம் நிலையின் பல்வேறு அளவுகளையும், இன்று நாமுள்ள அளவையும் தெளிவாக அறிவது அரிதான அனுபவம்.

நிலைகளை நிதர்சனமாக அறிவது நிர்வாணத்தைவிட உயர்ந்தது.


 


 


 


 


 


 


 book | by Dr. Radut