Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)                                                                                    கர்மயோகி

XV. The Supreme Truth-Consciousness Page      No.135, Para No.5

15. உயர்ந்த சத்தியஜீவியம்

There is something we have to realise.

நாம் அறிய வேண்டியது ஒன்றுண்டு.

We can to a certain extent conceive of it.

ஓரளவு நாம் அதைக் கருத முடியும்.

It is the view of the all-comprehending Supermind.

அது காலத்தைக் கடந்த சத்தியஜீவியத்தின் நோக்கம்.

It embraces and unites the successions of Time and divisions of Space.

அது இடத்தின் பகுதிகளையும், காலத்தின் தொடர்ச்சியையும் தழுவும்.

This factor of Time is indispensable.

காலம் என்ற அம்சம் தவிர்க்க முடியாதது.

In its absence, there would be no change.

காலமில்லையெனில், மாற்றமிருக்காது.

There would be no progression.

முன்னேற்றமிருக்காது.

There would be a perfect harmony.

சிறப்பான சுமுகம் இருக்கும்.

It would be perfectly manifest.

அது பூரணமாக வெளிப்படும்.

It would be coeval with other harmonies.

மற்ற சுமுகங்களுடன் அது உடன் உறையும்.

It is a sort of eternal moment.

ஒரு வகையில் அது காலத்தை வென்ற காலமாகும்.

It is not successive to them.

அங்குத் தொடர் நிகழ்ச்சியில்லை.

It is not a movement from the past to the future.

கடந்தது வரப் போவதை எட்டும் சலனம் அங்கில்லை.

Instead, there is a constant succession.

அதற்குப் பதிலாக, தொடர்ந்த நிகழ்ச்சிகள் நிரந்தரமாக இருக்கும்.

It is developing harmony.

அது வளரும் சுமுகம்.

Here one strain rises out of another that preceded.

ஒரு ஸ்வரம் முந்தைய ஸ்வரத்தினின்று எழுகிறது.

It conceals in itself that which it has replaced.

கடந்ததை அது மறைக்கும்.

The Self-manifestation can exist without the factor of Space.

சுய வெளிப்பாடான சிருஷ்டி இடமின்றி இருக்கலாம்.

Then, there would be no mutable relation of form.

அப்பொழுது மாறும் ரூபமிருக்காது.

Nor will there be the intershock of forces.

சக்திகளின் மோதலிருக்காது.

All would exist.

அனைத்துமிருக்கும்.

But would not be worked out.

ஆனால் அவை செயல்படா.

(It will be a spaceless self-consciousness.

It will be purely subjective.

It would contain all things.


 

It will be in an infinite subjective grasp.


 

It will be like the mind of a cosmic poet or dreamer.

But would not distribute itself.

 

It does so through an indefinite objective extension.)

அது இடமில்லாத சுயஜீவியமாகும்.                                             அது அகத்திற்கேயுரியதாகும். அனைத்தையும் அது உட்கொண்டதாகும்.

அது அனந்தமாக அகத்தின் பிடிப்பிலிருக்கும்

அது பிரபஞ்ச கவியின் மனம் போலிருக்கும். அவர் கனவு போலிருக்கும்.

ஆனால் அது தன்னை விநியோகிக்காது.

முடிவில்லாத புறத்தின் நீட்சியாக இருக்கும்.)

Or, again Time alone may be real.

அல்லது, காலம் மட்டும் உண்மையாக இருக்கலாம்.

Its successions would be a pure development.

அதனுடைய கட்டங்கள் தானே வளர்வதாக இருக்கும்.

In it one strain would rise out of another.

அங்கு ஒரு ஸ்வரத்தில் அடுத்தது எழும்.

It would be a subjective free spontaneity.

அது இயல்பாக எழும் அக உணர்வாகும்.

It would resemble a series of musical sounds.

தொடர்ந்த பாட்டு ஸ்வரங்களாக அது அமையும்.

Or, it will be like a succession of poetical images.

அல்லது தொடர்ந்த கவியின் கற்பனை ரூபங்களாகும்.

Instead, we have a harmony.

அதற்குப் பதிலாக, ஓர் சுமுகமிருக்கும்.

It is worked out in terms of Time and Space.

அது காலத்திலும், இடத்திலும் எழும்.

It is in terms of forms and forces.

அது ரூபமாகவும், சக்தியாகவும் அமையும்.

They stand related to one another.

அவை ஒன்றோடொன்று தொடர்புள்ளதாக இருக்கும்.

It is in an all-containing spacial extension.

எல்லாவற்றையும் உட்கொண்ட இடத்தின் வீச்சு அது.

It is an incessant succession.

அது முடிவற்ற தொடர்.

It is one of powers and figures of things and happenings.

அது சக்தி, ரூபம், நிகழ்ச்சி.

It is in our vision of existence.

அது நாம் காணும் பிரபஞ்ச திருஷ்டி.

Page no.135, Para No.6


 

Time and Space is a field of existence.

காலமும், இடமும் பிரபஞ்ச வாழ்வின் அரங்கம்.

Different potentialities are created there.

அங்கு பல வாய்ப்புகள் எழுகின்றன.

They are embodied, placed, related to this field.

அவை உயிர் பெற்று, இடம் பெற்று, இதனுடன் தொடர்பு கொள்கின்றன.

Each has its powers and possibilities.

ஒவ்வொன்றிற்கும் சக்தியுண்டு, வாய்ப்புண்டு.

They front the other powers and possibilities.

மற்ற சக்திகளுக்கு இவை முகமாக இருக்கின்றன.

Successions of Time bring about its result.

காலத்தின் சுழல் இவற்றிற்குப் பலன் தருகின்றன.

