Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

                                                         லைப் டிவைன்                                    கர்மயோகி
 

XIV. The Supermind as Creator

14. சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா

The Self-possession of the One is above.

ஏகன் அனைத்தையும் தன்னுட்கொண்டவன்.

This flux of the Many is below.

நாம் வாழும் உலகம் அநேகன்.

There is an intermediary state of being.

இடைப்பட்ட நிலையுண்டு.

It is a power.

அது சக்தி.

It is the creatrix of the worlds.

அதுவே உலகை சிருஷ்டித்தது.

It is superior to Mind.

அது மனத்தைவிட உயர்ந்தது.

It is a principle of Will and Knowledege.

அது ஞானமும், உறுதியும் செயல்படும் சட்டம்.

Both are active.

இரண்டும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

This principle is not entirely alien to us.

இது நாமறியாததில்லை.

There is a Being.

ஒரு ஜீவன் உண்டு.

That Being is entirely other than ourselves.

அது நம்மிலிருந்து

வேறுபட்டது.

This principle does not belong to that Being.

இந்தச் சட்டம் ஜீவனுக்குரியதன்று.

Nor is it incommunicable.

அது நாமறிய முடியாததில்லை.

It is not a state that mysteriously has given birth to us.

ஏதோ புதிராக அது உலகை சிருஷ்டிக்கவில்லை.

Nor does it reject our return to it.

நாம் அதை நாடினால் அது நம்மை விலக்காது.

There are heights far above us.

நமக்கு மேலே உயர்ந்த நிலையுண்டு.

It seems to be seated there.

அது அங்கு உட்கார்ந்துள்ளது.

They are heights of our own being.

அவை நம் ஜீவனின் சிகரங்கள்.

We can reach there.

நாம் அதையடையலாம்.

We can infer that Truth.

சத்தியம் எது என ஊகிக்கலாம்.

We can glimpse it.

அது நமக்குப் பொறியாகத் தட்டுப்படும்.

We can realise that Truth.

நாம் சத்தியத்தை சித்தியாகப் பெறலாம்.

These are the greatest superhuman experiences.

மனிதநிலையைக்கடந்த உயர்ந்த அனுபவங்கள் அவை.

We can live there for days on end.

அங்கு நாம் நாள் கணக்காக வாழலாம்.

They may be hours or days.

அது மணிக்கணக்காகவுமிருக்கும்.

They are unforgettable moments.

அவை மறக்கமுடியாத நேரம்.

They are our summits of bei ng.

அவை நம் ஜீவனின் சிகரம்.

We can go there in two ways.

இருவகைகளாக நாம் அதையடையலாம்.

One is progressive expansion.

கொஞ்சம் கொஞ்சமாக நாம் நம்மை விரிவுபடுத்தலாம்.

The other is sudden and luminous.

அடுத்தது திடீரென்று ஜோதி காட்சியளிப்பது.

It is self-transcendance.

நம்மை நாம் கடந்து செல்லும் நேரம் அது.

We descend next.

மீண்டும் நாம் நம் நிலைக்கு வருகிறோம்.

The doors shut.

கதவு மூடிக்கொள்ளும்.

They are doors of communication.

அவை நம்மை அத்துடன் இணைப்பவை.

We can reopen them.

நாம் மீண்டும் அதைத் திறக்கலாம்.

We can also keep them open always.

எப்பொழுதும் அதைத் திறந்துவைக்கலாம்.

Our supreme ideal can be two.

நம் உயர்ந்த இலட்சியங்கள் இரண்டு.

One is self-annulment.

ஒன்று ஜீவன் மோட்சத்தில் கரைவது.

The other is self-fulfilment.

அடுத்தது நாம் பூரணம் பெறுவது.

Self-fulfilment is self-perfection.

முழுமையடைவது பூரணம் பெறுவது.

It is the highest summit of the creative being.

சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் சிகரம் அது.

The other is the highest summit of the creative being

மற்றது சிருஷ்டிகர்த்தாவின் உச்சி, உச்சியில் ஒரு சிகரம்.

Thus our human consciousness evolves.

அதுவே நமது பரிணாமம்.

This is the last summit.

இதுவே கடைசி மலையுச்சி.

Thus we can dwell permanently there.

அவ்விதம் நாம் அங்கு நிரந்தரமாகக் குடியேறலாம்.

We have seen this now.

இதை நாம் இப்பொழுது கண்டோம்.

This is the original idea.

இதுவே ஆரம்ப எண்ணம்.

It is the final harmony.

இதுவே முடிவான சுமுகம்.

We gradually express ourselves in the world.

நாம் கொஞ்சம் கொஞ்சமாக உலகில் வெளிப்படுகிறோம்.

We mean to achieve it.

இதை நாம் அடைவது நம் குறிக்கோள்.

Page No.122, Para No.2


 

We need to elevate our human knowledge.,

மனித அறிவு உயரவேண்டும்.

Our action too must be raised.

நம் செயலும் உயர்த்தப்படவேண்டும்.

For that we need to know its divine workings.

அதற்கு, தெய்வம் செயல்படும் வகையை நாம் அறியவேண்டும்.

Our human intellect needs to know how.

அது மனித அறிவுக்குப் புலப்படவேண்டும்.

Can we communicate that to the intellect?

நாம் அதை மனத்திற்குக் கூறமுடியுமா?

Will that help organise the divine workings?

தெய்வச்செயலைத் திறம்படச் செய்ய அது உதவுமா?

What account can we give to the intellect?

அறிவிடம் நாம் என்ன கூறலாம்?

Is it possible?

அது முடியுமா?

Is it ever possible?

எப்பொழுதாவது அது முடியுமா?

We doubt that possibility.

நமக்கு ஐயம் எழுகிறது.

This divine faculty has a human working.

தெய்வச்செயல் மனிதச்செயலில் வெளிப்படுகிறது.

But it is rare.

அது அபூர்வம்.

It is also dubious.

அது நிலையற்றது.

It is not easily verifiable.

அதைச் சுலபமாக நிரூபிக்கமுடியாது.

It is separate from ordinary humanity.

அது மனிதவாழ்விலிருந்து பிரிந்துள்ளது.

It is remote from verifiable knowledge.

நிரூபணத்திலிருந்து விலகி நிற்கிறது.

Human experience is separate from this.

மனித அனுபவம் இதனின்று வேறுபட்டது.

But the doubt does not arise from these aspects.

இவற்றாலெல்லாம் சந்தேகம் எழவில்லை.

The divine Supermind and human mentality are opposites.

சத்தியஜீவியமும், அறிவும் எதிரானவை.

This contradiction is apparant.

முரண்பாடு வெளிப்படை.

It is so in essence.

அடிப்படையில் அந்த முரண்பாடுள்ளது.

Even in operation it is like that.

நடைமுறையிலும் அது உண்டு.

Therefore our doubts arise.

அதனால் எழுவது சந்தேகம்.

Contd....

தொடரும்...


 book | by Dr. Radut