Skip to Content

08.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

எனக்கு அன்னையைப்பற்றிப் பல வருடங்களாகத் தெரியும். நான் அன்னையை மட்டுமே வணங்கிக்கொண்டிருப்பவள். கடந்த ஏப்ரல் மாதத்தில் என் அக்கா வேலைக்குச் சென்றிருந்தார். திடீரென வேலை செய்யும் இடத்திலேயே மயக்கமடைந்து விழுந்துவிட்டார். அந்நிலையிலேயே கம்பெனியில் இருந்து வீட்டுக்கு ஜீப்பில் கொண்டுவரப்பட்டார். அவரை அந்நிலையில் கண்டவுடன் என் மனம் சட்டென அன்னையை நினைத்தது. உடனே நான் அன்னையிடம் வேண்டிக்கொண்டேன். ஊரிliருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ஹாஸ்பிடliல் சேர்வதற்குள் அவரின் மயக்கம் தெளிந்து, பேச ஆரம்பித்துவிட்டார். மருத்துவர் பரிசோதித்துப் பார்த்து ஒன்றும் இல்லை எனக் கூறி, 3 பாட்டில் குளுகோஸ் ஏற்றி, மாலையே வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

நினைத்தமாத்திரத்தில் ஓர் அற்புதத்தை ஏற்படுத்திக் கொடுத்த அன்னையின் அன்பை நினைக்கும்பொழுது கண்களில் நீர் வருவதைத் தவிர என் நன்றியை தெரிவிக்க வேறு வழியில்லை.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனத்திற்கு மௌனம் சித்திப்பது மௌனத்தின் ஆன்மீக அம்சம் சித்திப்பதாகும். அது மனம் சலனமற்றிருப்பதைக் காட்டும். அதை "ஆன்மீக மௌனம்' மனத்தில் குடிகொண்டது என்பர்.

மௌனம் சித்திப்பது

மௌனத்தின் ஆன்மீக அம்சம் சித்திப்பதாகும்.


 


 



book | by Dr. Radut