Skip to Content

05.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னையை நான் அறிந்தபிறகு என் வாழ்வில் சில அதிசயங்கள் நடந்துள்ளன. அவற்றில் ஒன்றை எழுதுகிறேன். எனக்குத் திருமணமாகி 6 மாதங்களிருக்கும். அப்போது திடீரென்று என் கணவர் எழுந்து, 12மணியளவில், "என் மோதிரத்தை காணவில்லை''யென்று கூறினார். நான், என் மாமியார், கணவர் மூவருமே தேடினோம், கிடைக்கவில்லை. 2 மணிவரை பார்த்துவிட்டு, விடியட்டும் என்று சொல்லிவிட்டார்கள். நான் மதரிடம் சமர்ப்பணம் செய்துவிட்டுப் படுத்துவிட்டேன். பின்பு 5மணியளவில் எழுந்து பாய், படுக்கையை எடுக்கும் போது தலையணையில் இருந்து விழுந்தது. என்ன ஆச்சரியம்! படுக்கையை எடுத்து, உதறி விட்டுத் தேடியபோது கிடைக்காத மோதிரம் மதரிடம் சமர்ப்பணம் செய்தவுடன் கிடைத்தது.

அதைப்போல் இப்போது ஒரு நாள் சின்ன வெண்ணைத்தாளியில் வெந்நீர் வைத்துவிட்டு, மாலை 4 மணியிருக்கும், பெரியவர் ஒருவர் வருகிறாரென்று பார்க்கச் சென்றுவிட்டேன். அன்னையின் அருளினால் கேஸ் ஸ்டவ்வில் வைக்காமல் கெரோசின் ஸ்டவ்வில் வைத்துவிட்டு சென்றேன். பக்கத்து வீட்டிலிருப்பவர் 6 மணியளவில் வந்திருக்கிறார். அவர் பார்த்துவிட்டு வெளியில் (தாழ்வாரம்) ஸ்டவ் இருந்ததால் நிறுத்தியிருக்கிறார். கேஸாகவிருந்தால் கிட்சன் உள்ளேயிருந்திருக்கும். பூட்டிவிட்டுச் சென்றிருப்பேன். வெளியில் இருந்ததால் வீட்டிற்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் தப்பித்தோம். 2 மணி நேரம் பாத்திரமிருந்ததால் தீய்ந்துவிட்டது, கெரோசின் தீர்ந்துவிட்டது. இதோடு வேறு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. மதர் இல்லாவிட்டால் நானில்லை. ஏன், என் கல்யாணமே மதரின் அருளினால் கடனில்லாமல் நடந்தது. என் அப்பா இருக்கும் போதே என் அக்காக்களின் திருமணம் கடனில் நடந்தது. ஆனால் மதரை அறிந்தபிறகு என் கல்யாணம் பிரமாதமாக நடந்தது. இப்போதெல்லாம் அதிக ஞாபகமறதி வருகிறது. அதையும் மதரிடமே சமர்ப்பணம் செய்கிறேன்.

****


 



book | by Dr. Radut