Skip to Content

12.உலகம்-மோட்சம்-ஸ்ரீ அரவிந்தம்

உலகம்-மோட்சம்-ஸ்ரீ அரவிந்தம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)                                                                                     கர்மயோகி

மனிதனும், பிரபஞ்சமும்

      மனிதன் தனித்த ஜன்மம். அவன் உலகத்தின் பகுதி. உலகம் பூமியின் பகுதி. பிரபஞ்சம்என்பது சூரிய மண்டலங்களைத் தன்னுள் பகுதியாகக் கொண்டது. ஸ்ரீ அரவிந்தம் பிரம்மம், பிரபஞ்சம், மனிதன் - Transcendent, Universal, Individual எனவும் கூறும் பொழுது மனத்தில் பிரபஞ்சம் என்பது பிரம்மம் அப்படி மாறியது, பிறகு பிரபஞ்சம் மனிதனாயிற்று என்று கொள்கிறதுஅதாவது மனிதனுள் பிரபஞ்சமும், அதனுள் பிரம்மமும் உள்ளதுஎன்பது கொள்கை, அடிப்படை. மரபு சொல்வது வேறு. உடல், உயிர், மனம், ஆத்மாவாலான மனிதன் மரணத்தால் உடல் அழிந்து மண்ணோடு மண்ணாய் மக்கும்உயிர் ஆவியாகி உலவி ஆவியுலகத்திலிருக்கும். மனம் செய்த சிந்தனைகள் அழியா. அவை உலகத்தில் சூட்சுமமாகச் செயல்படும். ஆத்மா தவத்தால் மோட்சம் பெறும்.

      ஸ்ரீ அரவிந்தம் கூறுவது: மனிதன் ஆத்மாஅதுவே பிரபஞ்சமும், பிரம்மமுமாகும்தன்னைக் கண்டு பிரபஞ்சத்தில் விரிந்து, பிரம்மமாக உயர்ந்து இவ்வுலகில், இவ்வுடலில், இதே உயிரில், இம்மனத்தில் வாழ்வது தெய்வீக வாழ்வு என ஸ்ரீ அரவிந்தம் கூறுகிறது.

அகந்தை EGO

     சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து சிருஷ்டி ஏற்பட்ட பொழுது மனம் ஏகனான பரமாத்மாவை அநேகனாகப் பிரித்தது. இது பிரியாத பிரிவினைபிரியாத பிரிவினையைப் பிரியும் பிரிவினையாக்குவது அகந்தைமகனுக்குத் திருமணமாவதால் குடும்பம் பிரியும் அவசியமில்லைதனிக்குடும்பம் போவதாலும், வெளிநாடு போவதாலும் பிரிய வேண்டாம்.   வீட்டிலேயிருந்தாலும், ஊரிலேயே இருந்தாலும் பிரியப் பிரியப்பட்டால் குடும்பம் பிரிந்துவிடும். பிரியப் பிரியப்படுவது, நான் வேறு, மற்றவர் வேறு என்ற எண்ணம் பிரிக்கும். அதுவும், அது போன்ற எண்ணங்களும், செயல்களும் அகந்தைக்குரியன. காலம் பிரிக்கும், மனம் பிரிக்கும்அவை கடுமையான - மீண்டும் சேர முடியாத - பிரிவினையன்று. அகந்தை பிரிப்பது, மீண்டும் கூடாதுஅகந்தை அழியாமல் கூடாது.

சச்சிதானந்தம்

     பணம் வைத்திருப்பவன் தொழிலாரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. அறிவுள்ளவன் புத்தகம் எழுதும் நிர்ப்பந்தம் உடையவனில்லை. பாடும் திறமையுள்ளவரை எவரும் பாட வேண்டும் எனக் கட்டாயப்படுத்த முடியாது. இது எல்லாக் வேண்டும்எனக் கட்டாயப்படுத்த முடியாது. இது எல்லாக் கட்டங்களிலும் உண்டு. தானே பிரியப்பட்டால்தான் இது நடக்கும். சத்திலிருந்து ஜடம்வரை, நாம் என்ன சாப்பிட வேண்டும், என்பது வரை நிர்ப்பந்தமில்லை.  நாமே உட்படுத்திக் கொள்ளாவிட்டால் கட்டாயமில்லை. பிரம்மம் சிருஷ்டிக்கும் என்ற கட்டாயமில்லை.

1) பிரம்மம் சிருஷ்டிக்க விரும்பியது.

