Skip to Content

05.அஜெண்டா

"Agenda"

Death is not to be conquered; life and death should progress.

மரணத்தை வெல்லவேண்டும்என்பதன்று;

வாழ்வும், மரணமும் முன்னேறவேண்டும்.

. துஷ்ட நிக்ரஹம், சிஷ்ய பரிபாலனம் - துஷ்டனை அழிப்பதும், சிஷ்யனை பரிபாலிப்பதும் ஆண்டவனுடைய தர்மம்.

. ஒரு கோழி திருடியவனை அங்கேயே தூக்கில் போட்ட காலம் உண்டு.

. கொலை செய்தவனுக்கும் தூக்குத்தண்டனை தரக்கூடாது என்பது இக்காலம்.

. திருடியவனைத் திருத்த வேண்டும் என்பது இன்றைய தர்மம்.

. அதையே முடிவாகக் கருதினால் மரணத்தை அழிப்பதற்குப் பதிலாக,மரணமும் முன்னேறவேண்டும் என்பது Agenda.

. மரணம் முன்னேறுவது என்றால் என்ன?

. அதுவே திருவுருமாற்றம்.

. எதிரியிடம் ஜாக்கிரதையாக இருக்கலாம். எந்த நேரமும் அது ஆபத்து. எதிரியை நம் கட்சியில் சேர்த்துக்கொண்டால், இனி அவர் எதிரியாக இருக்கமுடியாது. நாளடைவில் அவர் நம்மைப்போலாவார்.அப்படி அவர் மாறிய காலத்து நம்மைவிட நம் கட்சிக் கொள்கையில் அவர் தீவிரமாக இருப்பார். நாத்திகன் ஆஸ்திகனாக மாறும்பொழுது அது தீவிரமாக இருப்பதுண்டு.

. தாழ்த்தப்பட்டவருக்குப் படிப்பில்லை என்றபொழுது நாட்டில் எத்தனை விஞ்ஞானிகள், இன்ஜினீயர், டாக்டர் இருந்தனர்? தாழ்த்தப்பட்டவருக்குப் படிப்புண்டு என்றபொழுது உலகில் அதிகபட்ச இன்ஜினீயர்களை நாடு உற்பத்தி செய்கிறது.

. மரணம் நம் முன் வேண்டாதது, நாட்டில் தாழ்த்தப்பட்டவரைப்போல.மரணத்தை தவத்தால் வெல்ல முயன்றனர். ஆத்மா அளவில் வெற்றி பெற்றனர். உடல் அளவில் பெறும் வெற்றிக்குக் காயகல்பம் எனப் பெயர். அது முடியவில்லை. மரணத்தின் சுவடு நோய், மூப்பு. நோய் அழிவதைக் காண்கிறோம். மூப்பும் தளர்கிறது. அவை சவரட்சணைக்கும், மருந்துக்கும் தலை குனிகின்றன. மரணம் மனவளர்ச்சிக்கும், ஆத்ம விழிப்புக்கும் பணியும். அது ஸ்ரீ அரவிந்தம்.

. ஆத்மா வேகமாக வளர்ந்தால் உடல் அதற்குப் பயனற்றுப்போகிறது.எனவே, அடுத்த பிறப்பில் வேறோர் உடலை நாடுகிறது. உடலின் ஆன்மா விழித்தால், அது ஆன்மா வளரும் வேகத்தில் வளரும்.அப்பொழுது ஆன்மா அடுத்த உடலைத் தேடும் அவசியமிருக்காது.மரணம் வெல்லப்படும்.

. ‘‘மரணத்தை வெல்வது எனில் உடலில் ஆன்மவிழிப்பேற்பட்டு,ஆன்மாவின் தேவையைப் பூர்த்திசெய்வதாகும்.

. ‘‘உடல் செல்கள் தேய்ந்து அழிகின்றன. உடலின் ஆன்மா விழித்தால், செல்கள் தேய்மானமிருக்காது. அவை அழியா.

. ‘‘அதுவே மரணம் வெல்லப்பட்டதாகும்.

**** 
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

முன்னேற்றப் பாதையில் ஒரு மனிதன் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குத் தொடர்ந்து போகிறான். கடைசி நேரத்தில் ஒரு நிகழ்ச்சியோ, குணமோ, பழக்கமோ அவனை முந்தைய நிலைக்குக் கொண்டுபோய் அங்கேயே நிலைநிறுத்த முயலும்.தனக்கு எது பெரிய தடையோ அதையே இலட்சியமாகக் கருதும் மனப்பான்மையும் மனிதனுக்குண்டு.

மனிதன் தடையை இலட்சியமாகப் போற்றுவான்.


 


 



book | by Dr. Radut