Skip to Content

07. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. இலட்சியவாதிகள், தீவிரவாதிகள் அரசியலும், போரிலும் ஒரே குறியாக தங்களை மறந்து சாதிக்கின்றார்கள். அவர்கள் சாதனை அறியாமையின் சாதனை என்கிறார் பகவான்.

    அறியாமையின் சாதனை அளவுகடந்த சாதனை.

    • The Life Divineஇல் The என்ற சொல் 31463 முறை வருவதாக கம்ப்யூட்டர் கணக்கெடுத்துள்ளது. இது மனிதனுக்கு எளிதன்று. ஆனால் கம்ப்யூட்டர் வருமுன் இதுபோன்று ஷேக்ஸ்பியரில் சொற்களை scholars ஆராய்ச்சியாளர் கணக்கெடுத்துள்ளனர்.
      • இது அளவுகடந்த சாதனை.
      • இதை அறிவின் சாதனைஎனக் கூறலாமா, அறியாமையின் சாதனை என்று குறிப்பிடலாமா?
    • மனித வாழ்வு முழுவதும் அறியாமையால் (unconscious) ஆனது என அன்னை கூறுகிறார்.
    • இலட்சியவாதிகள் எதையும் இலட்சியமாகச் செய்வார்கள்.
    • தீவிரவாதிகள் எதையும் தீவிரமாகச் செய்வார்கள்.
    • இலட்சியவாதியும், தீவிரவாதியும் அபூர்வம்.
      அவர்கள் சாதனை அறியாமையின் சாதனையெனில் நம்மால் எதையும் சாதிக்க முடியாமருக்கி றோம்.
      எது அறிவின் சாதனை?
      உலகம் முழுவதும் அறியாமையால் செயல்படும்பொழுது எதை அறிவின் சாதனைக்கு உதாரணமாகக் கூறுவது?
    • முழுமையின் சாதனை அறிவின் சாதனை.
    • பகுதியின் சாதனை அறியாமையின் சாதனை.
    • நாட்டிற்குச் செய்வது முழுமைக்குச் செய்யும் வேலை.
      ஒரு துறையில் செயல்படுவது பகுதியில் செயல்படுவது.
      குரியன் பால்பண்ணையில் செய்தது, சுப்ரமணியம் பசுமைப் புரட்சியில் செய்தவை பகுதியில் ஈடுபடுவது.
      மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் செய்தது முழுமையில் ஈடுபடுவது.
      Tom Peters டாம் பீட்டர்ஸ் சுதந்திரத்திற்காகச் செய்த வேலை நாட்டையே பகுதியாக்கவல்லது.
      சம்பாதிப்பவன் குடும்பத்தைப் பாதுகாப்பான் எனினும், சம்பாத்தியம் குடும்பத்தின் பகுதி.
      குடும்ப கௌரவம் முழுமை.
      பள்ளி, கல்லூரியில் பெருஞ்சேவை செய்யும் ஆசிரியர்கள் பகுதியில் செயல்படுபவர்கள்.
      கல்வி முன்னேறப் பாடுபடுபவர்கள் கிளென்டோமான் போன்றவர் முழுமைக்குப் பாடுபடுபவர்கள்.
      போர்க்களத்தில் போரிட்ட ஆயிரம் கேப்டன், மேஜர், கர்னல், போன்றவர் பகுதி.
      உலகை இருளிருந்து விடுவிக்கப் போரிட்ட சர்ச்சில் முழுமையில் தன்னை இழந்தார்.
      மிஸஸ் பென்னட் பெண்கள் திருமணத்திற்காக முழுமூச்சுடன் பாடுபட்டது பெருஞ்சேவை என்றாலும் பகுதி.
      எலிசபெத் குடும்பம் தாழ்ந்ததுஎன அறிந்து, அதை உயர்த்த தன் மனத்தை உயர்த்தியதால், அவமானத்திலிருந்து குடும்பம் விடுபட்டு, அதிர்ஷ்டத்தில் நுழைந்தது. லேடி காதரீனை மிஸஸ் பென்னட்டால் எதிர்கொள்ள முடியாது. எலிசபெத் குடும்ப முழுமைக்குச் செய்த சேவையிது.
  2. தெரிய வேண்டியது தெரியாதது அறியாமை. "நாம் யார்" எனத் தெரிந்து கொள்ள விருப்பப்படாமல், "தான்" - அது - யார்என்பதை மறக்கும் அளவுக்குப் போவது பகவான் விளக்கப்படி அறியாமையாகும்.