2) அதனால் அது சத் (existence)ஆயிற்று.

3) பிரம்மத்திற்கு சிருஷ்டிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாததுபோல் சத்திற்குச் சித்தாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. சத்தாகவேயிருக்கலாம். சித்தாக மாற சத் முடிவு செய்தால், அது தன்னையறிய வேண்டும் (must become conscious). சித் என்பதிலிருந்து சிந்தனை வந்தது. தான் யார் என சத் அறிய விரும்பினால் அவ்விருப்பம் அதைச் சித்தாக மாற்றுகிறது. Sat is existence. It can exist without knowing what it is. When Sat wants to know what it is – to become conscious of what it is – it becomes conscious of what it is- it becomes consciousness. மூளை மூளையாக இருக்கலாம், அறிவு பெறும் கட்டாயம் அதற்கில்லை. மூளை அறிவுபெற முடிவுசெய்தால் அது பெற முடியும். அது அறிய ஆரம்பித்தால் மூளை அறிவாக மாறுகிறது.

4) பிரம்மத்திற்கு சிருஷ்டிக்கும் அவசியமில்லை.

தானே இச்சைப்பட்டு சத்தாயிற்று.

5) சத்திற்குச் சித்தாகும் கட்டாயமில்லை.

தான் சித்தாகப் பிரியப்பட்டதால் சித்தாயிற்று.

இதைச் செய்ய அது தன்னை அறிந்தது.

6) சத் என்பது ஜீவன். அதற்கு ஜீவியமில்லை. ஆனந்தமில்லை.

ஜீவியம் ஜீவியமானபின் தன்னை அனுபவிக்கும் அவசியமில்லை.

திருமணம் செய்து கொள்ள எவருக்கும் கட்டாயமில்லை.

ஜீவனான ஜீவியம் தன்னை அனுபவிப்பது ஆனந்தம்.

ஜீவியம் தன்னை அனுபவிக்க முடிவு செய்வது ஆனந்தத்தை நாடுவது.

ஜீவியம் அகம். ஆனந்தம் புறம்.

7) சச்சிதானந்தம் என்றால் சத், சித், ஆனந்தமாகும்.

8) இது பிரம்மத்தின் முதல் நிலை வெளிப்பாடு.

9) சத் என்பதை சித், ஆனந்தமாகப் பிரிப்பது சத்தியஜீவியம்.

அதைச் செய்ய வைப்பது தெய்வீக மாயை.

10) சத், சித், ஆனந்தம் --அகம்

சத்தியஜீவியம் ---புறம்

அகம், புறமாகும் பொழுது சத் என்பது சத், சித், ஆனந்தமாக அதன் புறமான சத்தியஜீவியத்தால் பிரிக்கப்படுவது தெய்வீக மாயையின் செயல்.

       முதலாளி கம்பனியை உற்பத்தி செய்ய டைரக்டர்கள் நிறைந்த போர்டையும், ஜெனரல் மேனேஜரையும் நியமித்து கட்டடங்களும் மெஷின்களும் நிறைந்த கம்பனியை ஆரம்பிக்கிறார்.

முதலாளி

-

பிரம்மம்

கம்பனி

-

சத்

டைரக்டர்கள்

-

சித்

கட்டடம்

-

ஆனந்தம்

--சத் செயல்படுவது சித்தால், அனுபவிப்பது ஆனந்தத்தால்.

--கம்பனி செயல்படுவது டைரக்டர்களால், அவர்கள் ஆனந்தப்படுவது கம்பனி என்ற கட்டடம், மெஷின் உற்பத்தி செய்வதால்.

பிரம்மம் சிருஷ்டிக்கிறது

      பிரம்மா உலகை சிருஷ்டித்தார் என நாம் அறிவோம். பிரம்மா தெய்வீக மனத்திற்குரிய கடவுள்பிரம்மா சிருஷ்டித்தார் எனில், மனம் சிருஷ்டித்தது எனப் பொருள்.

      உலகம் தற்செயலாய் சிருஷ்டிக்கப்பட்டதுஎன விஞ்ஞானம் கூறுகிறது.

     கடவுள்என ஒருவர் உலகுக்கு அப்பாலிருக்கிறார். அவர் உலகை சிருஷ்டித்தார் எனவும் கூறுகின்றனர்.

     கடைசி வாதத்திற்குப் பதிலாக பகவான் கேள்வி எழுப்புகிறார்                              - ஏன் தீமை, கொடுமையைப் படைத்தார், அப்படிப்பட்ட உள்ளம் ள்ளவரா கடவுள்?

