Skip to Content

05.உலகம்-மோட்சம்-ஸ்ரீ அரவிந்தம்

உலகம்-மோட்சம்-ஸ்ரீ அரவிந்தம்

                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....) கர்மயோகி

மௌனமான சப்தம் :-
அன்பர்கட்கு மனம் நிலைப்படும் நேரம் உண்டு. அப்பொழுது
சாந்தி, ஜோதி, அமைதி தெரியும். மௌனமும் அதுபோல் தெரியும். மௌனமும் அதுபோல் தெரியும். மௌனம் சிறப்பாக இருந்தால் சூழல் கனக்கும். அப்பொழுது ஒரு ரீங்காரம் எழும். மௌனம் பேசுகிறது என்று கூறுவார்கள். சுமார் 40 வருஷத்திற்கு முன் 
Silence Speaks என்றொரு புத்தகம் வெளி வந்தது. ஓம் மௌனத்தின் உற்பத்தி ஸ்தானம். ஓம் என்ற மந்திரத்தை ஒரு கோடி முறை உச்சரிக்கச் சொல்வார்கள். அதை முறைப்படி செய்தால் ஆண்டவன் தரிசனம் கிடைக்கும். அது  சப்த பிரம்மம். அன்னை 1970 வாக்கில் ஒரு நாள் “ஓம்” என்ற வாக்கில் பிரம்மாண்ட ஒலியைக் கேட்டு மேற்கொண்டு விசாரித்ததில்  நடுக்கடலில்  கப்பல் நிலையிலிருந்து புறப்பட்ட பொழுது “ஓம்” என ஒலித்தது என்றார்.
 

மௌனம் ஒலிக்கும்.

மௌனமும் சப்தமும் எதிரானவை. ஆன்மீகச் சட்டப்படி சப்தம் மௌனத்துள்ளிருந்து எழுகிறது. உலகமே ஓம் என்ற ஒலியிலிருந்து எழுவதால், ஓம் மௌனத்தின் உறைவிடம் என்பதால், சப்தம் ஒலியிலிருந்து எழுவது ஆச்சரியமில்லை. மௌனமும், சப்தமும் எதிரானவை என்பதை ஏற்கலாம். மௌனத்திலிருந்து சப்தம் எழுகிறது என எப்படிச் சொல்வது? யோகத்தில் ஓரளவு முன்னேற்றம் பெற்ற எவரும் உள்ளே மௌனம் சேர்வதைக் காண்பர். அந்த மௌனம் சக்தி வாய்ந்தது. நம் செயலை சக்தியால் நிரப்புவதை அறிவர் என பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி. கட்டுப்படாத பிள்ளைகள்,தொண்டர்கள் உண்டு. அவர்களை முயன்று அதிகாரம் செய்து கட்டுப்படுத்துவார்கள். தலைவர் அதிகாரத்திற்கு, தகப்பனார் கோபத்திற்குப் பயப்படுவார்கள். பயம் கட்டுப்படுத்தும். அதிகாரத்தைச் செலுத்தாத இடத்தில் ஆர்ப்பாட்டமிருக்கும். அதிகாரம் அளவு கடந்திருந்து செலுத்த மறுக்கும் இடத்தில் வழக்கத்திற்கு அதிகமாக அமைதியும் கட்டுப்பாடும் இயல்பாக இருக்கும் இடங்கள் உண்டு.அன்பான தலைவர், பண்பான தகப்பனார் அதிகாரத்தைச் செலுத்துவதில்லை, செலுத்த நினைப்பதில்லை, செலுத்துவது பண்பற்ற செயல் என உணருமிடத்தில் அமைதி, மௌனம், ஒழுங்கு,கட்டுப்பாடு அளவு கடந்திருக்கும்.

 

- அந்த அதிகாரம் மௌனத்திலிருந்து எழுகிறது.

- அதிகாரம் சப்தமானது, சப்தம் போன்றது.

- சப்தம் மௌனத்திலிருந்து எழும். அது மௌனமான சப்தம்.

- The Life Divine இல் Silence sustains activity என்ற வரியுண்டு. மௌனம் கனத்தால் செயல் சிறக்கும்.

- ஒலி பேரொலியாக மௌனம் கனக்க வேண்டும்.

