Skip to Content

10.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

 (சென்ற இதழின் தொடர்ச்சி....)                                                                              கர்மயோகி

887) (Physical organisation) உலகத்தின் இயக்கம் தானே நடப்பதுஇரு செயல்கட்கு இடையேயுள்ள வெளி, அடுத்த செயலைத் தயார்படுத்தத் தேவைப்படுவதுஜட உலகத்திற்குக் காலம் தேவைஉணர்வுக்கும், மனத்திற்கும் தேவையில்லைஜடம் உணர்வாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாகும்நம்மை நேரே சத்தியஜீவியத்திற்குப் போகச் சொல்கிறார் பகவான்.

ஒரு படி நகர ஆயிரமாண்டாயிற்று. முடிவான சத்தியஜீவியத்திற்குப் போனால் பல்லாயிரம் ஆண்டு சுருங்கும்.

     சர்க்கார் ஆபீஸில் பேப்பர் தானே நகருவது இல்லை. நகர்ந்தால் நெடுநாளாகும். மேலேயுள்ளவருக்கு அக்கரையிருந்தால் மின்னல் வேகத்தில் நகரும்ஒரு பொருள் அடுத்த பொருளை நோக்கி நகர  இடையே வெளி தேவை. இடைவெளியில்லாவிட்டால்  நகர முடியாது; நகரத் தேவையில்லைஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டம் போக இந்தக் கட்ட வேலைகள் பூர்த்தியாக வேண்டும்இவை ஜடத்தில் உண்மைமனத்திற்கு இது தேவையில்லைமின்னல் வேகத்தில் நகரும். ஜடம் உணர்வாகி, உணர்வு எண்ணமாவது பரிணாம யோகம். மொட்டு மலர நாளாகாது. செடி காய்க்க பல மாதம், அல்லது பல வருஷங்களாகும்.ஒரு மரம் காய்க்க 8 அல்லது 10 வருஷமாகிறது. மனிதன் ஜடத்திலிருந்து உணர்வு பெற 10,000 வருஷமாயிற்று. அடுத்த கட்டம் அதைவிட நாளாகும்.

பகவான் அதை உடனே செய்ய வேண்டும் என்கிறார்.

.வேலையிலிருப்பவன் வீடு கட்ட ஓய்வு பெற வேண்டும்.

.சுதந்திரம் பெற 100 ஆண்டு காங்கிரஸ் வேலை செய்தது.

.70 ஆண்டு கம்யூனிசம் ஆண்டபின் அதை எட்ட முடியாது எனக் கை விட்டுவிட்டது.

.90 ஆண்டு (1857-1947) ஏகாதிபத்தியம் ஆட்சி செலுத்தியபின் சாம்ராஜ்யம் கரைந்தது.

.900 ஆண்டு செல்வம் பெற்ற செட்டியார் குடும்பம் முடிவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்திப் புகழ் பெற்றது.

     எது செய்யவும் நாளாகும்இரண்டாம், மூன்றாம் கட்டங்கள் முதற் கட்டத்தைவிட அதிக நாளாகும் பலிக்க.  ஆனால் பகவான் 30,000ஆண்டில் நடக்க வேண்டியதை 30 ஆண்டில் நடத்தலாம் என்றார்.

.காசி யாத்திரை கால் நடையாகப் போன காலத்தில் போய் வர பல மாதங்களாயின. இன்று 10 நாளில் முடிக்கலாம். ஏனெனில் இரயில் வந்துவிட்டது.

.மனிதன் ஜடம். அறிவு பெற 10,000 ஆண்டுகளாயினசத்தியஜீவியமாக 3 மடங்கு நாளாகும்.

.மனத்தால் சாதிக்க நாளாகும். சத்தியஜீவியம் என்ற புதுக்கருவி வந்துவிட்டதால் நாளாகத் தேவையில்லை.

.அமெரிக்கா செல்வம் பெற 300 ஆண்டு உழைத்தது.

. நாம் இனியும் 300 ஆண்டு உழைக்க வேண்டும் என்று நியாயமாகப் படுகிறது. 300 ஆண்டில் உலகம் சாதித்தவை அனைத்தையும் நாம் கருவியாகப் பயன்படுத்தும் வாய்ப்பு நமக்கிருப்பதால், நாம் 300 ஆண்டு அவர்கள் போல் உழைக்க வேண்டிய அவசியமில்லை.

.1956இல் புவியில் வந்த சக்தியை நம்மால் பயன்படுத்த முடியுமானால் சத்தியஜீவன் பிறக்க யுகம் யுகமாகக் காத்திருக்கத் தேவையில்லை.