     தற்செயலாய் எழுந்தது எனில் உலகம் ஒரு சட்டத்திற்குட்பட்டு ள்ளதை நாம் காண்கிறோம்.

பிறந்தவன் இறக்கிறான்.

பருவம் தவறாமல் வருகிறது.

தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளத்திற்கு ஓடுகிறது.

ஒரு முறையும் பள்ளத்திலிருந்து மேட்டுக்கு ஓடுவதில்லை,

என்ற ஆயிரம் சட்டங்கள் செயல்படும் பொழுது

தற்செயலாய் சிருஷ்டிக்கப்பட்டது என்றால்,

எப்படி இரண்டும் ஒரே சமயத்தில் செயல்படும்?

      இறைவன் தானே உலகமானான் எனக் கொண்டால் (hypothesis) அகண்டம் கண்டமாயிற்று என்றாகிறதுமுடிவற்ற இறைவன் சிறு அணுவானான் என்றாகும். அனந்தம் அணுவாக மாறும்மீண்டும் அணுவிலிருந்து அனந்தம் பரிணாமத்தால் வெளி வரும்இக் கொள்கையை உண்மை என நிரூபித்தால்,

1) தற்செயல் என்ற கருத்தும், மீற முடியாத சட்டம் செயல்படுகிறது என்பதும் இக்கொள்கைக்கு உட்பட்டு நாம் ஏற்கும்படி என்பதும் அமைகிறது.

2) இதற்குரிய வாதத்தால் இக்கொள்கையை பகவான் நிரூபிக்கிறார்.*

3) இதன் முடிவு மனம் உடலைவிட முக்கியமானது என முடிகிறது.

4) அந்த மனம் பிரம்மா என்ற மனமில்லை, Supermind சத்தியஜீவியம் என முடிக்கிறார்.

5) முடித்தபின் அதுவே முடிவில்லை. சச்சிதானந்தம் அதற்கும் மேலுள்ளது என்கிறார்.

6) சத்தியஜீவியம் சிருஷ்டித்தது என்ற வாதம் பிரம்மம் (Absolute) சிருஷ்டித்ததுஎன்றாகும் என்கிறார்.

      Indeterminates, Cosmic determinants, Indeterminable என்பது அத்தியாயத் தலைப்புபுரியாத புதிர் என்பது பிரபஞ்சத்திற்குரியதுஅது எதனாலும் நிர்ணயிக்க முடியாத பிரம்மத்தால் நிர்ணயிக்கப் படுகிறது என்ற விளக்கம் தத்துவத்தின் தலை சிறந்த நெறிஇவ்வத்தியாயம் தனிக்கட்டுரையாக விளக்கி எழுதப்பட்டுள்ளது.

      மேற்சொன்னது இரண்டாம் புத்தகத்தில் முதல் அத்தியாயம்.இரண்டாம் புத்தகம் ‘ஞானமும் - அஞ்ஞானமும்’ ஆன்மீகப் பரிணாமம் செயல்படும் வகை என்ற தலைப்பையுடையதுஇதன் முதற் பகுதி (14 அத்தியாயங்கள்) எப்படி ஞானம் அஞ்ஞானத்தினின்று பரிணாமத்தால் வெளிவருகிறது என்பதுஅதன் 14 அத்தியாயங்களை வரிசையாகக் காண்போம். அதன்முன் நூலின் அமைப்பைப் பார்த்தால், முதல் புத்தகம் சிருஷ்டி (ஞானம் அஞ்ஞானமாவது).  இரண்டாம் புத்தகத்தின் முதற் பகுதி எப்படி ஞானம் அஞ்ஞானத்திலிருந்து வெளி வருகிறது என்பதுஇரண்டாம் பகுதி எப்படி அப்படி வெளி வந்த ஞானம், ஆன்மீகப் பரிணாமத்தால் ஆன்மாவாகி, ஆன்மா வளர்ந்து சத்தியஜீவியமாகிறது என்பதாகும். மேற்சொன்ன முதல் அத்தியாயம்

--ரிஷிகள், விஞ்ஞானிகள் இருவரும் நம்பும் நாத்திகவாதத்திற்குப் பதில் சொல்வதுடன்,

--விஞ்ஞானிகள் திகைப்பை, தர்க்க ரீதியாக விலக்குகிறது.