நம் ஊரில் கடைத்தெருவில் சப்தம் அதிகம். மேல்நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் தெருவிலும், நூற்றுக்கான கார்கள் ஓடும் ரோட்டிலும் மௌனம் சிறப்பாக உண்டு. அந்நாட்டுச் செல்வம் அவர்கள் அதிகமான உற்பத்தித் திறனால் ஏற்படுத்தப்பட்டது. இந்த அதிகபட்ச செல்வத்தின் அஸ்திவாரம் மௌனம், Physical silence. நாடு சுபிட்சமானால் ஒலி அடங்கி மௌனம் நிலவும்.

பகுதியான முழுமை

இதற்கு உதாரணமாக எழுதியவை ஓர் அம்சத்தில் பொருந்தும். முழுவதும் பொருந்தாது. நம் உடல் செல்களாலானது. ஒவ்வொரு செல்லுக்கும் உடலின் அமைப்புண்டு. ஒரு செல்லை எடுத்து வளர்த்தால் அதன் முழுப்பகுதியாகும் என்று  விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எந்தப் பகுதியின் செல்லும் -உதாரணமாக கண் - வளர்ந்து (கண்ணாகும்) அப்பகுதியாகும். இதுவும் முழுவதும் பொருத்தமான உதாரணமாகாது. அணு அப்பொருளின் சிறு உருவம். அணுவைப் பிளந்தால் பிரம்மாண்டமான சக்தி வெளி வருகிறது. இங்கும் பகுதியின் முழுமையில் ஓர் அம்சம் இந்த சக்தி அழிக்கப் பயன்படுவது போல், வெளிப்படுகிறது. ஆக்கவும் பயன்படும். தத்துவப்படி

- அணுவில் உலகம் உள்ளது.

- அணுவில் உலகம் உஷீமீளது.அணுவில் உலகம் உள்ளது.

- அதன் சக்தி வெளிப்பட்டால் அனந்தமான சக்தி எழும்.

- ஆத்மா வளரும் பொழுது ஒரு பகுதியில் அது வெளி வந்தால் அதன் முழுமையைவிடப் பெரியதாகும்.

மக்களாட்சியில் எல்லோரும் இந்நாட்டு மன்னராகலாம் என்பதால் எந்த ஒரு மனிதனும் தன் அரசியல் உரிமைக்குத் திறனளிக்க முடியுமானால், அவன் நாட்டின் தலைவனாகிறான். நாடு ஒருவனில் தலைவனாக உருவாகிறது. பகுதியான மனிதன் தன் அரசியல் ஆத்மாவைக் கண்டு வெளிப்படுத்துவதில் நாட்டின் முழுமை பெறுகிறான்.

அரூபமான ரூபம்

ரூபம் அரூபத்திற்கு எதிரான கருத்து. களிமண்ணுக்கு ரூபமில்லை. அதிலிருந்து செய்யப்படும் பானைக்கு ரூபமுண்டு. பானையின் ரூபம் களிமண்ணின் ரூபமற்ற நிலை - அரூபத்துக்கு எதிரானது. ஆனால் பானையின் ரூபம் களிமண்ணின் ரூபமற்ற நிலையிலிருந்து எழுவதால்,

நிலையிலிருந்து எழுவதால்,நிலையிலிருந்து எழுவதால்,

அரூபம் ரூபத்தை வெளிப்படுத்துகிறது என்றாகும்.

