Skip to Content

02. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

 தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. ஒருவர் பொறை இருவர் நட்பு.
    (பொறை - சகிப்புத் தன்மை)
    • ஒருவர் சமர்ப்பணம் பலர் தவற்றைத் திருத்தும்.
  2. இருதலைக் கொள்ளி எறும்பு போலவென்பார்.
    • எங்கு போனாலும் அங்கு அன்னை முன்பு போய் காத்திருப்பார்.
  3. உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்.
    (அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - வழக்கிலுள்ள பழமொழி).
    • அகத்தின் அன்னை முகத்தில் ராஜகம்பீரம்.
      பிரார்த்தனையின் பலன் சமர்ப்பணத்தில் தெரியும்.
  4. மகனறிவு தந்தை அறிவு.
    • அன்னையை ஏற்ற மகன் தந்தையறியாததையும் அறிவான்.
  5. தமக்கு மருத்துவர் தாம்.
    • எல்லா வியாதிகட்கும் மருத்துவம் "அன்னை நினைவு".

தொடரும்....

* * * *

ஸ்ரீ அரவிந்த சுடர்

அழிச்சாட்டம் உடலி ன் சக்தியை நிதானப்படுத்துகிறது.

 



book | by Dr. Radut