Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)        கர்மயோகி
 

XIV. The Supermind- As creator

         Page No.125, Para No.6

சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா

There are other details

மற்ற விவரங்கள் உள்ளன.

They are subordinate ones.

அவை முக்கிய கருத்திற்கு உட்பட்டவை.

But they are important.

ஆனால் முக்கியமானவை.

There are two primary faculties.

இரண்டு அடிப்படையான கருத்துகள் உள.

The Vedic seers speak of it.

வேதம் அவற்றைக் கூறுகிறது.

They are of 'truth-conscious soul'.

ஒன்று சத்திய-ஜீவிய ஆத்மா.

One is Sight.

அது திருஷ்டி.

The other is Hearing.

அடுத்தது அசரீரி.

They are direct operations.

அவை இரண்டும் நேரடியாகச் செயல்படுகின்றன.

They are of inherent knowledge.

அவை பிறப்பிலேயே அமைந்தவை.

One is described as truth-vision.

ஒன்றை சத்தியத்தின் பார்வை என்போம்.

The other is truth-audition.

அடுத்தது சத்தியத்தின் குரல் எனப்படும்.

They are far off from our human mentality.

நம் மனத்தினின்று அவை தொலைவில் உள்ளவை.

We see it as revelation.

நாம் அவற்றை ஞானோதயமாகக் காண்கிறோம்.

We also see it as inspiration.

அடியெடுத்துக்கொடுக்கும் ஆண்டவனாகவும் காண்கிறோம்.

Besides, there is another distinction.

மேலும் ஒரு வேறுபாடுண்டு.

It arises in the operation of the Supermind.

சத்தியஜீவியம் செயல்படுவதால் அவை ஏற்படும்.

One is comprehending knowledge.

அனைத்தையும் தன்னுட்கொண்ட ஞானம் ஒன்று.

It is of pervading consciousness.

அது ஊடுருவும் ஜீவியம்.

It is near to subjective knowledge.

அது அகத்திற்குரியது.

It is by identity.

இது ஐக்கியத்தால் நடப்பது.

The other is knowledge by projection.

அடுத்தது வெளிப்படும் ஞானம்.

It confronts and apprehends.

அது புறத்திலுள்ளதுடன் மோதும், பேசும்.

It is another type of cognition.

அது மற்றொரு வகையான பார்வை.

It is objective. It begins there.

அது புறத்திற்குரியது. அங்கு ஆரம்பிக்கும்.

There are clues from the Vedas.

இவை வேதத்தில் காணப்படும் குறிப்புகள்.

This is an ancient experience.

இது பண்டைக்கால அனுபவம்.

We may accept this subsidiary term.

இவை இரண்டாம்பட்சமான சொற்கள்.

It is "truth consciousness".

அது சத்தியம்-ஜீவியம் எனப்படும்.

Supermind is more elastic.,

சத்திய ஜீவியம்என்ற சொல் விரிவான கருத்துடையது.

Truth-consciousness limits it.

சத்தியம்-ஜீவியம் என்பது அதற்கு வரையறை ஏற்படுத்தும்.

At once something is clear to us.

உடனே நமக்குத் தெளிவுபடுகிறது.

This is a consciousness of the above description.

மேற்கண்டபடி ஒரு ஜீவியம் உண்டு.

Page No.125, Para No.7


 

Its characteristics are such.

அதன் குணங்கள் அப்படிப்பட்டவை.

It is a formulation.

அது ஓர் உருவகம்.

It must be an intermediate form.

அது இடைப்பட்ட நிலையாக இருக்கவேண்டும்.

It refers to a term above it.

மேல் உள்ள நிலையை அது குறிக்கும்.

It referes to a term below it.

கீழுள்ள நிலையையும் அது குறிக்கும்.

This term is forward.

முன்னுக்கும் போகும் நிலை அது.

We see it is a link.

இது இணைப்பது.

Evidently it is so.

இது தெளிவு.

It is a means of development.

இது வளரும் வழி.

The inferior develops out of the superior.

சிறியது பெரியதினின்று வெளிவரும்.

Therefore, it can act in the other direction also.

எனவே அது எதிர்த்திசையிலும் செயல்படும்.

It may develop back again towards its source.

ஆதலால் அது தன் ஆதியை நோக்கிப் போகலாம்.

Above is Sachchidananda.

மேலே சச்சிதானந்தம்.

It is indivisible consciousness.

அது பிரிக்கமுடியாத முழுமையுடையது.

It is unitarian.

அது ஒருமையுணர்வுடையது.

It is the term above.

அது மேலுள்ள நிலை.

There are here no seperating distinctions.

பிரித்துணரும் அம்சங்கள் இங்கில்லை.

It is pure.

அது தூய்மையானது.

There is a term below.

கீழே ஒரு நிலையுண்டு.

It is analytic

அது ஆராயும்.

It is the dividing consciousness of Mind.

அது பிரிக்கும் மனத்தின் ஜீவியம்.

It knows by distinction.

அது பிரிப்பதால் அறியும்.

It knows by separation.

அதுவே அது பகுத்தறிவதாகும்.

It has a vague apprehension of unity.

ஐக்கியம் அதற்குத் தெளிவில்லாமல் தெரியும்.

It has a secondary apprehension of infinity.

அனந்தத்தை அது எட்ட இருந்து அறியும்.

It can synthesize its divisions.

அதன் பகுதிகளை இணைக்கவல்லது.

It cannot arrive at a true totality.

உண்மையான முழுமை அதற்குரியதன்று.

There is the comprehensive consciousness.

அனைத்தையும் அரவணைக்கும் ஜீவியம் உண்டு.

It is creative.

அது சிருஷ்டிக்கும் திறனுடையது.

It is between them.

அது இவற்றிடையே அமைந்துள்ளது.

It has the power of pervading and comprehending.

ஊடுருவி உள்ளதை அறியவல்லது அது.

It is the child of self-aware identity.

தன்னையறியும் ஐக்கியத்தின் பிறப்பு அது.

It is the poise of Brahman.

அது பிரம்மம் பெற்ற பேறு.

It has the power of projecting, confronting and apprehending knowledge.

எதிர்கொண்டு, வெளிப்படுத்தி அறியும் ஞானம் அது.

It is the parent of the awareness by distinction.

பிரித்தறியும் ஞானத்தின் தாய் அது.

This is the process of the Mind.

இது மனம் செயல்படும் வழி.

Contd.....

தொடரும்..

****

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அக்னி எழுந்தால், பசி, லி போன்ற உணரக் கூடியவகையில் எழும்.

அக்னி உணர்வாகவும் வெளிப்படும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

வாழ்வைப்பற்றிய சிந்தனை முற்றி, அன்னையின் கோட்பாடுகளைச் சிந்திக்க உதவுகின்றது.

சிந்தனை வாழ்வைக் கடந்தால் அன்னை சித்திக்கும்.


 


 



book | by Dr. Radut