--ஆன்மா ஆதி அந்தமற்றது, அசைவற்றது, அழிவற்றது, பிறக்காதது, இறப்பில்லாதது என்பது எப்படி மனம் கண்ட ஒரு தலைக் காட்சி எனவும் எடுத்துக் கூறுகிறது.

--பிரம்மத்தின் முழுமை, காலத்தின் மூன்று நிலைகள், மௌனம், ஐக்கியம், ரூபம், சிருஷ்டி, ஆகியவற்றிற்கு உள்ள நிலைகள் இரண்டல்ல, மூன்றுஎன அறிவைக் கடந்த நிலையை அறிவுக்கு எட்டும்படிக் கூறுகிறார்.

--மாயையின் மூன்று நிலைகள், மாயையின் மூன்று திறன்களை பிரம்மத்தின் மூன்று நிலைகளுடைய சக்தியாக விவரித்து மாயை என்பது இல்லாததில்லை, இருப்பதிலேயே சிறந்தது, அது பிரம்மத்தின் ஜீவியம்என 8 அல்லது 10 வகைகளாக அறிவு ஞானமாக முதிரும்படிக் கூறுகிறார். ஐன்ஸ்டீனும், கோபர்னிகஸ்ஸும் விஞ்ஞானத்தில் ஏற்படுத்திய அடிப்படைப் புரட்சிகள் பெரியவைபகவான் ஸ்ரீ அரவிந்தர் ஆன்மாவில் ஏற்படுத்தும் புரட்சி அவற்றை, சூரியமண்டலத்தின் முன் எறும்புப் புற்றாக்குகிறது.

--நூல் நம் ஆத்மா ஜீவியத்தில் ஏற்படுத்தும் புரட்சியை மனம் பரந்து விரிந்து விரும்பி மலர்ந்து ஏற்பது பக்தி. அது பலிப்பது சித்திஇப்புரட்சியை மேற்கொள்ள முன் வருபவர்கள் மனத்தை இழந்து தோல்வியடைகின்றனர்அத்தோல்வியும் வாழ்வின் பெருவெற்றியாகும்தோற்க மறுப்பவர் புரட்சி வீரர்தோல்வி தோற்றால் ஆத்மா மலரும்மலர்ந்த ஆத்மா வளரும். அது பரிணாம வளர்ச்சி. ஆன்மீகப் பரிணாமம் உலகம் கற்பனை செய்யாத கருத்துஆரம்பத்தில் இது புரியா விட்டாலும், மனம் கேள்வியின்றி ஏற்றுக் கொண்டால் நாளடைவில் நூல் புரியும். புரியவில்லை என்ற நிலை விலகி அழியும்.

     இந்த நோக்கத்துடன் மற்ற முக்கியமான சிக்கல்களை அவிழ்க்கும் வகையில் அடிப்படையான விளக்கங்களை எழுதுகிறேன்.
 

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா

------------------------------------------------------------

மாயா, பிரகிருதி, சக்தி

      ஒரு முதலாளி கம்பனியை ஆரம்பித்தால் மானேஜர் ஒருவரை நியமிக்கிறார். தொழிலாளிகள் வேலையைச் செய்கிறார்கள். மகாத்மா காந்தி சுதந்திரத்தைப் பெற ஓர் இயக்கம் ஆரம்பித்த பொழுது காங்கிரஸ் என்ற கட்சிக்கு ஒரு தலைவரிருந்தார். தொண்டர்கள் வேலையைச் செய்தனர்குடும்பத்தலைவர் எண்ணத்தைத் தலைவி நிறைவேற்றுகிறார்பிள்ளைகள் மேலும் பூர்த்தி செய்கின்றனர் என்பவை வழக்குஎடிசன் 1100 புதுப் பொருகளை - பல்ப் போன்றவற்றைக் புதுப் பொருள்களை - பல்ப் போன்றவற்றைக் - கண்டுபிடித்து கம்பனி ஆரம்பித்துத் தானே மானேஜராகவும் இன்ஜீனீயராகவும் தொழிலாளியாகவும் வேலை செய்து அவற்றைப் பதிவு செய்து (patented) இன்று உலகப் பிரசித்தி பெற்றதாக General Electric என்ற கம்பனியை நிறுவினார்.

--மனிதன் சிந்திப்பான்.

சிந்தனை சிருஷ்டியுடையது.

சிந்திக்கும் மனிதனை, பிரம்மம் எனவும் சிந்தனையால் சிருஷ்டிக்கும் திறனை, மாயை எனவும் கூறினர்.