நாட்டில் சர்க்கார் உண்டு. சமூகம் உண்டு. சமூகப்பண்பை ஏற்று முறையாகக் குடும்பம் செய்பவர் சமூகத்தைச் சார்ந்தவர். சர்க்காரும், குடும்பமும், சமூகப்பண்பும் சமூகத்தின் ரூபங்கள். இவற்றிற்கெல்லாம் புறம்பானவையும் சமூகத்தில் உண்டு. அது ரூபத்திற்கு எதிரானது. குடும்பமில்லாமல், சமூகக் கட்டுப்பாட்டை ஏற்காமல் உள்ள மக்களும் சமூகத்தில் உண்டு. நாம் அவர்களை பதர் என நினைத்து விலக்குகிறோம். ரூபத்திற்கு ஜீவன் உண்டு. ரூபமற்றதற்கும் ஜீவன் உண்டு. . ஜீவன் உண்டு என்றால் ஆத்மா விழித்துச் செயல்படும் நேரம். சமூகம் முன்னேறும் வரை சமூகத்தின் ரூபம் மூலம் செயல்படும். சமூகம் முன்னேற மறுத்தாலும், முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தாலும் ஆத்மா அதை விட்டு நகரும். அரூபத்துள் ஆத்மா விழிக்கும். அரூபம் ஜீவன் பெறும். அதற்குச் சமூகத்தைவிட அதிகப் பலம் வரும். சமூகத்தையே அழித்துப் புதிய சமூகம் ஏற்படுத்தும். நாம் இதைப் புரட்சி என்கிறோம். அரூபமான, ஒதுக்கப்பட்ட பகுதிகள் சமூகத்தின்ஒரு தாழ்ந்த பகுதி சமூகம் மலை. இது கடுகு. ஆத்மா இப்பகுதியில் விழித்துச் செயல்பட்டால், சமூகத்தைவிடப் பெரிய பலம் பெறும். இதைப் பகுதி முழுமையைவிடப் பெரியது என்கிறோம்.

ONE AND THE MANY ஏகன் - அநேகன்

சிருஷ்டி ஆனந்தத்திற்காக ஏற்பட்டது. ஆனந்தம் எழ லீலை வேண்டும். ஜீவனில், ஜீவியத்தில், ஆனந்தத்தில் லீலையுண்டு. ஊரில் அநேக விசேஷங்கள் தேர்தல், திருமணம், விழா, வெளியூர் சுற்றுலா அதிகமாக இருந்தால் வாழ்க்கை சுறுசுறுப்பாக இருக்கும். லீலை அதிகமானால் ஆனந்தம் அதிகமாகும், பரமாத்மா பரமாத்வாகவே இருந்தால் லீலையில்லை. ஆனந்தம் குறைவு. பரமாத்மா, ஏராளமான ஜீவாத்மாக்களானால், பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் ஜீவன் பரிமாறிக் கொள்கிறது. ஜீவாத்மாக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்கின்றனர். அது ஜீவியத்திலும் உண்டு, ஆனந்தத்திலும் உண்டு. ஒரு மரத்துண்டை இரண்டாக்கலாம், 4 ஆக்கலாம். அவை மீண்டும் கூடாது. இது பிரிவினை.

ஒருவர் பல கடமைகளை ஏற்றால் - தகப்பனார், தலைவர், முதலாளி

- அவர் பிரிவதில்லை. அம்சம் பிரிகிறது, அங்கம் பிரிவதில்லை.

நமக்குப் பல திறமைகள் எழுகின்றன. அவை 10 ஆக இருக்கலாம்,100 ஆக இருக்கலாம். திறமைகள் அதிகப்படுவதால், மனிதன் பல பாகங்களாகப் பிரிக்கப்படுவதில்லை. அதிகமான திறமைகள்

வாழ்வை அதிகமாக அனுபவிக்கப் பயன்படும்.

- இதைப் பிரியாத பிரிவினை எனலாம் (differentiation and division)

- பிரிந்த பகுதிகள் அடிப்படையில் ஒன்றானவை. . 50திறமைகள் பிரிந்து தோன்றினாலும், அடிப்படை மனிதன் ஒருவனே.

- திறமைகள் பிரிந்தால் மனிதனும் அதுபோல் பிரிந்து விடுகிறான் எனப் புரிந்து கொண்டால், நூல் புரியவில்லை எனத் தோன்றும்.

- மனம் பிரிக்கிறது. (divides) சத்தியஜீவியம் பிரிப்பது (diferentiation)

- சத்தியஜீவியச் செயலை மனத்தால் புரிந்து கொள்ள முயன்றால் குழப்பம் எழும்.

நிலையான சலனம்

இதை ஸ்தாணு எனக் கூறுவர். ஓடும் ரயிலில் நாம் தந்திக் கம்பங்களைக் காணும் பொழுது, நிலையாகத் தோன்றுவது போல் உலகம் நிலையாக இருக்கிறது. நிலையானது சத். அசைவது சக்தி.சலனமாக நாம் காண்பது நிலையானது. நிலையானதாக உள்சத் சலனமான சக்தியாக இருக்கிறது. சலனம் காலத்துள்ளும்,நிலையானது காலத்தைக் கடந்தும் உள்ளது. மூன்றாம் நிலை காலத்துள் இவை இணைந்துள்ளன. மௌனத்துள் ள்ள சப்தம் போல் ஸ்தாணுவில் சலனம் உள்ளது. ஸ்ரீ அரவிந்தம் உலகில் மலர்ந்தால் இரண்டும் இணைந்து செயல்படும் அற்புதம் தெரியும்.