    தெரிய வேண்டியது தெரியாதது அறியாமை

    • 20வருஷம் பள்ளித் தலைமையாசிரியராக வேலை செய்து, அப்பள்ளியின் சட்டங்களை அறியாதது அறியாமை.
    • ஓர் ஆபீசில் குமாஸ்தாவாகச் சேர்ந்து, பிரமோஷன் வரும் என 9 வருஷம் காத்திருந்து, பின் டிபார்ட்மெண்ட் டெஸ்ட், அக்கௌண்ட் டெஸ்ட் பாஸ் பண்ணிய பிறகுதான் பிரமோஷன் வரும்என்று ஒருவர் கேள்விப்படுவது அறியாமையாகும்.
    • எட்டாத உயரத்திலிருந்து வரன் வர 25 வயதுவரைக் காத்திருந்து, வரன் வாராதபொழுது, இப்படியேயிருந்தால் திருமணமாகாது என அறியாதது அறியாமை.
    • மாமா மகனை "உன் வீட்டை எனக்குக் கொடு'' எனக் கேட்பது அறியாமையென அறியாதது அறியாமை.
    • தன் இஷ்டப்படி வாழ்க்கையை நடத்தினால் வாழ்வு சிதையும் என 53ஆம் வயதில் அறியாதது அறியாமை.
    • யார் வீட்டு விசேஷத்திற்கும் போகாதவர், தம் வீட்டு விசேஷத்திற்கு அனைவரும் வரவேண்டும்என எதிர்பார்க்கிறார். அது அறியாமை.
    • முதலில்லாமல் தொழில் செய்ய ஆர்வம் கொள்வது சரியில்லை.
    • பிறர் மனம் புண்படப் பேசி உதவி கேட்பவர் அறிவுடையவரில்லை.
    • தமக்கு ஓர் உதவி வேண்டும் என்றபொழுது யாரிடமிருந்து அதை எதிர்பார்க்கிறாரோ, அவரைக் கூப்பிட்டனுப்பினால் வரமாட்டார் என்று அறியாதவர் உண்டு.
    • பயத்தால் பீடிக்கப்பட்டவர் போலீஸில் வேலை தேடக்கூடாது.
    • இரத்தத்தைக் கண்டு மயக்கமடைபவர் டாக்டராக முயலக்கூடாது.
    • பெரும்பணக்காரர் மகனிடம் பொறுப்பைக் கொடுத்தபின் மரியாதை எதிர்பார்ப்பது நடப்பதில்லை.

    இது போன்று அளவற்ற காரியங்களுண்டு. அவற்றுள் ஈடுபட்டு தம்மை மறப்பவர் பலருண்டு. பொதுவாக மனிதன் அப்படிப்பட்டவன். நாம் இவற்றை அறியாமைஎன்கிறோம். பகவான் இவற்றை (unconsciousness) கண்மூடித்தனம் என்கிறார்.

    டார்சி உயரமானவன், ஓரளவுக்கு அழகானவன்.
    £2000 வருமானமுள்ள பென்னட் ஊரில் £10,000 வருமானமுள்ள தனக்கு மரியாதை இருக்கும் என நினைக்கிறான்.
    £50 வருமானமுள்ள எலிசபெத் தன்னைத் தயாராக மணப்பாள் என நினைக்கிறான்.
    எவருடனும் பழகாவிட்டால் அது தனக்கு மரியாதையென நினைக்கிறான்.
    £4000 வருமானமுள்ள பிங்லி £10,000 வருமானமுள்ள தனக்குக் கட்டுப்படுவான் என்று நினைக்கிறான்.
    பிங்லியின் சகோதரி எந்த நேரமும் தன்னைத் திருப்திபடுத்த நினைப்பதுபோல் மெரிடன் கிராமத்தில் அனைவரும் நினைப்பார்கள் என நினைக்கிறான்.
    பிங்லியுடன் 10 மாதம் கழித்துத் திரும்பி வந்த பொழுது கிட்டிக்குத் தான் யார் என்று தெரியவில்லை என அவனுக்குத் தெரியாது.
    "நான் டார்சியை மணக்க முடிவு செய்துள்ளேன்'' என எலிசபெத் தகப்பனாரிடமும், தமக்கையிடமும் கூறிய பொழுது இருவரும் கசந்து எதிர்த்தார்கள் என டார்சிக்குத் தெரியாது. தன் மனம் இரவு பகலாக எலிசபெத்திற்காக ஏங்குவது போல் எலிசபெத் தனக்காகக் காத்திருப்பாள் என எதிர்பார்க்கிறான்.

