Skip to Content

05.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                  (சென்ற இதழின் தொடர்ச்சி....)   கர்மயோகி

XVI. The Triple Status of Supermind Page No.143, Para No.3

சத்தியஜீவியத்தின் மூன்று கட்டங்கள்

We assert Unity of Sachchidananda.

சச்சிதானந்த ஐக்கியத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

On the other hand is this divided mentality.

எதிராகப் பிரிக்கும் மனித மனோபாவம் உண்டு.

They are two opposite entities.

இரண்டும் எதிரெதிரானவை.

One of which must be false.

ஒன்று பொய்யாக இருக்க வேண்டும்.

The other may be true.

அடுத்தது உண்மையாக இருக்கும்.

One of them should be abolished.

ஒன்றை அழிக்க வேண்டும்.

Then the other may be true.

அது அழிந்தபின் அடுத்தது உண்மையாக எழும்.

Then the other may be enjoyed.

அப்பொழுது அடுத்ததை அனுபவிக்கலாம்.

We exist on earth.

நாம் புவியில் வாழ்கிறோம்.

It is in the mind we live.

நாம் மனம் என்ற லோகத்தில் வாழ்கிறோம்.

Life is a form of the mind.

வாழ்வு மனத்தின் அரங்கம்.

Body is another form of mind.

உடல் மனத்தின் மற்றோர் உருவம்.

We live in all of them.

நாம் இவற்றுள் வாழ்கிறோம்.

We may abolish mind, life and body.

மனம், உயிர், உடலை அழிக்கலாம்.

It may take us to Existence, Consciousness and Bliss.

இவை நம்மை சத், சித், ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லலாம்.

Then no divine life is possible on earth.

அப்பொழுது உலகில் தெய்வீக வாழ்வில்லை.

We are from the Transcendent.

நாம் இறைவனிலிருந்து வருகிறோம்.

We live in the cosmos.

நாம் பிரபஞ்சத்தில் வாழ்கிறோம்.

We must abolish cosmic life.

நாம் பிரபஞ்ச வாழ்வை அழிக்க வேண்டும்.

That enables us to re-become the Transcendent.

அதன் மூலம் நாம் மீண்டும் இறைவனாகலாம்.

This solution is inescapable.

இது தவிர்க்க முடியாதது.

If an intermediary link exists we can escape it.

இடைப்பட்ட நிலையென ஒன்றிருந்தால், இதனின்று தப்பலாம்.

It can explain each to the other.

அது ஒன்றை மற்றதற்கு எடுத்துரைக்கும்.

Then the higher can be realised in the lower.

அப்பொழுது தாழ்ந்த நம்முலகில் உயர்ந்தது பலிக்கும்.

Existence, Consciousness and Delight can then be realised in mind, life and body.

சத், சித், ஆனந்தம் அங்ஙனம் மனம், உயிர், உடலில் பலிக்கும்.

Page No.143, Para No.4

 

The intermediate link exists.

இடைநிலை இருக்கிறது.

We call it the Truth-Consciousness.

அதை சத்தியத்தின் ஜீவியம் என்போம்.

Its other name is Supermind.

அதை சத்தியஜீவியம் என்போம்.

It is a principle superior to mentality.

அது மனப்போக்கைவிட உயர்ந்தது.

It exists, acts in the fundamental truth.

அடிப்படையான சத்தியத்திலிருந்து அது செயல்படுகிறது.

It does so in the unity of things.

அது ஐக்கியத்தினின்று செயல்படும்.

It does not proceed like the mind.

அது மனம்போல் நடப்பதில்லை.

Mind acts on appearances.

மனம் தோற்றத்தைக் கண்டு செயல்படும்.

It does so by phenomenal divisions.

தோற்றம் பிரிக்கிறது. அதையே மனம் உண்மையாகக் கொள்கிறது.

We started with a premise.

நாம் ஓர் அடிப்படைக் கொள்கையுடன் ஆரம்பித்தோம்.

It compels the creation of the Supermind.

அது சத்தியஜீவியம் உண்டுஎனக் கூறுகிறது.

To that premise, it is a logical necessity.

அப்படிக் கூறும் அவசியம் ஏற்படுகிறது.

Sachchidananda is spaceless and timeless.

சச்சிதானந்தம் காலத்தைக் கடந்த அனந்தம்.

It is absolute conscious existence of bliss.

அது தன்னையறியும் பிரம்மமான பிரபஞ்ச வாழ்வின் ஆனந்தம்.