அந்த சக்தியைச் செல்வம் பெற பயன்படுத்தினால் அடுத்தவர் 50 ஆண்டில் சாதித்ததை நாம் குறுகிய காலத்தில் முடிக்கலாம்.

 

****

888) சிருஷ்டியின் ஆனந்தம் (delight) வாழ்வில் இரு பிரிவுகளாகின்றது. லி, ஆனந்தம் இரண்டையும் ஏற்றால்தான் அனுபவம் முழுமைப்படும். ஒன்றை விலக்கி மற்றதை முழுமையாக அனுபவிக்க முடியாது.

வலியைக் கடக்க ஆனந்தத்துடன் வலியையும் சேர்த்து ஏற்க வேண்டும்.

.இடக் கையில்லாமல் வலக் கை மட்டும் செயல்படுவது முழுப் பலன் தாராது.

.தொடர்ந்து சாப்பிட்டு, ஜீரணமாகி, உடல்நலம் பெருக மலம், சிறுநீர்,வியர்வை ஆகிய கழிவுப்பொருள்கள் உற்பத்தியாகி, வெளியாக வேண்டும். கழிவுப்பொருள் வேண்டாததில்லை. அதின்றி ஜீரணமில்லை.

.ஒரு கண்ணின் பார்வை முழுப் பார்வையாகாது. இரண்டாம் கண் பார்வைக்கு மூன்றாம் (dimension) நிலையளித்து முழுமை தருகிறது.

.குற்றவாளி உள்ளதைச் சொல்லமாட்டான். கோர்ட் அவன் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாதுபோலீஸ் தவறாமல் கண்டுபிடிக்கும்கோர்ட் நியாயம் வழங்க கொடுமைக்கார போலீஸ் தேவை.

.ஒட்டுக் கேட்பது, கோள் சொல்வது, எதிரியின் இரகஸ்யங்களை அறிய முயல்வது அநாகரீகமான பழக்கங்கள். எந்த சர்க்காரும் CID, informer, spy, ஒற்றனில்லாமல் நிலைக்காது.

.அறுவை சிகிச்சை ஆயுளை வளர்க்க அவசியம்.

.குழந்தையைக் கண்டிக்காமல் பள்ளிக்கு அனுப்ப முடியாதுபெற்றோர் பிரியம் கடுமையான கண்டிப்பில் வெளியாகாவிட்டால், குழந்தை படிக்காத கூலிக்காரனாவான்.

.நண்பன், உடன்பிறந்தவன், பிள்ளைகள், பெற்றோர், குரு, சிஷ்யன் மிக நெருக்கமான உறவுகள். நெருக்கமான உறவில் துரோகத்தைக் காணாதவன் வாழ்வில் உயர் மட்டங்களை எட்டியதில்லை.

.ரூஸ்வெல்ட், ஸ்டாலினையும், இங்கிலாந்து பிரதமர் ஹிட்லரையும், சர்ச்சில் முஸலோனியையும் முழுவதும் நம்பினர்சர்ச்சில் முஸலோனியைத் தலைவராக ஏற்க விரும்பினார்உயர்ந்தது பூரணம்பெறத் தாழ்ந்ததை நாடும்.

.கற்புக்கரசி எனப் பெயர் வாங்கிய பஞ்சகன்னிகைகளில் இருவர் - அகல்யா, தாரா - இந்திரனை, சந்திரனை விரும்பிக் கலந்தவர்.

.பதுங்காமல் புலிபாய முடியாது.

.பெரு நஷ்டப்படாமல் பெரிய கோடீஸ்வரனாக வர முடியாது.

  • .உலகில் தீமையில்லை. அகந்தையின் பார்வைக்கு அடுத்த பக்கம் தீமையாகத் தெரிகிறது.
  • ."அன்று இந்த ஆபத்து வந்திராவிட்டால், இன்று இந்த உயர்வை நான் எட்டியிருக்க முடியாது" என்று சாதனை செய்தவர் சொல்லத் தவறியதில்லை.

எந்தத் தவறும் எழாத வாழ்வு எந்த உயர்வையும் காணாத வாழ்வு.

தொடரும்.....

****

 

ஜீவிய மணி

மொழி தன்னையுணர்வது அகந்தை ஆத்மாவாவதாகும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

புறத்தோற்றம் வாழ்வை நிர்ணயிக்கும். அகவுணர்வு அன்னையின் அருளைப் பெறும். சிறிய மனிதன் மனமாற்றத்தால் உயர முடியாது என்று கருதுவது தன் நிலையின் மீதுள்ள பற்றை விடமுடியவில்லை என்பதால்தான்.

விடமுடியாத பற்றை மாற முடியாதென மனம் அறியும்.


 



book | by Dr. Radut