    உலகை மறந்து உள்ளுணர்வில் கலந்து மனச்சாட்சியுடன் போராடி உறக்கமின்றி, நிம்மதியின்றி எதையும் கவனிக்காமல் வேதனைப்படும் தன் நிலையை ஏற்று எலிசபெத் பாராட்டுவாள் என்ற கனவுலகில் டார்சி சஞ்சரிக்கிறான்.

    அவள் அவனை மறுக்கிறாள்.
    "உன்னைத் திருமணம் செய்ய நான் சம்மதிக்கமாட்டேன்.
     நீ கர்வி, சுயநலம், உதாசீனம் செய்யும் உதவாக்கரை.
    உன்னை மணக்கும் படி என்னை எவராலும் கூற முடியாது'' என்ற பொழுது தன் நிலையறிந்து தன் அறியாமையை டார்சி உணர்கிறான்.
    உலகின் நிலையறியாமல் உள்ளே சென்று மறந்த நிலை unconscious அறியாமை என்பது பகவான் விளக்கம்.

  3. மனத்தில் நெறியின்றி திருமணமாகாமலிருப்பது உணர்வை விஷமாக்கி வக்ரமாக்கும். தூய்மையான மனம் உடல் தன் நெறியை கற்பாகவோ, பிரம்மச்சரியமாகவோ வெளிப்படுத்தினால் உணர்வின் நிறைவு உடலின் சுவையாகி அன்னை ஜீவியத்தை வெளிப்படுத்தும்.

    உணர்வின் நிறைவு உடலின் சுவையாவது அன்னை ஜீவியம்.

    உணர்ச்சி என்பது இரு வகைப்படும். உயர்ந்த உணர்ச்சி இதயத்திற்குரியது (feeling, emotion). தாழ்ந்த உணர்ச்சி நரம்புக்கு உரியது. இது கிளர்ச்சி.

    • உணர்ச்சி பெருகுவதால் உள்ளம் உயரும்.
    • கிளர்ச்சி பெருகி தளர்ச்சியை உண்டு பண்ணும்.

    மேல்நாடுகளில் திருமணம் பெரும்பாலும் மறைந்து வருகிறது. இந்தியாவில் விவாகரத்து அமெரிக்காவில் 1950இல் இருந்ததைப் போல் வளர்கிறது.

    சமூகம் எவ்வளவு மாறினாலும் காலத்திற்கேற்ப மக்கள் மாறிக்கொள்வார்கள்.

    பொதுவாக, காலம் மாறும்பொழுது மக்களுக்குப் பிரச்சினை நிரந்தரமாக இராது. ஆனால் கற்பு, பிரம்மச்சர்யம், விஸ்வாசம், உண்மை, நியாயம், நாணயம் ஆகியவை காலம் மாறுவதால் பாதிக்கப்படுவதில்லை. அவை காலத்தைக் கடந்தவை. சத்து, சித்து, ஆனந்தம், அனந்தம், சாஸ்வதம், மௌனம், சாந்தி, சத்தியம் ஆகியவை என்றும் அழியாதவை. அவற்றிலிருந்து எழுவதால் இப்பண்புகள் அழியாதவை.

