Skip to Content

13.சக்தியுள்ளது சொல்

சக்தியுள்ளது சொல்

25,000 ரூபாய்க்கு விற்கமுடியாத நிலத்தை அபிவிருத்தி செய்வதற்காக வாங்க முன்வந்தவர் அதன்மீதுள்ள கடன்களை விலக்க முயன்று 55,000 ரூபாய்க்கு வாங்கினார். புன்செய்நிலம் அன்னை அருளால் நீர் கிடைத்து நன்செய்யாயிற்று. மதிப்பு 30 மடங்கு பெருகியது. ஒரு பாங்க் 1½ இலட்சம் கடன் சாங்ஷன் செய்து முதல்தவணையாக 25,000 ரூபாய் கொடுத்திருந்தது. பக்கத்துவீட்டுக்காரர் பாங்க் ஏஜெண்ட். அவர் அன்பரை அழைத்து 15,000 ரூபாய் கடன் பெறும்படிக் கூறினார். நான் வேறொரு பாங்க்கில் கடன் பெற்றிருக்கிறேன் என்பதை மறுத்து, நான் தர விரும்பும் பொழுது உங்களுக்கென்ன ஆட்சேபணை என்றார். அது முறையில்லை என்பதால், அன்பர் அவ்வுதவியைப் பெறவில்லை. அடுத்த மாதம் அதே ஏஜெண்ட் கூப்பிட்டு அனுப்பினார். எங்கள் Development Officer வந்திருக்கிறார்,அவரைச் சந்தித்து நிலம் வாங்கிய விவரம், நீர் கிடைத்தது, அடுத்த பாங்க் 1½ இலட்சம் சாங்ஷன் செய்தது, 25,000 ரூபாய் கொடுத்தது, எதிர்காலத் திட்டம், ஆகியவற்றை எழுதி வைத்திருந்ததைக் காண்பித்தார்.

Chief Officer இவற்றையெல்லாம் எழுதியது யார் என்றார். எப்படிஎழுதினீர்கள் என்றார். உங்களுக்கு டிராக்டர், கோடவுன், ரோடு வேண்டும். அதெல்லாம் சேர்ந்து 4¼ இலட்சம் தேவைப்படும். நாங்கள் அதைத் தருகிறோம். அடுத்த பாங்கிலிருந்து எங்கள் பாங்க்கிற்கு வரவேண்டும்என்றார். கேட்பதை நம்பமுடியவில்லை. நடந்தது உண்மை.

முறையற்ற உதவியைப் பெற மறுத்துக்கூறத் தோன்றிய சொல் இல்லாத உரிமையை ஏற்படுத்தி, தேடிவந்து வலிய வற்புறுத்தித் தர முயல்வது அருளின் சூழல் சரியான சொல்லுக்குரிய சக்தி.

****



book | by Dr. Radut