Skip to Content

08. Agenda

Kennedy's death is a setback to the entire history of the earth

பூமாதேவியின் வரலாற்றிற்கே ஒரு தடையாக கென்னடி மரணம் அமைந்தது.

- அஜெண்டா

 

  • உலக வரலாற்றில் முன்னேற்றும் நிகழ்ச்சிகளுண்டு. அவை புரட்சிகள். அவற்றைத் தடைசெய்யும் நிகழ்ச்சிகளுண்டு.
    • ஏசுவை சிலுவையிலறைந்தது.
    • இந்தியாவில் ஜாதியையும், தீண்டாமையையும் உற்பத்தி செய்தது.
    • உலகப் போர்கள்.
    • நாடு அடிமைப்படுவது.
    • இயற்கையின் அட்டகாசமான பூகம்பம், புயல், கடல்கொந்தளிப்பு போன்றவை.
  • கென்னடியின் மரணமும், குருஷேவின் பதவி இழப்பும் அதுபோன்றவை என்கிறார் அன்னை.
    கென்னடியின் நண்பர் அன்னையை சந்தித்தார்.
    அன்னை சத்தியஜீவியத்தைப் பற்றிப் பேசினார்.
    சத்தியஜீவியம் ஒருவருக்கு சித்தித்ததை எப்படி அறியலாம் என அவர் கேட்டார். அன்னை மூன்று அடையாளங்களைக் கூறினார். அவை,
    • Supreme பரமாத்மாவை அடைவது.
    • சமத்துவம்.
    • பிரம்மம் சித்திப்பது.
    கென்னடி அன்னையை தரிசிக்க அவர் ஏற்பாடு செய்ய விழைந்தார்.
    அந்த நேரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    கென்னடி அன்னையை தரிசித்திருந்தால், உலகம் விரைவாக முன்னேறியிருக்கும்.
    அதைத் தடைசெய்த தீய சக்திகள் செய்த சூட்சுமம் கொலை.
  • குருஷேவுக்கு 29 வயது வரை எழுதப் படிக்கத் தெரியாது.
    அதன்பின் படித்து உலக வல்லரசின் தலைவரானார்.
    ஆரோவில்லைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஆதரவுதர சம்மதித்தார்.
    குருஷேவின் ஆதரவு ஆரோவில்லுக்கிருந்திருந்தால், வரலாற்றின் போக்கு மாறியிருக்கும்.
    அந்த நேரம் அவர் பதவியை இழந்தார்.
    அதுவும் தீய சக்திகளின் செயல்என்கிறார் அன்னை.
  • இந்தியா ஜகத்குருவாவது சத்தியஜீவன் பிறப்பதற்கு அவசியம்.
    பகவான் ஸ்ரீ அரவிந்தரின் 4ஆம் கனவு ஜகத் குரு.
    நாடு ஒன்றுபடாமல் ஜகத்குருஆக முடியாதுஎன்பதால் 800 ஆண்டுகட்குமுன் முஸ்லீம் படையெடுப்பும், 200 ஆண்டுகட்குமுன் ஆங்கிலேயர் படையெடுப்பும் நடந்தன.
    1947இல் நாடு முழுமையடைந்தது. அன்னை அம்முழுமையில் பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பூடான், நேப்பாள், சிக்கிம், அந்தமான், இலங்கை ஆகியவற்றையும் சேர்த்துவிட்டார்.
    நாட்டுப் பிரிவினை இந்தியா ஜகத்குருவாவதை ஒத்திப்போட்டுவிட்டது.
    கென்னடி, குருஷேவுக்கு நடந்ததைப் போன்ற நிகழ்ச்சி பாக்கிஸ்தான் ஏற்பட்டது.
    25 ஆண்டில் பாக்கிஸ்தான் பிரியும்என்றார் பகவான்.
    25ஆம் ஆண்டு பங்களாதேஷ் உற்பத்தியாயிற்று.
  • 1916இல் ஐரோப்பிய நாடுகள் இணையும் என்றார் பகவான்.  50 ஆண்டுகள் கழித்து அது நடந்தது.
  • வரலாறு முன்னேறும் நிகழ்ச்சிகள் பல.
    அதைத் தடை செய்யும் நிகழ்ச்சிகள் சில.
    கென்னடியின்மரணம் அந்த வகையைச் சேர்ந்தது.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமூகம் தனி மனிதனுக்காக உற்பத்தி செய்யப்படுகிறது. மனிதன் தன் இஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். பொருள்களைச் சமூகம் உற்பத்தி செய்கிறது. மனிதன் தன் வாழ்க்கையைத் தானே நிர்ணயித்துக் கொள்கிறான்.
 
உற்பத்தி சமூகத்திற்கு; வாழ்க்கை மனிதனுக்கு.
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமூக அந்தஸ்தை நிர்ணயிப்பது படிப்பு. படிக்கும்பொழுது அந்த வயதிற்குரிய கவர்ச்சிகள் ஏராளமாக நம்மை ஈர்க்கும். அவற்றைக் கடப்பவருக்கே படிப்பு, பட்டம். படிப்பு முடிந்த
பின், படிக்காத பழைய நண்பர்களுடன் சகஜமாகப் பழக முடியாது. எந்த வாழ்வோடு (ள்ர்ஸ்ரீண்ஹப் ள்ற்ழ்ஹற்ன்ம்) நாம் கலந்து கொள்ள முடியவில்லைஎன்று நிச்சயமாகத் தெரிகிறதோ, அதன் கவர்ச்சிகள் ஆயிரம். அதுவே பக்தனுடைய நிலையும்.
 
வயதிற்குரிய கவர்ச்சிகளைக் கடந்தால் படிப்பு;
சமூகத்தின் கவர்ச்சிகளைக் கடந்தால் பக்தி.



book | by Dr. Radut