    • கற்பு பண்புஎனில் அது பெண்ணுக்கு மட்டும் உரியதில்லை. அனைவரும் ஏற்காத பண்பு, பண்பாகாது. ஒரு வரலாற்று ஆசிரியர் கற்புஎன்ற சொல் எல்லா மொழிகளிலும் பெண்ணுக்குரியது. ஆணுக்குக் கற்பு என்ற சொல் எந்த மொழியிலும் இல்லை எனவும், சொத்து உரிமைக்காக ஏற்பட்ட சொல் எனவும் அதை விவரிக்கிறார்.
    • ஆன்மீக வாழ்வில் கற்பு, பிரம்மச்சரியம் என்பவை உயர்ந்த கருத்துகள். கற்பு என்பது நெறி. எந்த நெறியும் உயர்ந்தது, உயர்ந்த பலன் தருவது. பிரம்மச்சரியம் கல்விக்கு இன்றியமையாதது. அதுவும் ஆன்மீகக் கல்வி பயில பிரம்மச்சர்யம் அத்தியாவசியம். நெறி என்பதை விரதம், கட்டுப்பாடு எனலாம்.

      எந்த விரதத்திற்கும் உயர்ந்த பலனுண்டு.
      கற்பு நெறி நெறிகளில் உயர்ந்தது.
      பெய்யென மழை பெய்விக்கக்கூடியது.

    • நெறி என்பது நல்லது, கெட்டதைப் பிரித்து, கெட்டதை விலக்கி, நல்லதை முழுவதும் பயன்படுத்த முனைவது. நல்லதை நாடினால் கெட்டது உடன் வரும் என்பது ரிஷிகள் அனுபவம். அதனால் நெறி என்பது நல்லதையும், கெட்டதையும் விலக்கி, உணர்ச்சியற்று செயல்படுவது. இதுவரை தவம் அப்படிப்பட்டது. அது பெற்ற பலன் பிரம்மாண்டமானது, மோட்சம்.
    • பகவான் வழி நல்லதையும், கெட்டதையும் மனம் ஏற்றால் தவறு வரும். மனத்தை விலக்கி, ஆன்மா ஏற்றால் கெட்டதானாலும் நல்லதேவரும் என்றார். கற்பின் அடிப்படை விஸ்வாசம், உடலும் மனமும் தூய்மையாக இருப்பது. அதைச் சாதிக்க நாம் நடைமுறையில் பல கட்டுப்பாடுகளை ஏற்று, பலவற்றை விலக்குகிறோம்.

      எதையும் விலக்காமல் எல்லாவற்றையும் நல்லதாக ஆன்மாவில் ஏற்றால் கற்பின்நிலை உயரும்.

    பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்தபின் நிலைமை இது போல் சற்று மாறியுள்ளது. இந்நிலையில் மனமும், உணர்வும், உடலும் தூய்மையானால், ஆண்மகனும் அதுபோன்ற தூய்மையை நாடினால் கற்பு என நாமறிவது நெஞ்சை நிறைவு செய்து, நாடி நரம்பில் சென்று உடலையும் அடைந்து ஆன்மீகச் சுவையெழும். மாடு நெல்லை, அரிசியை சாப்பிடும். நாம் அரிசியை சமைத்து, சாதமாகச் சாப்பிடுகிறோம். அதையே பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புலவு என்றும் சாப்பிடுகிறோம். அரிசியிலிருந்து பொங்கல் வரை ருசி மாறும். கற்பு இன்று அரிசி போலானால், கற்பின் உயர்ந்த கட்டம் சர்க்கரைப் பொங்கல், புலவு போல் உயரும்.

தொடரும்.....

 

ஜீவிய மணி
 
நடந்ததின் பயன்பெறுவது ஆத்மா.

 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பொங்கி வழியும் சக்தி நிறைவளிக்கின்றது. நம் நிலைக்குரிய சக்தி தாழ்ந்த நிறைவையளிக்கும். அடுத்த உயர்ந்த நிலைக்குரிய சக்தி, இந்நிலையில் உயர்ந்த நிறைவைத் தரும்.
(உ.ம்.)
(1) வயிறு நிறைய உணவு —> அன்போடு பரிமாறும் உணவு.
(2) எண்ணங்கள் நிறைந்த மனம் —> மௌனம் குடிகொண்ட மனம்.
 
நிறைவு நிலைக்குரியது.

 



book | by Dr. Radut