Skip to Content

06.அஜெண்டா

 "Agenda"

When the physical consciousness loses its false side

Man can have the consciousness of the day at night.

உடலின் ஜீவியம் தன் பொய்யை இழந்தால், இரவு பகலாகும்.

. பொய் என்பது அறியாமை.

. தாம் பிரம்மம் என்பதை மறந்தது அறியாமை எனப்படும்.

. மறந்த பிரம்மம் தன்னை நினைவுகூர்வது அறிவு, ஞானமாகும்.

. பிரம்மம் மனிதனில் மறைந்துளது.

. விழிப்பு என்பது ஓரளவுள்ளது மனத்தில்.

. உயிரில் அரை விழிப்பும், உடலில் முழுமறதியும் உண்டு.

. தியானத்தில் ஆத்மா விழித்தால் புருவமத்தியில் ஒளி, ஜோதி தெரியும்.

. இது மனோமயப்புருஷன்.

. மனம் மட்டும் விழிப்பது மனோமயப்புருஷனாகும்.

. பக்தியால் நெஞ்சம் விழிப்பது பிராணமயப்புருஷனாகும்.

. மனமும், பிராணனும், உடலும் விழிப்பது ஜீவன் கண் திறப்பதாகும்.

. அது நெஞ்சுக்குப் பின்னால் ஒரு தழல்போன்ற ஜோதியாக எழும்.

. அது ஜீவன் முழுவதும் பரவலாம்.

. அப்படிப் பரவுவது ஜீவன் பொய்யை இழப்பது.

. அது முடிவாக வெளிப்படுவது உடல்.

. அதுவே உடல் பொய்ம்மையை இழப்பது.

. உலகில் இருள் இல்லை.

. ஒளியும், அடர்ந்த ஒளியும் உண்டு.

. அடர்ந்த ஒளி கண் கூசும்.

. கண் பார்க்க முடியாத பொழுது அதை இருள் எனக் கூறும்.

. கண், புலன்.

. புலன் பிராணனின் கருவி.

. பிராணனில் விழிப்பில்லை.

. அதனால் கண் அடர்ந்த ஒளியை இருள் என்றோ, பொய் என்றோ கூறுகிறது.

. புலன் மெய்ம்மை பெற்றால், கண் விழிக்கும்.

. கண் விழித்தால், இருள் ஒளியாகத் தெரியும்.

. பகலென இரவு பிரகாசிக்கும்.

. சிருஷ்டியில் பொய் என்பது பிரம்மத்தினின்று நாம் பிரிவது.

. பிரிவினை அகந்தைக்குரியது.

. அகந்தை பொய், இருள்.

. அகந்தையற்றவனுக்கு இரவு பகலாகும்.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு விஷயத்தில் உந்தப்பட்டு மனிதனுடைய சக்தி அவனை மீறிய அளவில் செயல்படும்பொழுது அவனுக்கு நிறைவுண்டு. இறைவனையடைய மனிதன் தன் வயமிழந்தால் ஆன்மீகப் பூரணம் ஏற்படும்.

தன் வயமிழந்த மனிதன் ஆன்மாவில் எழுவான்.


 



book | by Dr. Radut