Skip to Content

14.பிரமிட்டிலுள்ள அரசர்கள் உடல்

பிரமிட்டிலுள்ள அரசர்கள் உடல்

     எகிப்தில் பிரமிட் கட்டப்பட்டதுஅதனுள் அரசர்கள் உடல் தைலக் காப்பிட்டு வைக்கப்பட்டன. அவை பல ஆயிரம் ஆண்டுகளாக சிதையாமலிருக்கின்றன. மனத்தைப் பலவாறு பிரித்து அன்னை பேசுகிறார்உடலுக்கு மனம் உண்டு, உயிருக்கு மனம் உண்டு என்று அவற்றை bodily mind, vital mind என்கிறார். உடல் உயிருள்ளது. அதனுள் உயிரற்ற பாகம் உண்டு (Matter). அதற்கும் மனம் உண்டு என்றவர் அம்மனத்தை material mind ஜடமனம் என்கிறார்.

தைலம் ஜடமனத்திற்கு உயிர் கொடுத்தால்

அம்மனம் (material mind) உடல் உருவம் சிதையாமல்

பல ஆயிரம் வருஷமிருக்கும். அதை எகிப்தியர் செய்தனர்

என்கிறார் அன்னை.

     நாம் செய்யும் வேலைகளைப் பழக்கம் அதிகமானால் கை தானே செய்யும். டைப்பிஸ்ட்க்கு எழுத்துள்ள இடம் கண் பார்க்காமல் தெரியும்விரலுக்கே தெரியும்பாங்க்கில் பணம் எண்ணுபவர் மற்றவர் பேசுவதையும் கவனித்துக்கொண்டே எண்ணினாலும், தவறு வருவதில்லை; விரல் அறியும். அரிவாள்மணையில் வெங்காயம் அரிபவர் மிகவிரைவாகப் பார்க்காமல் அரிவார். கையை வெட்டிக் கொள்வதில்லைநாம் அறிந்ததை உடல் அறிந்தால், உடலில் உள்ள மனம் body mind அறிந்தால், கண் பார்க்காமல் செய்யலாம். ஜடமனம் அதற்கும் கீழ் உள்ளதுஎகிப்து மக்கள் கண்டுபிடித்த தைலம் ஜடமனத்திற்கு உயிர் கொடுத்தது. அம்மனம் உடலின் உருவத்தை ஆயிரம் ஆண்டாகப் பாதுகாக்கிறது என்கிறார் அன்னை.

****


 



book | by Dr. Radut