Skip to Content

02.சாவித்ரி

சாவித்ரி

P.79 Forsaken wheeled the circle of the days.

காலத்தின் சுழற்சி கைவிடப்பட்டது.

. வாழ்வின் தறுதலைக் கூட்டம் தூரத்தில் மூழ்குகிறது.

. மௌனம் மட்டுமே நிலையான நண்பன்.

. வாழ்வின் நம்பிக்கையற்று மோனத்தில் சுருங்கினான்.

. சொற்கடந்த சாட்சியின் கோவில் சிலை.

. பரந்த கோபுரத்தின் எண்ணத்தினூடே எழுந்த மனிதன்.

. அதன் வளைவுள் கலங்கிய அனந்தம்.

. புலன் அறியாத சிறகு மோட்சத்தை நாடும்.

. பிடிபடாத சிகரத்தின் அறைகூவல் அவனை எட்டியது.

. கடந்ததின் ராஜ்யத்தின் பரந்த வெளியில் வாழ்ந்தான்.

. எண்ணம் நடமாடும் இடத்தைக் கடந்த அவன் ஜீவன்.

. கரையை உடைத்துக் கடந்த அவன் எண்ணம் பிரபஞ்ச திருஷ்டியைத் தொட்டது.

. பிரபஞ்ச ஜோதியைப் பிரதிபலிக்கும் கண்கள்.

. பொன்வெளிப் பிரவாகம் இதயத்தையும், மூளையையும் ஊடுருவியது.

. அழியும் உடலில் பாயும் அழியாத சக்தி.

. ஆனந்த சமுத்திரத்தின் அடியில் ஓடும் ஊற்றோடை.

. இனம் தெரியாத இன்பம் படையெடுப்பாக வருகிறது.

. எதையும் சாதிக்கும் மூலத்தையறிந்த சூட்சுமம்.

. எல்லாம் அறிந்த பூரிப்பின் கவர்ச்சி.

. எல்லையற்றதும் மையமான ஜீவன் விரிந்து பூமியின் பரிதியை எட்டும்.

. அளவிறந்த ஆத்மாவின் கர்மத்தை நோக்கிய பயணம்.

. காற்றெனும் கிழிந்த திரையைக் காற்றில் பறக்கவிட்டான்.

. மங்கிவரும் கோட்டில் மடியும் சித்திரம்.

. புவியின் சுபாவச் சிகரம் அவன் காலடியில் புதைந்தது.

. அனந்தத்தை எட்ட மேன்மேலும் உயர்ந்து சென்றான்.

. கடலெனும் மௌனம் கனத்து அவன் கடப்பதைக் கண்டது.

. காலத்தைக் கடந்த பிரம்மத்துள் கதிரென நுழையும் அம்பு.

. காலமெனும் வில்லில் எழும் படபடக்கும் சூடு.

. சூரியனின் கதிர் சூரியனையடைகிறது.

. விடுதலையின் பெருமையை எதிர்க்கும் ஏற்றம்.

. இருண்ட ஜடத்தின் ஆதிசேஷனின் வால்.

. உறங்கும் அனந்தத்தை அடித்தெழுப்பும் அதிர்ச்சி.

. ரூபத்தின் ஆழ்ந்த இருளின் அடித்தளம்.

. தூக்கமெனும் வாயிலாக மரணம் அவன் காலடியில் கிடந்தது.


 

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

(Physical organisation) உலகத்தின் இயக்கம் தானே நடப்பது. இரு செயல்களுக்கு இடையேயுள்ள வெளி, அடுத்தச் செயலைத் தயார்படுத்தத் தேவைப்படுவது. ஜட உலகத்திற்குக் காலம் தேவை. உணர்வுக்கும், மனதிற்கும் தேவையில்லை. ஜடம், உணர்வாக ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகும். நம்மை நேரே சத்தியஜீவியத்திற்குப் போகச் சொல்கிறார் பகவான்.

ஒரு படி நகர ஆயிரமாண்டாயிற்று. முடிவான சத்திய ஜீவியத்திற்குப் போனால் பல்லாயிரம் ஆண்டு சுருங்கும்.


 


 


 


 


 



book | by Dr. Radut