Skip to Content

1. பிரதம மந்திரி

வெண்மைப் புரட்சித் தலைவர் வர்கீஸ் குரியன் ஒரு நாள் ஒரு எளிய விவசாயி வீட்டுக்கு வந்தார். விவசாயிக்கு ஆச்சரியம், சந்தோஷம் தாங்கவில்லை. சற்று நேரம் பால் உற்பத்தியைப் பற்றிப் பேசியபின் குரியன்,
"நாளை உங்கள் வீட்டிற்குப் பிரதம மந்திரி வருகிறார்'' என்றார்.
விவசாயி ஸ்தம்பித்துப் போய்விட்டார். என்ன சமையல் செய்வது என்று தனக்குத் தெரியவில்லை என்றார். விவசாயிக்கு எதுவும் புரியவில்லை. "பிரதமர்  நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டைச் சாப்பிட விரும்புகிறார். அவருக்காக எதுவும் செய்ய வேண்டாம்'' என்றார் குரியன்.
பிரதம மந்திரி எவர் வீட்டிற்கும் போகக்கூடாது என்பது சட்டம் (protocol). இவர் எளிய விவசாயி. பால் கறந்து ஆனந்த் பண்ணைக்குச் சப்ளை செய்கிறார்.
பிரதமர் இவர் வீட்டிற்கு வருகிறார்,
இவர் சாப்பிடும் சாப்பாட்டைச் சாப்பிட விரும்புகிறார் எனில்,
இந்த விவசாயிக்கு இந்தத் தகுதி எப்படி ஏற்பட்டது? ஆனந்த் 60 வருஷ வாழ்வில் பிரதமர் இதுபோல் ஒரு பால் பண்ணை விவசாயி வீட்டிற்கு வந்தது இதுவே முதல் முறை. அதுவே கடைசி முறை.
விவசாயியின் மனநிலை கோணத்தில் இந்நிகழ்ச்சியை விளக்க முடியுமா?
ஒரு பெரிய ஆன்மீகத் தகுதியில்லாமல் பிரதமர் எளியவர் வீட்டிற்கு வர முடியாது என்பது ஆன்மீக உண்மை. இவருக்கு என்ன தகுதியிருந்தது? அது எப்படி வந்தது?
ஆசையற்ற அமைதி ஆன்மாவில் மௌனமானால் இது போன்ற  அற்புதம்  நிகழும்.
நல்லவர், பேராசையற்றவர், நல்ல எண்ணமுள்ளவர் தேவைகள் பூர்த்தியானால் அவர் மனம் அமைதியுற்று, அமைதி ஆன்மாவில் மௌனமாகும். இது தவசி நிலை. இந்திய மண்ணில் பிறந்த எந்த வசதி படைத்த நல்லவர் மனநிலையிது. பரவலானது. இதே மனநிலை அன்பருக்கிருந்தால் அவர் வீட்டிற்குப் பிரதம மந்திரியும், அவரைத் தொடர்ந்து திரண்ட செல்வமும் தொடர்ந்து வரும். இம்மனநிலை பல கோடி சொத்து பெறப் போதும்.
 
******



book | by Dr. Radut