அகண்டமான கண்டம் INFINITY IN THE FINITE.

தத்துவத்தில் good, evil என ஒரு கருத்துண்டு. Good என்பது Self-existing good எனப்படும். நமக்கு நல்லது, கெட்டது என இரண்டுண்டு.கெட்டதற்ற நல்லது ஒன்றுண்டு என நம் அறிவுக் கெட்டாது. ஒளியும், இருளும் நாமறிவோம். இருளற்ற ஒளியென ஒன்றுண்டு என நாம் நினைப்பதில்லை. குறையும், நிறையும் உண்டு. குறையற்ற நிறை என்பது நம் அனுபவத்தைக் கடந்தது. கண்டம் சிறியது, அகண்டம் பெரியது. அகண்டம் கண்டத்துள் உண்டு. கண்டத்தையறியாத அகண்டமுண்டு என்பது ஸ்ரீ அரவிந்தத்திற்கேயுரிய கருத்துகள். உலகில் infinityஎன்பது finiteக்கு எதிரானது. பிரம்மத்திற்குரிய infinityக்கு எதிரான finiteஇல்லை என்பதால் அதை self-existing infinity என்கிறார் பகவான். மனிதனும் தெய்வமும் எதிரானவை. தெய்வம் மனிதனில் வெளி வந்தால் அது மனித தெய்வமாகும். அதுவே ஸ்ரீ அரவிந்த இலட்சியம். இதுவரை உலகம் காணாதது என்பதால் உதாரணம் தர இயலவில்லை. பகவான் அலிப்பூரில் கண்ட நாராயணத் தரிசனம் அகண்டமான கண்டம், மௌனமான சப்தம் வரிசைக்குரியது.

புறமான அகம்

அகம் ஒரு பகுதி, புறம் அடுத்த பகுதி. அகம், புறத்தை உட்கொள்ளக் கூடியது. அப்படி உட்கொண்டால் அது உயரும். ஜடம் வேறு, ஆன்மா வேறு என்பது நம் கருத்து. மனம் பிரபஞ்ச ஜீவியத்திற்கு உயர்ந்தால் ஜடம் சக்தியலையாகத் தெரியும். ஆன்மாவும் சக்தியலையாகத் தெரியும். மனமும், உயிரும் ஜடமும், ஆன்மாவும் சக்தியலைகளாக தெரியும். ஜடமும், ஆன்மாவும் சக்தியலைகளாக இருப்பதால் பிரபஞ்ச ஜீவியத்தில் அவை இணைகின்றன, அவை ஒன்றே என அறியலாம். அதற்கும் அடுத்த கட்டம் உண்டு. அது கடந்த நிலை, காலத்தையும், சிருஷ்டியையும் கடந்த நிலை. பிரம்மம் சிருஷ்டியில் சத்தாக மாறியது. சத் ஏற்பட்டவுடன் எதிரான அசத் சிருஷ்டியில் சத்தாக மாறியது. . சத் சித்தித்த ரிஷிகள் உண்டு. அசத் சித்தித்த ரிஷிகள் உண்டு. சத் சித்தித்தபின் அதைவிட்டு அசத்தையடைந்தவர் அசத் என்ற சித்தி பெற்றவர். பகவான் சொல்வது வேறு. சத்திலிருந்து அசத்திற்குப் போக சத்தை விட வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. சத்தை விடாமல் அசத்தை அடைவது முழுமையை நாடுவது. சத் பகுதி, அசத் பகுதி. இரண்டில் எது சித்திப்பதும் பகுதியான சித்தி. சத் சித்தித்தபின் சத்தில் ஊன்றிய காலை எடுக்காமல் அசத்தை எட்டினால், அது சித்தித்து விட்டால், சத்தும், அசத்தும் சித்தித்ததாகும். அது முழுமை சித்தித்ததாகும். அதனால் சத் உயர்கிறது, அசத்தும் உயர்கிறது. இரண்டும் இணைகின்றன. அவை பிரம்மத்தில் இணைகின்றன. அதே போல் அகமும், புறமும், உயர்ந்து உயர்ந்த அகமாகிறது. அதுவே அகமான புறம்.