The world is its contrary.

உலகம் அதற்கெதிரானது.

It is an extension in Time and Space.

காலத்தாலும், இடத்தாலும் உலகம் இயங்குகிறது.

It is a movement, a working out.

அது சலனம்; தன் செயலால் வெளிப்படும் சலனம்.

It is a development of relations.

அது - உலகம் - உறவால் ஏற்படும் உருவகம்.

It develops possibilities by causality in Time and Space.

காலத்துள் ஏற்படுத்தும் வாய்ப்புகளின் காரண-காரியம் அதன் சிருஷ்டி.

At least, it appears so.

வாழ்வு அப்படிப்பட்ட தோற்றத்தைத் தாங்கி நிற்கிறது.

Causality has a true name.

காரண-காரியத்திற்கு உண்டான உண்மையான பெயருண்டு.

It is Divine Law.

அது தெய்வீக நியதி.

The law has an essence.

அச்சட்டத்திற்குச் சாரம் உண்டு.

It is an inevitable self-development of the truth.

சத்தியம் தவிர்க்க முடியாமல் தன்னை வளர்ப்பதால் எழும் நிலை தெய்வீக நியதி.

It is the truth of the thing.

அது விஷயத்தின் சத்தியம்.

It is idea.

அது எண்ணம்.

It is the very essence of what is developed.

வளர்ந்து எழுந்ததின் வண்ணச்சாரம் அது.

There is the infinite possibility.

இவ்வாய்ப்புகள் அனந்தம்.

There is the relative movement out of that stuff.

வாழ்வு என்ற விஷயத்தினின்று உறவான அசைவின் உற்பத்தி அது.

What develops thus is Knowledge-Will.

அப்படி எழுவது ஞான-உறுதி.

Or it is Consciousness-Force.

அல்லது ஜீவிய-சக்தி.

All manifestation is a play.

சிருஷ்டி லீலை.

It is a play of Consciousness-Force.

அது ஜீவிய-சக்தியின் லீலை.

It is the essential nature of its essence.

அது சாரமான சுபாவத்தின் சுருக்கம்.

The Knowledge-Will develops.

ஞான-உறுதி வளர்கிறது.

It cannot be mental.

அது மனத்துடையதன்று.

The mind does not know that Law.

மனம் அறியாத சட்டமது.

Nor does it possess it.

அது மனத்திற்குச் சொந்தமாகாது.

Indeed, it is possessed by that Law.

கவனித்துப் பார்த்தால் மனத்தை இச்சட்டம் ஆள்கிறது.

And it is governed by it.

இந்தச் சட்டத்தின் ஆட்சிக்குட்பட்டது மனம்.

It is one of the results.

இது அதனால் எழும் பலன்களில் ஒன்று.

It moves in the phenomena of self-development.

தானே மலர்வதின் தோற்றத்தில் அது உறையும்.

It does not move at its roots.

அது வேரான ஆழத்தைத் தொடாது.

It observes as divided things.

உலகை அது பலப்பலப் பொருள்களாகப் பார்க்கிறது.

To it the results of development are divided.

அதற்கு இந்த வளரும் மாற்றம் பிரிந்து நிற்கும் பிரகிருதியாகும்.

It strives in vain to arrive at the root of things.

ஆழத்தில் வேரைத் தொட அது முயல்வது பலன் தராது.

The root is the source and reality.

ஆழம் வேர்; அதுவே உற்பத்தி ஸ்தானமான சத்தியம்.

This Knowledge-Will develops all.

இந்த ஞான-உறுதி அனைத்தையும் சிருஷ்டிக்கிறது.

It must be in possession of the unity of things.

இதற்குப் பொருள்களின் ஐக்கியம் உண்டு.

It must manifest the multiplicity out of that unity.

ஐக்கியத்தினின்று எழும் அனந்தத்தை அது வெளிப்படுத்தும்.

But Mind is not in possession of that unity.

மனத்திற்கு அவ்வைக்கியம் கட்டுப்படாது.

Its possession is imperfect.

மனம் அதை ஆள முயல்வது முடிவதில்லை.

It possesses a part of the multiplicity.

பலவான உலகின் பகுதியே அதன் உரிமை.

Page No.144, Para No.5

 

Mind fails in these conditions.

இந்த நிலையில் மனம் வேலை செய்யாது.

Something else can succeed when mind fails.

மனம் தவறுமிடத்தில் மற்றது ஜெயிக்கும்.

