Skip to Content

16.முறிந்த முதுகெலும்பு

முறிந்த முதுகெலும்பு

முதுகெலும்பில் ஏராளமான பகுதிகளுண்டு. அவற்றுள் சில பாதிக்கப்பட்டால், அதன்பின் எழுந்து நிற்க முடியாது. குரல்வளை பாதிக்கப்பட்டால் பேச முடியாது. மாரிஸ் குட்மென் என்பவர் விமானம் ஓட்டுபவர். விமானம் விழுந்து அவருக்குப் பல பலத்த காயங்கள் ஏற்பட்டன. முதுகெலும்பில் முக்கிய பகுதி உடைந்துவிட்டது; குரல்வளை சேதமாயிற்று; சுவாசிக்க முடியவில்லை; செயற்கை சுவாசம் கொடுத்தனர்; உணவைக் குழாய் மூலம் செலுத்தினர். அவரால் கண் மட்டும் இமைக்க முடிந்தது. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அவரை அந்நிலையில் உயிருடன் வைத்து இருக்கலாம். அவர் எழுந்து நிற்பது, நடப்பது, பேசுவது, உண்பது இனி நடவாதுஎன டாக்டர்கள் கூறியபொழுது அவர்,

"நீங்கள் கூறியவற்றை நான் மறுக்கிறேன். கிருஸ்மஸுக்குள் நான் நடப்பேன். ஆஸ்பத்திரியை விட்டுப் போவேன்''எனக் கூறினார். ஒரு மாதம் கழித்து தள்ளுவண்டியில் தலைமை டாக்டரைப் போய் பார்த்துப் பேசினார். கிருஸ்மஸில் ஆஸ்பத்திரியை விட்டு வெளிவந்தார்.

இன்று T.V.இல் பேசுகிறார்.

- மன உறுதி நினைத்ததைச் சாதித்தது.

- அது ஆத்ம உறுதியானால் அதிகமாகச் சாதிக்கும்.

- அதற்கு அன்னை துணையிருந்தால் எதுவும் நடக்கும்.

இதைக் கேட்டவர் Morris Goodman is a standing miracle குட்மென்னுடைய அனுபவம் கண்கண்ட தெய்வ அற்புதம் என்றார்.

"நீ எதை ஆர்வமாகக் கருதுகிறாயோ, நீ அதாகவே மாறுவாய்'' என்பது பகவத் கீதை.

இவரது website:www.themiracleman.org.

 

****


 



book | by Dr. Radut