--மனிதன் செயலாற்ற சாட்சியாய் நிற்பான்.

  செயலை நிறைவேற்றுவான்.

செயலாற்றும் மௌனமான நிலையைப் புருஷனெனவும்                    அத்திறனை பிரகிருதி எனவும் கூறினர்.

--மனிதனால் சிந்தித்து சிருஷ்டி செய்து, மௌனமாக அத்திறனால் செயலை முடிக்கவும் முடியும்.

இருநிலைகளையும் ஏற்ற அவனை ஈஸ்வரன் எனவும் அவனது திறனை சக்தி எனவும் கூறினர்.

  • சிந்தனையால் சிருஷ்டி செய்வது முதல் நிலை.
  • மௌனமாயிருந்து செயலை முடிப்பது இரண்டாம் நிலை.
  •  சிந்தனையால் சிருஷ்டி செய்து தீவிரமாகச் செயலை முடிப்பது.

முதல் இருநிலைகளும் சேர்ந்த மூன்றாம் நிலை.

  • இம்மூன்று நிலைகளும் ஒருவருக்கே உரியது.                                                       பிரித்துப் பார்க்கும் மனம் மூன்றையும் வெவ்வேறு நிலைகளாகக் கருதி இல்லாத சிக்கலை எழுப்பி முடிச்சு அவிழவில்லைஎனத் திகைக்கிறது.

முதலாளி

-

பிரம்மம்

மேனேஜர்

-

புருஷன்

தொழிலாளி

-

ஈஸ்வரன்

என்று நாம் கொண்டால் முதலாளி (conceptively created)சிந்தனையால் கம்பனியை சிருஷ்டிக்கிறார். மேனேஜர் (dynamically executes) தீவிரமாகச் செயல்பட்டு முதலாளியின் சிந்தனையை நிறைவேற்றுகிறார்தொழிலாளி (conceptively creates and dynamically executes) முதலாளி சிந்தனையால் சிருஷ்டித்ததையும், மானேஜர் செயலால் பூர்த்தி செய்வதையும் சேர்த்துச் செய்கிறான்எடிசன் முதலாளியாகவும், மானேஜராகவும், தொழிலாளியாகவுமிருந்தான்எனவே இந்த மூன்றும் இறைவனின் மூன்று அம்சங்கள், மூன்று வேறு நபர்களில்லை என்பது ஓரளவு விளக்கும் உதாரணம். மாயை என்பது பிரம்மத்தின் சக்தி, பிரகிருதி புருஷனின் சக்தி, சக்தி ஈஸ்வரனின் சக்தி. ஆகையால் பிரம்மம், புருஷன், ஈஸ்வரன், மாயா, பிரகிருதி, சக்தி எனக் கூறும் ஆறும் இறைவனின் 6 திருமுகங்கள், ஆறு அம்சங்கள்.

  • இறைவன் ஒருவனே.
  • அவன் அம்சங்கள் ஆறு.

பரமாத்மாவும், ஜீவாத்மாவும்

     நமது ஆன்மீக மரபு பரமாத்மா அழிவற்றது, ஜீவாத்மா பரமாத்மாவில் அழிவது எனக் கூறுகிறதுஜீவாத்மாவுக்கு நம் மரபு அமரத்வம் தரவில்லைஸ்ரீ அரவிந்தர் பரமாத்மா பிரபஞ்ச ஆத்மாவாகி, ஜீவாத்மா ஆயிற்றுஜீவாத்மாவினுள் பிரபஞ்ச ஆத்மாவும், பரமாத்மாவும் புதைந்துள்ளனர் என்கிறார்பிரதமர், MP ஆக ஆரம்பித்து பார்லிமெண்ட்டில் மெஜாரிட்டி கட்சித் தலைவராகி பிரதமரானார். அதனால் MPயினுள் கட்சித் தலைவரும், பிரதமரும் புதைந்துள்ளனர் எனலாம்.

