Skip to Content

12.சொல் எழுப்பிய எதிரொலி

சொல் எழுப்பிய எதிரொலி

திருட்டுப் பழக்கமேயில்லாத சிறுவனுக்குத் திருடத் தோன்றியது.நண்பனும், இவனும் இரண்டு பென்சில்களை எடுத்தனர். நண்பனுக்கு ஒன்று கொடுத்தான். செய்த காரியத்திற்கு வெட்கப்பட்டான்.மறந்துவிட்டான்.

வீட்டில் மாமாவுக்கு வதந்தி நிரம்பிய வாய். யாரைப் பற்றியாவது ஏதாவது புனைந்து சொல்ல வாய் ஊறும். பையனைக் கிளப்ப முயன்றார். மாமா ஏதோ பேசப் போகிறார் எனப் புரிந்துகொண்டான்.அவர் வாயை அடக்கவேண்டும் என நினைத்தான். அவரைப்போலவே முனைந்து பேச முயன்றான். அப்படிப் பேசும் பையனில்லை. இல்லாத அசிங்கம் தோன்றியது. தானும் மாமாவை மிஞ்ச முடியும் என நினைத்தான். மாமாவின் குறும்புப்பார்வை அவனை மேலும் கிளறியது.

"ஏன் மாமா, எதிர்வீட்டில் காமிரா திருடினேன் என சொல்லத்

துடிக்கிறீர்கள். உங்களுக்கு, திட்டவேண்டும் என்றால் திட்டுங்களேன்.

ஏன் அடுத்தவர் கூறியதாகக் கற்பனையைப் புனைந்து பேசவேண்டும்''

என்றான். மாமாவை மடக்கியதில் பரமதிருப்தி. சொல்லியவன் வாய் மூடவில்லை. மாமா, நண்பனிடம் கொடுத்த பென்சிலைக் கொடுத்து,"உன் நண்பன் இது வேண்டாம் எனத் திருப்பிக் கொடுத்து விட்டான்.எனக்குத் தெரியுமே. நீ நல்ல பையனாயிற்றே''என விஷமமாகச் சிரித்தார். தன் குட்டு வெளிப்பட்டுவிட்டது தெரிந்து அவமானப் பட்டான். தவறான சொல்லை விளையாட்டாகச் சொல்liவிஷமமாகச் சிரிக்க முயன்ற பொழுது, எப்பொழுதோ போன சிறிய திருட்டு வெளிவருவது Life Response

சொல் சக்தியுடையது.

 

****


 



book | by Dr. Radut