Skip to Content

2. இன்ஜெக்ஷன்

இன்றைய மருத்துவம் செய்வன அன்றாட அற்புதங்கள். அத்துடன் சில அசம்பாவிதங்கள் எழுகின்றன. இடுப்பில் சிறுவனுக்குக் கட்டி வந்தது. இன்ஜெக்ஷன் போட்டனர். என்னமோ தவறு நடந்துவிட்டது. சீழ்பிடித்துவிட்டது. சோதனை செய்த டாக்டர், "எலும்புக்குள் சீழ் நுழைந்துவிட்டது. ஆப்பரேஷன் செய்ய வேண்டும். அது (major operation), பெரிய வேலை'' என்றார்.
 
பையனுடைய பெற்றோர் திகில் அடைந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து, அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு தியான மையம் வந்து பேசினர். 3 நாள் பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள். அவர்கள் கூறியதை நம்பி 3 நாள் பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை முடிந்தது. மேலும் என்ன செய்வது எனப் புரியவில்லை.
 
"மதுரையில் பெரிய டாக்டரிடம் கேட்டுப் பார்க்கலாம்'' என உடனிருந்தவர் சொல்லியதைக் கேட்டு, அவர்கள் மதுரை சென்றனர். நடந்ததைக் கூறினர். டாக்டர் சோதனை செய்து பார்த்தார்.
 
"எலும்பு, அதனுள் உள்ள இடம் எல்லாம் சுத்தமாக இருக்கிறது. ஏன் ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்?'' என்றார் பெரிய ஆஸ்பத்திரி பெரிய டாக்டர்.
 
3 நாள் பிரார்த்தனைப் லிக்கத் தவறியதில்லை.
தவறறியாதது தொடர்ந்த பிரார்த்தனை.
 
*****



book | by Dr. Radut