Skip to Content

03.ஆன்மாவும் செயல்திறனும்

ஆன்மாவும் செயல்திறனும்

                                                                                                     N. அசோகன் ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள காங்கோ நாட்டில் லுமூம்பா என்பவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் அவர் ஒரு பட்டதாரியாக விளங்கியதுதான். அந்நாட்டில் அந்நேரம் பதின்மூன்று பட்டதாரிகள்தான் இருந்தார்கள். இந்திய சுதந்திரத்திற்காகப் பேச்சுவார்த்தைகள் நடந்தபொழுது இந்தியாவின் சார்பாக வந்திருந்த காந்தி, நேரு, படேல், ஜின்னா மற்றும் லியாகத் அலி ஆகிய ஐவரும் லண்டனில் பயிற்சி பெற்ற வழக்கறிஞர்களாக விளங்கினர். அவர்களுக்கு மற்ற திறமைகளிருந்தாலும் அவர்களுக்குக் கிடைத்த ஆங்கிலப் படிப்பு அவர்கள் தலைவர்களாகத் தலையெடுக்க உதவியது என்பது தெளிவாகிறது. ஒரு கட்சியில் தனித்தன்மையோடு விளங்குகின்ற தலைவர் மற்றும் பெயர் பெற்ற வழக்கறிஞர்கள், கல்வித்துறை நிபுணர்கள் ஆகியோரைப் பார்த்தால், இவர்களெல்லாம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் வாங்கியவர்களாக இருப்பது தெரியவரும். புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெறுவது, செயல்திறன் மேம்படுவதற்குச் சிறந்ததொரு வழியாகும்.

     அமெரிக்காவில் Fred Smith என்பவர் Federal Express என்ற கொரியர் சர்வீஸை ஆரம்பித்த 20 வருடங்களிலேயே அக்கம்பெனியின் வருடாந்திர விற்பனையை 40 பில்யன் டாலர் அளவிற்கு உயர்த்தினார்இந்த அற்புதமான ஆற்றல் அவருக்கு எப்படி வந்தது? வியட்நாம் போரில் அவர் ஒரு வீரராகப் பணியாற்றியிருந்தார். ராணுவத்தில் கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமாகும்இந்த ராணுவப் பயிற்சிதான் அவருடைய வியாபார வெற்றிக்கு வித்தாக அமைந்தது.

     ராஜா ராவ் சிறந்த ஆங்கில எழுத்தாளராகத் தலையெடுத்தார்; அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். ராதாகிருஷ்ணன் சர் பட்டம் வாங்கினார்; இந்திய அரசியல் உச்சநிலைக்கு வந்தார். சர். சி.பி.ராமசுவாமி இளம் வயதிலேயே வைஸ்ராயுடைய எக்ஸிக்யூட்டிவ் கவுன்சில் உறுப்பினராகச் சேர்ந்தார். இவர்களுடைய முன்னேற்றத்திற்கு ஆதாரமாக இவர்களுக்குப் பின்னால் ஆன்மீக அறிவோ அல்லது அதைத் தாங்கிய ஆன்மீக அம்சம்கொண்ட ஒருவரோ இருந்திருப்பார்கள்ராஜா ராவின் தகப்பனார் தினமும் இரவு 1.00 மணி வரையிலும் கோவில் தியானம் செய்வாராம்சி.பி. ராமசுவாமி, தமிழ் நாட்டில் வாழ்ந்த மகான் ஒருவருடைய பரம்பரையில் வந்தவராவார்ராதாகிருஷ்ணன் வேதத்தில் வல்லுநராக விளங்கினார்.

     உயர்ந்த கல்வி, ராணுவக் கட்டுப்பாடு, ஆன்மிகப் பின்னணி ஆகியவை சாதாரண மனிதர்களை, அவர்களுடைய சகாக்களைவிட,பலமடங்கு உயர்த்துகிறது. தம்முடைய வாழ்க்கையில் நேரடியாக ஆன்ம சக்தியைச் செயல்பட வைப்பவர், மேற்கண்டவர்களுடைய சாதனைகள், பர்சனாலிட்டியின் மேல்மட்டத்திலிருந்து நிகழ்த்தப்பட்டவை என்று புரிந்து கொள்ளுமளவிற்கு, தன்னிலையில் அபாரமாக உயர்வார். ஆன்மா முழுமையாக வெளிப்படும்பொழுது வாழ்வில் அப்படியோர் அபாரமான பலனிருக்கும்.

     செயல்திறனென்பது "பிஸிக்கலா'கவுமிருக்கலாம் அல்லது அறிவுரீதியானதுமாகவும் இருக்கலாம். இரண்டாவது முதலைவிடப் பல மடங்கு உயர்ந்ததாகும். "பிஸிக்கல்' செயல்திறன் கூட பெரியதாகச் சாதிக்கும். நெருக்கடியான நேரங்களில் உடம்பின் செயல்திறன் பல மடங்கு உயரும். ராணுவத்தில் போர்க்காலத்தில் இதைப் பார்க்கலாம்இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு ரிப்பேர் வேலை ஒன்று அமெரிக்க ராணுவத்திற்கு வந்ததுதேசபக்தியால் உந்தப்பட்ட வீரர்களும், அதிகாரிகளும் அந்தப் பெரிய வேலையை 48 மணி நேரத்தில் முடித்தார்கள். இச்சாதனைச் செயல்திறன் 45 மடங்கு உயர்ந்துள்ளதைக் காட்டுகிறதுஇப்படி உடம்பின் செயல்திறனை உச்சிக்குக் கொண்டு போக முடியாமல் அடுத்தகட்டமான அறிவின் செயல்திறனுக்கு உயர முடியாது.  அஷ்டாவதானம், சதாவதானம் போன்றவை அறிவின் செயல்திறனுக்கு உச்சக்கட்ட எடுத்துக்காட்டுகள்நம்முடைய உடலுழைப்பை உச்சக்கட்டத்திற்குக் கொண்டுபோனால், அதன்பின்னர் இத்தகைய அறிவுரீதியான செயல்திறன் நம்மிடையே வெளிப்படக்கூடிய வாய்ப்புகள் எழும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

                 நற்செயல் எனில் பழைய நோக்கங்கள் விலக்கப்பட வேண்டும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆசைக்குப் பின்னால் ஆண்டவனிருப்பதாக அன்னை கூறுகிறார். மனித முயற்சியின் சிகரத்திற்குப் பின்னால் இறைவன் இருக்கிறான். பிராணமயப்புருஷனுக்குப் பின்னால் அன்னையும், அன்னமயப் புருஷனுக்குப் பின்னால் வேதரிஷிகளும் இறைவனைக் கண்டார்கள்.

ஆண்டவன் ஆசைக்குப் பின்னாலிருக்கிறான்.

சைத்தியப்புருஷனுக்குப் பின்னால்

பூரணயோகம் இறைவனைக் காண்கிறது.


 book | by Dr. Radut