DIVINE AND UNDIVINE இறைவனும் அசுரனும்

     நமது உடலில் வாய் உணவை உட்கொள்கிறது. வயிறும், குடலும் அதை ஜீரணம் செய்கின்றன. ஜீரணமாகாதவை வெளியேறுகின்றன. மூச்சு உள்ளே சென்று ஆக்ஸிஜனால் இரத்தத்தைச் சுத்தம் செய்து, அசுத்தமான காற்றை வெளியேற்றுகிறதுவியர்வை விசர்ஜனம். வாய் நாம், பெருங்குடல் நாமல்ல என்றோ உள்ளே போகும் காற்று நாம், வெளியே வரும் காற்று நாமல்ல என்றோ கூற முடியாதுவாயும், மூக்கும், குடலும் நாமேகுடலில்லாமல் உயிர் வாழ முடியாது. வேண்டியது, வேண்டாததுஎன உலகை இரண்டாகப் பிரித்தால்,

  • வேண்டாதது என்பது தற்சமயம் வேண்டாதது, எப்பொழுதுமே வேண்டாததில்லை.
  • எதுவுமே ஒரு சமயம் நமக்கு வேண்டியிருக்கும். அது பர்சனாலிட்டியின் அளவைப் பொருத்தது.
  • அனுபவம் அதிகமாக அதிகமாக ஊரில் எவரும் ஒரு சமயம் நமக்கு இன்றியமையாதவராய் விடுவார் எனப் புரியும்.
  • பல்வேறு வகையான சொத்து, பதவி, அதிகாரம் அதிக நாள் அனுபவித்தவருக்கு இரண்டு விஷயம் புரியும்.

--எவரும் எந்த நேரமும் அவசியமாய் விடுவர்.

--எவரும் எந்த நேரமும், நேரம் அவர்க்கு சாதகமாகி விட்டால், நம்மை முழுவதும் அழிக்க முடியும்.

  • Circumconscient சூழலின் ஜீவியமறிந்தவர் நம்முள்ளேள்ள எதுவும் வெளியிலுள்ள எதையும் கவர்ந்து ஆபத்து விளைவிக்கலாம்என அறிவர். அவர்கள் எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார். எவரையும் எதிர்க்க மாட்டார்.
  • அடுத்த கட்டத்தில் ஆன்மீக விவேகமுள்ளவர் எவரும், சூழலின் ஜீவியம், கரணங்களின் ஜீவியம் (intraconscient)ஆகிய இடங்களில் உள்ள எதுவும் நமக்குத் திருவுருமாற உதவும் என அறிவர்.

- அதனால் உலகில், பிரபஞ்சத்தில் நமக்கு இன்றியமையாதது என ஒன்றில்லை என்பது ஆன்மீக ஞானம்.

       இவற்றை பகவான் எடுத்துரைக்கக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

--வேண்டாததை அனுபவிக்காதவனுக்கு வேண்டியதின் ஆழ்ந்த ருசியான அனுபவமில்லைவறுமையை அனுபவித்தால் வசதியின் அருமை தெரியும்.

--இறைவன் நாடும் ஒருமையை நாம் ஏன் மறுக்க வேண்டும்வேண்டாதது இறைவனுக்கு வேண்டியது என்பதால் நமக்கும் வேண்டியதே.

--வலியை அனுபவிக்காதவன் ஆனந்தத்தின் முழுமையை அறிய முடியாது.

--உலகம் இறைவனின் ஆனந்தலீலைஎன்று அறிய வேண்டாதது இருக்கக் கூடாது.

--தீமையை விலக்குபவன் நன்மையையும் விலக்குவான்.

--பேர்ஆனந்தம் பெறவேண்டி பெரிய இருளை இறைவன் ஏற்படுத்தினான்.

--வேண்டாததுஎன நாம் அறிவது நம் அறியாமை அறிவது.

--குறுகிய அளவு ஜீவனிலில்லை, அகந்தையில் உள்ளது.

--எதிரானதை அனுபவிக்காமல் முழு ஞானத்தை அறிய முடியாது.

--அறியாமை அறிவைவிடப் பெரியது.

       இறைவனே உலகமானான்என்பது கொள்கையானால், வேண்டாதது வர முடியாது.

