Skip to Content

13.நேர்மையான காலம்

நேர்மையான காலம்

     டெபுடி கலைக்டர் இன்ஜினீயரை அழைத்து டீ சாப்பிட உட்கார்ந்தார். 1950இல் இன்ஜினீயர் சம்பளம் 187 ரூபாய், டெபுடி கலைக்டர் சம்பளம் 230 ரூபாய். டெபுடி கலைக்டர் 3 தாலுக்கா அதிகாரிஇன்ஜினீயரை அழைத்து உபசாரம் செய்வதில்லை. இன்ஜினீயர் நாணயமறிந்து பாராட்ட வேண்டி அதைச் செய்தார்.

     கிராமத்தில் பணக்காரன் வைத்தது சட்டம். 70 ஏக்கர் சர்க்கார் நிலத்தை வெகுநாட்களாக ஒருவர் அனுபவித்து வருகிறார்.  இன்ஜினீயர் இளைஞர். கல்லூரியை விட்டு வந்த புதிய அனுபவம்.  இக்கிராமத்தில் ஒரு வேலை செய்தார்நீர் தேங்கி, விவசாயம் பெருகும் என்பதால் (barrage) ஓடும் நீரைத் தடுக்க அணை கட்ட முன்வந்தார் இன்ஜினீயர். அது நடந்தால் அக்கிரமமாக ஆக்கிரமிக்கப்பட்ட 70 ஏக்கர் நிலமும் ஏரியாகும். அவர் ரூ.10,000 கொண்டுவந்து இன்ஜினீயரிடம் "இதை எடுத்துக் கொள்ளுங்கள். வேலையை நிறுத்துங்கள்'' என்றார். அன்று அது 20 ஏக்கர் விலை.இன்ஜினீயருக்கு 5 வருஷ சம்பளம். இன்ஜினீயர் மறுத்துவிட்டார்.  டெபுடி கலைக்டரிடம், "நீங்களாவது உதவுங்கள்'' என்றார்டெபுடி கலைக்டர் மறுத்துவிட்டு, இன்ஜினீயரை அழைத்துப் பாராட்டினார்.

- இந்த ஆபீசர்கள் மகாத்மா பரம்பரையில் வந்தவர்கள்.

- பணம் வாங்கலாமா, வேண்டாமா என்ற சபலம் எழுந்து மறுப்பவர் இல்லை. அந்த எண்ணமே தோன்றாத உத்தம புருஷர்கள்.

- அது நேர்மையான காலம்; அவர்கள் நாணயமானவர்கள்.

காலம் கெட்டுப்போனபின் நாணயத்தைக் கைவிட மறுப்பவன், அதனால் தொந்தரவுக்கு உட்படாதவன் அன்னை அன்பர்.

 

****


 


 



book | by Dr. Radut