Those results have this appearance.

இப்பலன்கட்குத் தோற்றமுண்டு.

The appearance is to the mind.

இது மனம் காணும் தோற்றம்.

It is a working out of things.

நிகழ்ச்சிகள் செயல்படும் வகையிது.

It is a shock and struggle.

இது மோதலும், போராட்டமுமானது.

It is not a spontaneous succession.

இது இயல்பான எழுச்சியன்று.

The reality is different.

உண்மை வேறு.

It is a spontaneous working out of things.

இயல்பின் எழுச்சி தன் போக்கை இங்ஙனம் காண்கிறது.

It is from within.

இது உள்ளிருந்து எழுவது.

The shock and struggle are external.

மோதலும், போராட்டமும் புறத்திற்குரியன.

There is an inner inherent law.

உடன் பிறந்த உள்ளுறைச் சட்டம் ஒன்றுண்டு.

It is of the one and the whole.

அது முழுமையின் ஜீவன் அளிப்பது.

It is necessarily a harmony.

அது சுமுகமானது என்பது விலக்க முடியாத விஷயம்.

It governs the outer and processive laws of the parts.

பகுதியின் பாங்கு புறத்தில் ஆட்சி செய்வதாகும் இது.

The parts are forms.

பகுதிகள் ரூபங்கள்.

They appear to be in collision.

அவை மோதுவதாகக் காணப்படும்.

This is a greater and profounder truth of harmony.

சுமுகம் ஆழ்ந்தது, கனத்த சத்தியத்தைத் தாங்குவது.

It is always present to the supramental vision.

சத்தியஜீவியத்தின் பார்வை அதை இழப்பதில்லை.

This is a discord to the mind.

மனம் அதைப் பிணக்காகக் காண்கிறது.

It is only in appearance.

அது தோற்றம்.

It is so because each is considered seperately in itself.

ஒவ்வொன்றையும் தனித்துக் காண்பதால் அப்படித் தோன்றுகிறது.

There is a harmony.

சுமுகம் உண்டு.

It is ever present and ever developing.

சுமுகம் நிலையாக, நிரந்தரமாக வளர்கிறது.

This discord is an element of that harmony.

இப்பிணக்கு அச்சுமுகத்தின் ஒரு பகுதி.

It is a harmony to the Supermind.

அது சத்தியஜீவியத்திற்குச் சுமுகம்.

Its view is one of unity.

அதன் நோக்கம் ஐக்கியம்.

To it all things are in mutiple unity.

அதன் பார்வையில் அனைத்தும் ஐக்கியத்தை நாடித் தழுவுகின்றன.

Mind sees only a given time and space.

மனம் ஒரு புள்ளியைக் காண்கிறது. அதன் காலமும், இடமும் தெரிகின்றன.

It views many possibilities pell-mell.

பல வாய்ப்புகள் அதற்குக் குழப்பமாகக் காட்சியளிக்கின்றன.

They are all more or less realisable in that time and space.

அவையனைத்தும் ஏறத்தாழ காலத்தில் பலன் தரக்கூடியவை.

The Supermind is divine.

சத்தியஜீவியம் தெய்வீகமானது.

It sees the whole extension of Time and Space.

அது காலத்தின் நீட்சியை இடத்தின் வீச்சில் முழுமையாகக் காண்கிறது.

It can embrace all the mind's possibilities.

மனம் காணும் வாய்ப்புகள் அதனுள் அடக்கம்.

It sees very many more.

சத்தியஜீவியம் மேலும் பலவற்றைக் காணும்.

They are not visible to the mind.

அவை மனத்தின் பார்வையில்லை.

But they are all without any error.

ஆனால் அவற்றில் தவறு ஏற்படுவதில்லை.

Nor do they grope or confuse.

குழம்பித் தடுமாறுவது அதற்கில்லை.

It perceives each potentiality.

ஒவ்வொரு வாய்ப்பையும் அதனால் காண முடிகிறது.

It sees it in its proper force.

அதற்குரிய அமைப்பில் அதைக் காண்கிறது.

Also it sees the essential necessity and right relation to the others.

அடிப்படையான தேவையையும், முறையான தொடர்பையும் அறிகிறது.

It sees in the right time place and circumstances.

நேரம், காலம், சந்தர்ப்பம் சரியானது.

It sees its gradual and ultimate realisation.

படிப்படியாக வளர்ந்து முடிவாகப் பலனடைவதை அது காணும்.

The Supermind sees thing steadily.

சத்தியஜீவியப் பார்வை நிதானமுடையது.

And it sees them as a whole.

பார்ப்பதை முழுவதுமாகப் பார்ப்பது சத்தியஜீவியம்.

It is the nature of Supermind.

அது சத்தியஜீவியத்தின் சுபாவம்.

Because it is transcendent.

பிரபஞ்சத்தைக் கடந்தது என்பதால் அப்படி அமைந்துள்ளது.

It is not possible for the mind.

அது மனத்திற்கு முடியாது.

Contd.....

தொடரும்....

****

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

"எனது நோக்கம் சரி'' என்று கூறுவதற்குப்பதிலாக, "சரியான நோக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்பது மாறுவதற்கு அடையாளம்.

மாறுபவன் சரியானதை ஏற்பான்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

அடுத்தவருடைய தொடர்பை அன்பானதாக மனிதன் மாற்ற முயல்கிறான். "ஆன்மாக்களுக்குள் தொடர்பு'' எனில் "அன்பு''என்றாகும்.

உணர்வு அன்பை அறியாது. அது ஆன்மாவுக்குரியது.


 


 


 


 


 


 


 


 


 


 


 book | by Dr. Radut