Skip to Content

11.சாவித்ரி

சாவித்ரி

P.69 A seeker of hidden meanings in life's forms.

 வாழ்வின் ரூபங்களில் மறைந்துள்ள இரகஸ்யத்தைத் தேடுபவன்.

.லோக மாதாவின் காலத்திற்கடங்காத கட்டவிழ்ந்த கருத்து.

.புவியின் போக்கிலுள்ள முரட்டுத்தனமான புதிர்.

.காட்டையும், கடலையும் வெல்லும் வெற்றி வீரன்.

.இதயத்துள் உள்ள இரகஸ்ய சமுத்திரத்தின் எல்லையற்ற பரப்பு.

.ஊரையும், உலகையும் சாடி வெல்லும் சாஸ்திர வல்லுனன்.

.மந்திரத்தால் கட்டுண்டு மறைபொருளான வரலாறு.

.ஜடத்தின் சட்டம் வகுத்த திட்டம்.

.விளக்கமான விவரம், மாற்றினாலும் அறிய முடியாத மாற்றம்.

.அறியமுடியாதபடி அமைந்துள்ள முடிவு.

.நிலையற்ற வாழ்வின் நிதானமற்ற ஓட்டம்.

.மௌன விதி அவன் பாதையைக் கண்டு வழிநடத்துகிறது.

.புரண்டு வரும் பிரவாகத்தின் நிலைத்த தடங்கள்.

.உறுதியான பூமி உந்தி எழுந்து, சற்று நிலைக்கும்.

.பரந்து விரியும் மனத்தின் புதிய அடிவானங்கள் புத்துயிர் தரும்.

.கண்டத்தின் அகண்டம் அருகில் வர மறுக்கிறது.

.முடிவான முடிவில் எண்ணம் தன்னையிழக்கும் நிலை ஏற்படவில்லை.

.ஆத்மானுபவத்தின் எல்லையைக் காண முடியுமா?

.எல்லை, எட்டித் தொட்டோம்என்ற எல்லையை எட்டவில்லை.

.எட்டாத சிறப்பு ஏக்கமாக அழைக்கிறது.

.கண்ணுக்குத் தெரியாத தூரத்து வேலிகள்.

.நீண்ட பயணம் நிலையாகத் தொடங்கிற்று.

.காலத்தின் கதியில் கலம் விட்ட மாலுமி.

.உலகத்தின் ஜடத்தை மெதுவாகக் காண்பவர்.

.காயமென்ற பிறவியில் காலெடுத்து வைத்தவன்.

.குறுகிய குட்டையில் கட்டுமரம் கற்றவன்.

.ஆழங் காண முடியாத அகண்டத்தை ஆழ்ந்து பார்க்க முயன்றான்.

.காலமெனும் கடலில் கப்பல் விட்ட பெருமகன்.

.உலகை வெல்லும் வேட்டையின் ஒழுங்கற்ற முதல் ஆரம்பம்.

.தெய்வ சக்தியை அறியாத மனிதன்.

.பெரிய போரின் தயக்கமான துவக்கம்.

.ஓட்டைக் கலத்தை ஓட்டும் வல்லுனனான மாலுமி.

.சிறிய நிலையற்ற சரக்கின் நாணயமற்ற வியாபாரி.

.கரையை விட்டகல மறுக்கும் கடல் எழுப்பும் பயம்.

.தூரத்து ஆபத்தைத் தொட மறுக்கும் மனப்பான்மை.

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

குறை கூறாமல் - வருத்தப்படாமலிருந்தால் - ஒவ்வொரு செயலிலும் திருவுள்ளத்தைக் காண்கிறோம். அதுவே நன்றியறிதல்.

திருவுள்ளத்தைக் காண்பது நன்றியறிதல்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

சக்தி, திறமை, அறிவு குறைவாக இருப்பதால் நாம் கட்டுப்பாட்டை நாடுகிறோம்.


 



book | by Dr. Radut