ஆனந்தமான வலி

ஆனந்தம் அறியாமையால் வலியாகிறது. வலியை உணர்வது மனம், அதுவும் மேல் மனம். மனம் வலியைப் பொறுத்துக் கொள்முடிவு செய்தால் எந்த அளவு வலியையும் பொறுத்துக் கொள்ளலாம் என்று அன்னை கூறுகிறார். மயக்கமருந்து வருமுன் காயம்பட்ட கை, காலை வெட்டி எடுத்தனர். அவற்றை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடிந்தது? வலி அளவுகடந்து அதிகரித்தால் அது ஆனந்தமாகும் என்கிறார் அன்னை. வலிக்கு அனந்தமில்லை.பொய், தீமை, குறை, இருள் போன்றவை பெரியதாகலாம், அனந்தத்தை எட்ட முடியாது (can reach immensity never touch infinity). வலியும், ஆனந்தமும் எதிரானவை. அந்த ஆனந்தத்தை பகவான் Blissஎன்கிறார். இரண்டையும் கடந்த ஆனந்தம், இரண்டையும் உட்கொண்ட ஆனந்தத்தை delight என்கிறார். ரிஷிகள் கண்டது அக்ஷரப் பிரம்மம். அது பகுதியான பிரம்மம்.அசைவற்றது. பிரம்மம் அசையும், அசையாமலுமிருக்கும். அது முழுமையான பிரம்மம் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

அமிர்தமான விஷம்

அமிர்தம் அமர வாழ்வு தரும். விஷம் உயிரை எடுக்கும். இவை எதிரான கருத்துகள். உயிர் தரும் விஷமோ, உயிரை எடுக்கும் அமிர்தமோ உண்டா? இருள் அடர்ந்த ஒளி என்பது போல் விஷம் உயர்ந்த அமிர்தம் என்ற நிலை தத்துவத்திற்குண்டு, வாழ்க்கைக்கு ஒத்து வாராது. ஒளி அடர்ந்து, செறிந்தால் இருளாகிறது என்பது தத்துவம். விஞ்ஞானம் அதை ஆமோதிக்கும். பச்சை என்பது வெண்மையான ஒளியைப் பெற்ற இடம் நிறத்தை மட்டும் பிரதிபலித்து மற்ற நிறங்களைக் கிரகித்துக் கொள்கிறது. அதையும் கிரகித்துக் கொண்டால் கறுப்பாகிறது. அதனால் கறுப்பான இருள் அடர்ந்த ஒளியாகும்.

பரமாத்மாவான ஜீவாத்மா

நாம் அகந்தையை ஜீவன், அல்லது ஜீவாத்மா எனத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். அகந்தை அழிந்தால் அல்லது கரைந்தால் அங்கு புருஷன் வெளிப்படுகிறான். அது World Purusha பிரபஞ்ச ஆத்மா. இதைப் புறத்தில் காணலாம். அகத்திலும் காணலாம். அகத்தில் பிரபஞ்சத்தைக் கண்டால், அதனுள் ஆத்மா தெரியும். புறத்தில் பிரபஞ்ச ஆத்மாவாகத் தெரியும் புருஷன் அகத்தில் பிரபஞ்ச அனுபவத்துள் பிரம்மத்தின் ஆத்மாவாகத் Transcendent Purusha தெரிகிறது. அது பரமாத்மா. எனவே ஜீவாத்மா என நாம் அறிந்தது பரமாத்மாவாகும்.

வலுவான பலஹீனம்

வலிமை, எளிமையுண்டு. எதிரானவை. வலிமையுயர்ந்து பண்பால் எதிரியைத் தாக்க மனம் வாராவிட்டால் அது பலஹீனமாகக் கருதப்படும். அது பலஹீனமன்று. அதன் எதிரில் அதன் வலிமையை ஏற்று உலகம் அடங்கியிருப்பதும் உண்டு.