புத்தர், சங்கரர், பகவான் ஸ்ரீ அரவிந்தர்

     இதுவரை உலகில் புத்தரைப் போன்ற அறிஞர் (thinker) பிறக்கவில்லை என்று உலகம் கூறுகிறது. அதையே பகவானும் கூறுகிறார்புத்தரையும் சங்கரரையும் பற்றிப் பேசும் பொழுது ஸ்ரீ அரவிந்தர்,

  • சங்கரர் புத்தரை விடப் பெரிய அறிஞர் ஆனால்
  •  புத்தர் அவரை விடப் பெரிய ஆத்மா,

என்று கூறுகிறார்உபநிஷதம் கூறுவது புத்தருக்கு ஒத்துவரவில்லை.  அதனால் அவர் செய்த தவம் அவரை நிர்வாணம் எய்த உதவியதுஎட்டுப் பாதைகளை அவர் உலகுக்கு அளித்தார்.   தீமையைக் கடக்க,அதிலிருந்து தப்பிக்க பௌத்தம் அகந்தையிலிருந்து விலகும் பாதையைக் காட்டுகிறதுமனம் அகந்தையிலிருந்து விலகினால் அகந்தை கரைகிறது என்று கண்டார்அதே போல் மனம் சத் புருஷனிலிருந்து (Self) விலகினால் சத் புருஷனும் கரையும் என்றார்.அகந்தையை மனம் உற்பத்தி செய்ததால், மனத்தால் அகந்தையைக் கரைக்க முடியும்சத் புருஷனை அகந்தை உற்பத்தி செய்யவில்லை.  அகந்தை உற்பத்தியாவதன் முன் சத்புருஷன் உற்பத்தியானதால் அதை மனத்தால், மனத்தின் விசாரத்தால் கரைக்க முடியாது என பகவான் கூறுகிறார். அகந்தையையும், தீமையையும் வென்ற பௌத்தம் கடவுளில்லை என்றது. புத்தர் பிரபஞ்ச வாழ்வு (existence) என்ன என்பதை ஆராய மறுத்ததால் அவர் கூறுவதை நாம் ஏற்க முடியாதுஎனக் கூறுகிறார். புத்தரை சங்கரர் கடந்து சென்றார். அவரை வென்றார். உலகம் மாயை என்றார். உலகம் புத்தரைக் கைவிட்டு சங்கரரை ஏற்றது.

  • சங்கரர் மாயை எனக் கூறுவது சரியில்லை.
  • அஞ்ஞானத்தை சங்கரர் மாயைஎனக் கூறுகிறார்என பகவான்

சங்கரர் புத்தரைக் கடந்து வந்ததைப் போல ஸ்ரீ அரவிந்தர் சங்கரரைக் கடந்த வகையை இரண்டாம் புத்தகம் 5, 6 அத்தியாயங்ள் கூறுகின்றன.

ஞானம், அஞ்ஞானம்

     மனிதன் உலகை அறிய முயல்கிறான்அவனுக்குள்ள பெரிய கருவி மனம். மனம் பிரிக்கும் கருவி. இதனால் முழுமையைக் காண முடியாதுபகுதியைத் தான் காண முடியும்மனம் ஒரு பகுதியைக் கண்டால், காணாத பகுதியிருக்கும்அது எஞ்சியிருக்கும். இதை duality இரட்டை என்கிறோம்ஒளி, இருள் ; மெய், பொய்; பிரம்மம்,சிருஷ்டி; வலி, ஆனந்தம்; மௌனம், சப்தம் என்பவை அது போன்ற இரட்டைகள்அதனால் சிருஷ்டியில் மனம் எதைக் கண்டாலும், அதற்கு எதிரான இரட்டை உடனே எழும்சத் என்பதை நாமறிந்த மாத்திரம்  அசத் எழுகிறதுஅப்படி எழுந்த இரட்டைகள் ஏராளம். தாழ்ந்தது,உயர்ந்தது; நல்லது, கெட்டது; ஆண், பெண்; என்பன போன்றவை அவை.

  • மனம் பகுதியை அறியும் கருவி என்பதால் இறைவனையும் - பிரம்மத்தையும் - மனம் பகுதியாகவே அறிந்தது. வேதம், உபநிஷதம், கீதை ஆகியவை அப்படி அதிகபட்சம் இறைவனைக் கண்டு கொண்டதை அவர்கள் அக்ஷரப் பிரம்மம் என்றனர். அதுவே முடிவு என்றும் கூறினர்.

      காமிரா படம் எடுத்தால், நாம் காணும் உலகில் ஒரு பகுதியைத்தான் படமாக எடுக்க முடியும். நாம் காண்பதே முழு உலகமில்லை, ஒரு பகுதிதான் என்பதால் காமிராவால் முழு உலகை அறிய முடியாது. அது கருவியின் குறை. வீடியோ காமிராவை விட அதிகமாக அறியும், அசைவைப் படம் பிடிக்கும் என்பது உண்மையானாலும், வீடியோவாலும் முழு உலகையறிய முடியாது. ராக்கட்டில் satelliteமூலம் பூமியை முழுவதும் பார்க்க முடியும்மனம் காண முடியாத முழுமையை சத்தியஜீவியம் காண முடியும். சத்திய ஜீவியத்திற்கு இரட்டையில்லை, முழுமையுண்டு. அப்படி மனம் ஏற்படுத்திய அடிப்படையான இரட்டைகளில் சச்சிதானந்தத்தின் எட்டு அம்சங்கள் முக்கியமானவை.

