Skip to Content

08.லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

Religious injunction solves the problem of the individual not for whole.

மதவழிபாடு தனிமனிதனுடைய பிரச்சினையைத் தீர்க்கும்;

மனிதகுலத்திற்குப் பயன்படாது.

. ஸ்ரீ அரவிந்தம் நவதத்துவம் எனப்படும். "நவ"என்றால் புதியது.

. என்ன புதியது என்பதை பல கோணங்களில் கூறலாம்.

1. ஜடமும், ஆன்மாவும் ஒன்றே.

2. முரண்பாடு உடன்பாடு.

3. ஜீவாத்மாவே பரமாத்மா.

4. பகுதி முழுமையைவிடப் பெரியது.

5. உலகில் தீமை படைக்கப்படவில்லை.

6. இதுவரை ஆன்மீகம் தனிமனிதனுடையது. ஸ்ரீ அரவிந்தம் தனிமனிதனுடைய ஏகபோக பொக்கிஷத்தைச் சமூகம் (collectivity), மனிதகுலத்திற்குத் தருகிறது.

. ஸ்ரீ அரவிந்தம் மரபிலிருந்து 30 வகைகளாக மாறுபடுகிறது. அவற்றுள் முக்கியமான சில இங்குச் சொல்லப்பட்டது. இக்கட்டுரைக்குரியது தனிமனிதன்.

. ஸ்ரீமத் பகவத்கீதை வேத உபநிஷத சாரம். கீதை தான் கூறும் சரணாகதியை வேதம், உபநிஷதத்தைப் படித்துப் பயின்று பெறமுடியாது எனத் திட்டவட்டமாகக் கூறுகிறது. பகவான்

"பகவத்கீதை கனிந்த ஆத்மாவுக்குரிய அழைப்பு; மனிதகுலத்திற்கு அது பயன்படாது"என்கிறார்.

. 20ஆம் நூற்றாண்டுவரை, அதுவும் 1950வரை மனிதன் தன் வேலைகளைத் தானே செய்துகொண்டான். பிள்ளைக்குக் கல்வி அவன் பொறுப்பு, பெண்ணுக்குத் திருமணம் அவன் கடமை, நிலம் வாங்க, கடை வைக்க அவனே முதல் சேகரம் செய்யவேண்டும்.சுருக்கமாக,

"நம் காரியங்களை நாமே செய்யவேண்டும்''

என்பது வாழ்க்கை வழிமுறை.

.1950க்குப்பின்,

. ‘‘பிள்ளைக்குக் கல்விப் பொறுப்பை சர்க்கார் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றது.

. ‘‘1980க்குப்பின் பெண் திருமணப் பொறுப்பில் சர்க்கார் பங்கு கொண்டது.

. ‘‘தற்பொழுது நம் வீட்டில் மின்விளக்கெரிய சர்க்கார் செலவேற்கிறது.

. ‘‘நம் நிலத்தில் நீர் பாய்ச்ச சர்க்கார் மின்கட்டணம் கட்டுகிறது.

. ‘‘நமக்கு உடல் ஊனமானால், அதனால் எழும் பொறுப்புகளை ஓரளவு சர்க்காரும், சமூகமும் ஏற்கிறார்கள்.

. தனிமனிதன் மோட்சம் தேடியது மரபு. கீதை அதையே கூறுகிறது.அதை முதிர்ந்த ஆத்மாவுக்கு எளிதில் பூர்த்திசெய்யும் வழியைக் கூறுகிறது.

. ஸ்ரீ அரவிந்தம் மனிதகுலம் மோட்சம் பெறும் வழி திருவுருமாற்றம் எனக் கூறுகிறது.

. ‘‘அதனால் இனி மதவழிபாட்டிற்கு இடமில்லை.

. ‘‘மனிதன் ஜீவாத்மா மட்டுமன்று, பரமாத்மாவும்கூட.

. ‘‘பூரணயோகம் மனிதன் செய்யும் யோகமில்லை. மனிதனில் இறைவன் செய்யும் யோகம்.

. ‘‘மனிதன் பங்கு உபத்திரவம் தாராமருப்பது. அதற்குரிய மார்க்கம் சரணாகதி.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

எல்லையில் செய்யும் சோதனைகளே சிறந்தவை. பழைய பழக்கம் தடையாக இல்லாவிட்டால் அது எல்லைக்கோடாகும்.

எல்லாச் சோதனைகளும் எல்லைக்குரியன.


 


 



book | by Dr. Radut