கோரமான அழகு

அழகு என்பது ஆனந்தத்தின் பகுதி. மனம் ஆனந்தத்தை அழகாக அறிகிறது. உயிர் ஆனந்தத்தைச் சந்தோஷமாக உணர்கிறது. ஆத்மா ஆனந்தத்தை அன்பாக அறியும். ஆனந்தம் அகம். அதன் புறம் அனந்தம். மனம், உயிர், ஆத்மா அனந்தத்தை அழகு, சந்தோஷம், அன்பாக உணர்கின்றன. அழகு என்பது ரூபம். சிறப்பான ரூபம் அழகு. (Perfect form is beauty). அழகில்லாமல் இருக்கலாம். அழகு எப்படிச் சிறப்பான ரூபமோ அதற்கெதிரான ரூபம் விகாரம், கோரம்.

- அழகும் கோரமும் எதிரானவை.

- அழகு எப்படிக் கோரமாக இருக்க முடியும்?

நிலைக்கேற்ப ரூபம் மாறும். நிலைகள் பல. ரூபங்களும் பல. ஒவ்வொரு நிலைக்குரிய அழகுண்டு. நாம் பேசும் பாஷை அழகாக இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். நாம் மழலை பேசினால் அது இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். நாம் மழலை பேசினால் அசிங்கமாக இருக்கும். குழந்தை பேசும் மழலை அழகு. எது நமக்கு அசிங்கமோ, அது குழந்தைக்கு அழகு. பேச்சுக்குரிய ரூபம் மழலை. தோற்றத்திற்குரிய ரூபம் அழகு. கார் டிசைன் போட கம்பனி டிசைன் என்ஜீனியர் படும்பாடு பெரியது. தோற்றம் படும்பாடு பெரியது. அழகாக அமைந்து விட்டால், அதனால் கார் அதிகமாக விற்கும். Luggage stand கார் மீது வைக்க வேண்டிய அவசியம் ஒரு சிலருக்குண்டு. அதனால் தோற்றம் விகாரமாவதைப் பொருட்படுத்தாமல் அதை வைத்தனர். அது விகாரம் எனப் புரிந்து கொள்ளாமல், அதை அழகாக நினைத்துப் பலரும் அதை வைத்தனர். மனவளர்ச்சியற்றவர்க்கு அது அழகாகத் தோன்றும்.

- மனவளர்ச்சியற்றவர்க்குப் பிறருக்குரிய விகாரம் அழகாகும்.

- ஒருவருக்கு அழகு, அடுத்தவர்க்கு விகாரம்.

-அழகு நிலைக்குத் தகுந்தாற் போல் மாறும்.

-கோரம் அழகிற்குட்பட்டது, அழகு கோரத்திற்குட்பட்டது.

சந்தோஷமான வருத்தம்

பகவான் ஸ்ரீ அரவிந்தர் சந்தோஷத்தின் உறைவிடம். அவரை தரிசித்தவர்கள் பல மாதம்வரை அதை உணர்வார்கள். ஆயுள்முழுவதும் அவர் வருத்தமாக இருந்தார். அதை Psychic sadnessஆத்மாவின் வருத்தம் என்கிறார். அவர் தாங்கி வந்த அருளை உலகம் ஏற்காததால், சந்தோஷத்தின் சாகரமான அவர் வருத்தப்பட்டார். ஒருவர் சந்தோஷப்படும் காரியம் அடுத்தவர்க்கு வருத்தம் தரும். ஜெயித்த கட்சி சந்தோஷப்படும் பொழுது தோற்ற கட்சி வருத்தப்படுகிறது. ஒரே ஒரே நிகழ்ச்சி ஒருவருக்கு சந்தோஷத்தையும், அடுத்தவர்க்கு வருத்தத்தையும் தருகிறது. இரண்டும் ஒரேயிடத்தில் உற்பத்தியாகின்றன. சந்தோஷம், வருத்தம் என்பது மனநிலையைப் பொருத்தது. நிகழ்ச்சியைப் பொருத்தது.

ஞானமான அஞ்ஞானம்

ஞானமும், அஞ்ஞானமும் எதிரானவை. இரண்டையும் அஞ்ஞானமும் எதிரானவை. இரண்டையும் உட்கொண்ட பெரிய நிலை ஜோதி.

தொடரும்....


 


 



book | by Dr. Radut