சத்

சித்

ஆனந்தம்

ஐக்கியம், சத்தியம், நன்மை(goodness)

ஞானம், சக்தி

அழகு,சந்தோஷம், அன்பு

இவ்விரட்டைகள்


 


 

ஐக்கியம்

×

பிரிவினை (பகுதி)

சத்தியம்

×

பொய்

நன்மை

×

தீமை

ஞானம்

×

அஞ்ஞானம்

சக்தி

×

இயலாமை

அழகு

×

விகாரம்

சந்தோஷம்

×

கவலை

அன்பு

×

வெறுப்பு

      சச்சிதானந்தம் என்பது இறைவன்இறைவனை இந்த எட்டு இரட்டைகளில் ஒன்றின் மூலம் விளக்கிக் கூறலாம்ஆனால் வேதம், உபநிஷதம், ஸ்ரீ அரவிந்தம் இறைவனை ஞானம் அஞ்ஞானம் என்பதன் மூலமே கூறுகின்றன. மனிதன் மனமுடையவன். மனமே அவன் உயர்ந்த கருவி என்பதால் மனம் பெறுவது ஞானம் என்பதால் ஞானம் × அஞ்ஞானம் என்ற இரட்டை பொருத்தமாக அமைகிறது.அஞ்ஞானம் என்ற இரட்டை பொருத்தமாக அமைகிறது.அடுத்த அத்தியாயம் ஞானமும் அஞ்ஞானமும். அதை எடுக்கும் முன் சங்கரர் மாயை என்று கூறுவது உண்மையில் அஞ்ஞானம் என இரு அத்தியாயங்களில் கூறுகிறார். கனவு பொய்யன்று என்பதால் அந்த உதாரணம் பொருத்தமாகாது. பாம்பு, பழுது என்பவை இல்லாதவை அல்ல என்பதால் அவை மாயையாகாது, அறியாமையாகும் என்பது பகவான் கூறும் விளக்கம்.

     பகவான் தத்துவம் முழுமை, முழு முதற் கடவுள் முடிவான சிருஷ்டி என்ற அடிப்படையுடையது. அதனால்,

--பிரம்மம் சிருஷ்டியில் எல்லா நிலையிலும், எல்லா நேரங்களிலும்,எல்லா ரூபங்களிலும், பிரம்மமாகவேயிருக்கிறது.

--நாம் பிரம்மம், நம் செயல்கள் பிரம்மம்.

--நல்லது பிரம்மம், கெட்டது பிரம்மம்.

--ஞானம் பிரம்மம், அஞ்ஞானம் பிரம்மம்.

--பிரம்மம் ஆனந்தம் தேடி அஞ்ஞானத்தை சிருஷ்டித்து, அதனுள் மறைந்து, வெளி வருவது பிரம்மானந்தம் என்பதால் சிருஷ்டியில் அஞ்ஞானம் உள்ளது.

--சிருஷ்டிக்கு அஞ்ஞானம் தேவையில்லை; ஆனால் நாமுள் இந்த சிருஷ்டிக்கு அஞ்ஞானம் அத்தியாவசியம்.

--சிருஷ்டியின் இரகஸ்யம் புரிய ஞானம், அஞ்ஞானம் ஏற்பட்ட வகை, அவற்றுக்குள்ள தொடர்பு, அஞ்ஞானம் ஞானமாகும் வகை, உபநிஷதம், வேதம் கைக்கொண்டு விளக்கம் கூறிய முறை, பகவான் கூறுவது எப்படி அவற்றிலிருந்து முறை, வேறுபடுகிறது என்பவை நாம் அறிய வேண்டியவை.
 

தொடரும்....

ஸ்ரீ அரவிந்த சுடர்

       பிரித்துப் பார்க்கும் திறன் நாம் எந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம்  

         என்பதைப்பொருத்தது. கண்டம் நமக்கு அகண்டமாகத்

தெரிந்தால்தான்   The Life Divine விளங்கும்.


 


 



book | by Dr. Radut