Such a one is there.

அப்படிப்பட்டதுள்ளது.

It is Supermind.

அது சத்தியஜீவியம்.

That principle is Sachchidananda.

அது சச்சிதானந்த தத்துவம்.

But Sachchidananda has two poises.

ஆனால் சச்சிதானந்தத்திற்கு இரு நிலைகள் உள்ளன.

In one it rests in its pure infinite invariable Consciousness.

தூய்மையான, ஆனந்தமான, மாற்றமற்ற ஜீவியத்திலுறைவது ஒன்று.

Another proceeds out of its primal status.

அடுத்தது அந்த முதல் நிலையினின்று எழுவது.

It is a form of Energy.

இது சக்தி ரூபம்.

It is an instrument of cosmic creation.

இது பிரபஞ்ச சிருஷ்டியின் கருவி.

This bases upon the first.

இது முந்தையதின் அடிப்படையிலுறைவது.

This is in the first as a continent.

இது முந்தையதினுள் அடங்கியது.

Consciousness is an essential aspect of power.

ஜீவியம் சக்தியின் முக்கிய அம்சம்.

It is a pure power of existence.

பிரபஞ்ச வாழ்வின் தூய்மையான சக்தியது.

Force is another such.

சக்தி அப்படிப்பட்ட ஒன்று.

Those Powers take the form of Knowledge and Will.

அந்த சக்திகள் ஞானம், உறுதிஎன்ற ரூபங்களை ஏற்கும்.

They create the world of relations.

உறவாலான உலகை அவை சிருஷ்டிக்கின்றன.

That world is in the extension of Time and

Space.

அவ்வுலகம் காலம், இடமென்ற நீட்சியாலானது.

This Knowledge and this Will must be one.

இந்த ஞான-உறுதி ஒன்றேயாகும்.

They are infinite, all-embracing, all possessing.

அவை அனந்தம்; அனைத்தையும் தழுவுவது; அனைத்தையும் ஆட்சி செய்வது.

It is all forming.

இது அனைத்தையும் உருவகப்படுத்துவது.

It holds what it casts into movement and form.

உருவமளித்து, சலனமாக வெளிப்படுத்துபவை அனைத்தையும் அதுவே தாங்கும்.

It holds them eternally.

அப்படி காலத்திற்கும் அது செயல்பட வல்லது.

Then the Supermind is Being.

எனவே சத்தியஜீவியம் என்பது புருஷன்.

It is Being moving into determinative self-knowledge.

புருஷன் உலகை நிர்ணயிக்கும் சுய-ஞானம் பெறுவது சத்தியஜீவியம்.

It perceives certain truths of itself.

அதன் சத்தியத்துள் சிலவற்றை அது கண்ணுறும்.

It wills to realise them.

அவற்றைச் சித்திக்க முயலும்.

It does so in a temporal, spatial extension.

காலத்திலும், இடத்திலும் சித்திப்பது நோக்கம்.

It is its own timeless, spaceless existence.

அது அதனுடைய நீட்சி; காலத்திலும் இடத்திலும் உள்ள நீட்சி.

What takes form is in its own being.

உருவகம் பெறுவது அதனுடைய ஜீவனில் உண்டாகிறது.

It does so as self-knowledge.

அது சுய-ஞானத்தால் அப்படிச் செய்கிறது.

It is Truth-Consciousness.

அது சத்தியஜீவியம்.

It is Real-idea.

அது முழு எண்ணம்.

That self-knowledge is also its self-force.

சுய ஞானம் சுய சக்தி.

It fulfills or realises itself.

அது தன்னைப் பூர்த்தி செய்து சித்தி பெறுகிறது.

It is so inevitably in Time and Space.

அது தவிர்க்க முடியாதபடி காலம்-இடத்தில் செயல்படுகிறது.

Page No.144, Para No.6

 

This, then, is the nature of the Divine Consciousness.

இதுவே தெய்வீக ஜீவியத்தின் சுபாவமாகும்.

It creates in itself all things.

அது தன்னுள் அனைத்தையும் சிருஷ்டிக்கிறது.

It does so by a movement of its conscious-force.

தன் சித்-சக்தியின் அசைவால் அதை அது செய்கிறது.

It governs their development.

அவற்றின் வளர்ச்சியை அது ஆள்கிறது.

It is done by self-evolution.

சுய பரிணாமத்தால் அதை அது செய்கிறது.

The inherent knowledge-will does it.

