Skip to Content

05.சாவித்ரி

"சாவித்ரி"

P.49, It is the origin and master clue.

ஆதியும் அதிரகஸ்யமும் அதுவே.

. மௌனம் கேட்ட அந்தரங்கக் குரல்.

. உள்ளுறை உயிருள்ள உருவம்.

. ஆழமறியாத அகண்ட பரப்பு.

. காலத்தில் கண்ணுக்குத் தெரியாத சத்தியம்.

. சத்தியத்தை நோக்கி நகரும் ஆன்மாவின் அசைவுகள்.

. வாழ்வின் பகட்டான இரகஸ்யம்.

. இறைவனெனும் கூட்டில் தேனெனும் பொக்கிஷம்.

. உலகத்தின் உவகைக்கு நம்முள் பொன்னான ஊற்று.

. கனலெனும் கடவுளின் மனிதச் சிறப்பு.

. அழியும் ஆடையில் அழியாத நெருப்பின் ஜோதி.

. மரணத்துள் புதைந்துள்ள மரணமிலா வாழ்வு.

. பிறவா தெய்வாம்சத்தின் பிறவிச் சொரூபம்.

. நம் கதியைக் காக்கும் ஆழத்தின் அமைதி.

. அழியும் உலகின் அழியா வித்து.

. மந்திர இரகஸ்யம் நம்முள் மறைந்துள்ளது.

. வாழ்வின் விரதத்தில் மறைந்துள்ள மந்திரம்.

. சோலையில் தழலாக எரியும் சாட்சி.

. காலத்தை மதிக்கும் ரூபத்தின் குருட்டுச் சுவர்கள்.

. தெரியாத கண்களில் அழியாத ஜோதி.

. சொல்லில் அகப்படாத சொர்க்கத்தின் இரகஸ்யம்.

. அர்த்தமற்ற உலகின் இலட்சியத்தை அறியும் ஞானம்.

. கடந்து செல்லும் காலத்துள் புதைந்துள்ள புதிர்.

. மனத்தைக் கடந்த திரைமறைவிலுள்ள புதிர்.

. அகத்தையறியும் இதய ஞானம்.

. சக்தியுள்ள ஆத்மாவின் பார்வை தேவை.

. விழிப்பான மனத்தின் அல்பமான பார்வை.

. இலக்கற்ற யாத்திரையின் விவரமற்ற பாதை.

. சந்தர்ப்பம் திருவுள்ளத்தை அனுமதித்தது.

. காரணமற்ற அவசியம்.

. விழித்தெழுந்து வாழ விருப்பமற்ற கட்டாயம்.

. இவ்விருண்ட உலகில் தெளிவற்ற விவரங்கள்.

. நாம் யார் என எழும் ஐயம்.

. இனந்தெரியாத சோதனையான வாழ்வின் ஜீவன்.

.வினோதமான அறியாமை உலகில் மின்னும் ஒளி.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

"திருவுள்ளம் நிறைவேறட்டும்'' என்று மந்திரமாக உச்சரித்தால் ஆன்மா நம்மையறியாமல் விழித்துக்கொள்ளும். அதற்கும் பலனுண்டு. சூட்சுமத் தரிசனம், மனம் அடங்குதல், ஆசையின் வேகம் அழிவது, செயல் இரண்டாகப் பிரிந்து, நல்லது நம்மை நாடியும், மற்றது விலகியும் போவது ஆகிய பலன் தெரியும். ஆசைக்குரியது அகன்றுபோய், அது நம்மிடம் வக்கிரமாக நடந்துகொண்டு, நமக்கு மனிதர்களைப் பற்றி அதிகமாகப் புரிய ஆரம்பித்து, சூழ்நிலை மாறும். விடாமுயற்சி, ஆர்வம், ஞானத் தேடல் அவற்றைப் புது உலகமாக நமக்களிக்கும்.

திருவுள்ளம் நிறைவேறப் பிரார்த்தனை செய்தால்

ஆன்மா விழிக்கும்.

புதிய வெளியீடு


 

எங்கள் குடும்பம்


 

by


 

கர்மயோகி


 

விலை : ரூ.200/- தபால் செலவு : ரூ.20/-


 


 

 

 

*******



book | by Dr. Radut