பிறப்பில் உள்ள ஞான-உறுதியால் அதைச் செய்கிறது.

It is the truth of existence.

அதுவே பிரபஞ்ச வாழ்வின் சத்தியமாகும்.

Or, it is called real-idea.

அல்லது அதை முழு-எண்ணம் எனலாம்.

It is real-idea that formed them.

முழு எண்ணமே அவற்றை உருவகப்படுத்தியது.

A Being is thus Conscient.

ஜீவன் அவ்வகையாகத் தன்னையறியும்.

It is what we call God.

நாம் கடவுள் என்பது அதுவே.

He is obviously omnipresent.

கடவுள் எங்கும் நிறைந்தவர்எனத் தெளிவாகத் தெரிகிறது.

He is omniscient and omnipotent too.

கடவுள் எல்லாம் அறிந்தவர்; எல்லாம் வல்லவர்.

All forms are forms of His Conscious Being.

எல்லா ரூபங்களும் அவருடைய தன்னையறியும் ஜீவனின் ரூபங்கள்.

They are created by its force of movement.

சக்தியின் சலனத்தால் அவை சிருஷ்டிக்கப்பட்டன.

That movement is in its own extension.

சலனம் என்பது அதன் சொந்த நீட்சியே.

That extension is called Space and Time.

இந்த நீட்சிக்குக் காலம், இடம் எனப் பெயர்.

Therefore He is omnipotent.

எனவே அவர் எல்லாம் வல்லவர்.

All things exist in His Conscious Being.

எல்லாம் அவர் தன்னையறியும் ஜீவனில் உள்ளன.

They are formed by it.

அவற்றை உருவகப் படுத்தியது அதுவே.

They are possessed by it.

அவற்றை அது தன்னுள் கொண்டது.

Therefore He is omniscient.

எனவே அவர் எல்லாம் அறிந்தவர்.

This is all-possessing consciousness.

இது அனைத்தையும் உட்கொண்ட ஜீவியம்.

It is also all-possessing Force.

மேலும் இது அனைத்தையும் உட்கொண்ட சக்தி.

It is an all-informing Will.

அனைத்துக்கும் அறிவுறுத்தும் உறுதியது.

Our Will and Knowledge are at war.

நம் ஞானமும், உறுதியும் மோதுகின்றன.

Supramental Will and Knowledge are not at war.

சத்தியஜீவிய ஞானமும், உறுதியும் மோதுவதில்லை.

They are not different.

அவை மாறுபட்டவையல்ல.

They are one movement.

அவை ஒன்றுபோல் இயங்குபவை.

They are of the same being.

அவை ஒரே ஜீவனுக்குரியவை.

It cannot be contradicted by other wills.

மற்றவரால் அதை எதிர்க்க முடியாது.

Nor force or consciousness from outside can contradict this will.

எந்த சக்தியும், ஜீவியமும் வெளியிலிருந்து வந்து அதை மறுக்க முடியாது.

All energies are not other than that.

எல்லா சக்திகளும் அது தவிர வேறில்லை.

Even formation of knowledge is so.

ஞானத்தின் உருவகங்களும் அப்படிப்பட்டவை.

They are merely the play of the one-all determining Will.

அத்தனையும் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் ஒரே உறுதியின் லீலையாகும்.

It is the all-harmonising Knowledge.

அனைத்தையும் சுமுகமாக்கும் ஞானம் அது.

We dwell in the particular.

நாம் குறிப்பிட்டதிலிருக்கிறோம்.

It is divided.

அது துண்டு, துண்டாக உள்ளது.

We cannot see the whole.

நம்மால் முழுமையைக் காண முடியாது.

We, therefore, see a clash of Wills and forces.

எனவே உறுதியும், சக்தியும் மோதுவதைக் காண்கிறோம்.

The Supermind envisables them differently.

சத்தியஜீவியம் அவற்றை வேறு வகையாகக் காண்கிறது.

To it, there is a predetermined harmony.

அதன் சுமுகம் முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்டது.

It is always present to it.

அதற்கு அச்சுமுகம் எப்பொழுதும் தெரியும்.

It is not the conspiring elements.

இவை சதி செய்யும் சக்திகளில்லை.

It is a totality of things.

அது பொருள்களின் முழுமை.

They are eternally subject to their gaze.

அதன் பார்வைக்கு அவை என்றும் புலப்படும்.

Contd.....

தொடரும்.....

****

****


 


 


 


 


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut