Skip to Content

08.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

                                              (சென்ற இதழின் தொடர்ச்சி....)       கர்மயோகி

16. எதைச் செய்தாலும் அதில் நம் நல்ல அம்சங்கள் முழுவதும் வெளிப்படும்படிச் செய்வது (to positively exhaust yourself).

வேலையைக் கடமையாகச் செய்யலாம்.

அதையே தலையாய கடனாக ஏற்றுச் செய்யலாம்.

ஆர்வமாக வேலையை ஏற்று, அற்புதமாகப் பூர்த்தி செய்யலாம்.

நாம் செய்யும் வேலை நம் ஸ்தாபனத்திற்கு நல்ல பலன் தர வேண்டும் என்று நினைத்துச் செய்யலாம்.

நமது நல்லெண்ணம் ஸ்தாபனத்திற்குப் பலிக்கும்படியும், வேலைக்குப் பலிக்கும்படியும், அன்னைக்குத் திருப்தி ஏற்படும்படியும் செய்யலாம்.

(Thoughtfulness) யோசனையாக வேலையை ஏற்றுப் பொறுப்பாகச் செய்யலாம்.

(Resourcefulness) இந்த வேலையை எவ்வளவு சாதுர்யமாகவும், சாமர்த்தியமாகவும் செய்ய முடியுமோ அப்படிச் செய்யலாம்.

நமக்குத் திறமை, பொறுப்பு, ஆர்வம், நல்லெண்ணம், தீவிர யோசனை, சாமர்த்தியம், சாதுர்யம், சமயோசிதம் எனப் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இதுபோன்ற நல்ல அம்சங்கள் முழுவதும் செயல்படும்படி வேலையைச் செய்தால், அங்கு அன்னை நிதர்சனமாவார்.

. பசுமைப் புரட்சி என்பது உலகில் முதலில் இந்தியாவில் ஏற்பட்டது.

நாடு உணவு உற்பத்தியைத் தானே செய்ய வேண்டும் என எவரும்

அதுவரை கூறவில்லை.

அந்தக் கருத்தை முன்வைக்க சுப்ரமணியம் முன்வந்தார்.

உணவு தானியம் விலை குறையக்கூடாது என்று நினைக்க எவருக்கும் தோன்றவில்லை.

அதையும் அவர் செய்தார்.

உரம், விதை, பூச்சிமருந்து ஆகிய தேவைகளையும் பூர்த்தி செய்ய முனைந்தார்.

அதுவரை ராஜேந்திரப் பிரசாத், ராஜாஜி, ஜகஜீவன் ராம் உணவு மந்திரியாக இருந்தனர். இவை அவர்களெல்லாம் செய்யாதன.

கடமை எனக் கருதினால், இவை கடமையாகா.

அறிவு, ஆர்வம், தேசபக்தி, பொறுப்பு, முன்யோசனை ஆகியவை வெளிப்பட சுப்ரமணியம் செய்தது பசுமைப் புரட்சி.

. குரியன் அதே போன்ற வேலையை மந்திரி பதவியின்றி, ஒரு இன்ஜினீயராக இருந்து செய்தார்.

ஆனந்த் வெற்றி பெற்றது.

அவருக்கு வெளியில் 5 இலட்சம் ரூபாய் மாதச் சம்பளம் பெறும் நிலையிருந்த பொழுது, தியாக மனப்பான்மையால் 5 ஆயிரம் ரூபாய் பெற்றுச் சேவை செய்தார்.

இன்று அவர் 168 விருதுகள் பெற்றுள்ளார்.

உலகப் பிரசித்தி பெற்றார்.

இதைச் செய்யும் பொழுது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொது மக்கள் எதிர்ப்பை ஏற்றுச் செய்தார்.

மேற்சொன்ன கருத்தை இது போன்ற விஷயங்கள் விளக்கும்.

நல்ல அம்சங்கள் ஏராளம்.

அவற்றின் எல்லைக்கு அளவில்லை.

அவை தீரும்படி வேலை செய்ய பரந்த மனம் தேவை.

அதைப் பூர்த்தி செய்ய ஆர்வம் மிகுந்த உறுதி தேவை.

தளராத நெஞ்சம் தாராளமாகத் தேவை.

அவை மனித சுபாவத்தின் எல்லைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

எல்லையைக் கடந்தால் தெய்வ தரிசனம் உண்டு.

செய்யும் செயலைவிடச் செய்யும் மனப்பான்மை முக்கியம்.

நல்ல அம்சம் தீர்ந்தால், தெய்வ அம்சம் செயல்படும்.

17. செயலற்றிருப்பதே சிறந்த செயல் என அறிவது.

வாழ்வு செயலாலானது.

வாழ்வை, செயல் எனவே கூறலாம்.

செயல் என்பது உழைப்பு.

உடல் உழைக்கிறது.

உடலால் உழைப்பவனை உழைப்பாளி என்கிறோம்.

அவனுக்குரியது கூலி.

கம்பெனி எவ்வளவு சம்பாதித்தாலும், அவனுக்குரிய கூலி உயர்ந்தால்

நிலை உயராது, கூலி உயரும்.

கூலி வேலை செய்தவன் திறமை பெற்றால் மேஸ்த்திரியாவான்.

மேஸ்த்திரி வேலை செய்வதில்லை.

வேலை செய்பவரை மேய்ப்பான்.

இது ஒரு படி உயருவது.

இன்று தொழிலாளி சூப்பர்வைசராகிறான்.

அன்று - 10,000 ஆண்டுகட்கு முன் - அனைவரும் தொழிலாளி. உலகம் முன்னேறி, கொஞ்சம் பேர் சூப்பர்வைசரானார்கள்.

சூப்பர்வைசர் உடலால் உழைப்பவனைக் கண்காணித்தால், மேனேஜர் அறிவால் உழைப்பவனை நிர்வாகம் செய்கிறார்.

கம்பனியை ஆரம்பித்த முதலாளி அடியிலிருந்து ஒவ்வொரு படியாக உயர்ந்து மேனேஜரிடம் நிர்வாகத்தை அளித்து, அதற்குரிய policies சட்டங்களை இயற்றுபவராகிறார்.

சட்டங்களை ஏற்படுத்தி, பொறுப்பேற்று, உழைப்பையும், வேலையையும்,நிர்வாகத்தையும் முதலாளி கடந்து வருகிறார்.

பொறுப்பு பாரம்.

பாரத்தை rules சட்டங்களிடம் ஒப்படைக்கலாம்.

பொறுப்பின் பாரத்தை (faith) நம்பிக்கையிடம் தரலாம்.

எப்படிச் செய்தாலும் உழைப்பு, வேலையாகி, நிர்வாகமாக உயர்ந்து,

பொறுப்பாகி, நம்பிக்கையாக மாறுவது தொழிலாளி மனத்தால் முதலாளி ஆவது.

டாட்டா நிர்வாகத்தில் 93 கம்பனிகள் உண்டு.

அவை இப்படி நிர்வாகம் செய்யப்படுகின்றன.

பொறுப்பு பாரமில்லாமலிருக்க பர்சனாலிட்டி பெரியதாக இருக்க வேண்டும்.

பொறுப்பு பாரம் தாராமலிருக்க நிர்வாகம் சிறப்பாகவோ, நம்பிக்கை

அன்னை மீதோ இருக்க வேண்டும்.

அந்நிலையில் அவர் செய்யக்கூடியது ஒன்றுமில்லை.

அது அவரைப்பொருத்தவரை செயலற்ற நிலை.

செயலற்ற நிலையில் செயலுக்குரிய சக்தி அபாரமாக உள்ளிருந்து எழும்.

அப்படியிருப்பது ஒரு செயல்.

அது சிறந்த செயல்.

அவரது நிர்வாகம் அப்பழுக்கற்றிருக்கும்.

நம் மனநிலை இக்கட்டங்களைக் கடந்து செயலற்றிருப்பது சிறந்த நிலை.

சிறந்த நிலை உயர்ந்த செயல்.

இம்முறை ஒருவருக்கு முடியுமானால், அவர் எண்ணம் சிறப்பாக நிறைவேறும்.

சிறு செயல் பெரும்பலன் தரும்.

செயலேயின்றியும் பலன் தரும் வாய்ப்புண்டு.

செயல் உயர்ந்து, சிறந்து, செறிந்து தானே பலிக்கும் முறை இது.

18. செயலின் பின்னாலுள்ள மௌனத்தை எட்டுவது.

மௌனமே இறைவன்.

சாந்தியே இறைவன்.

ஜோதியே இறைவன்என நாம் கூறுகிறோம்.

ஏனெனில் நமக்கு இறைவன்என்பது பரமாத்மா - ஆத்மாவாகும்.

அனந்தம், காலத்தைக் கடந்த நிலை, ஐக்கியம், சத்தியம், நன்மை, ஞானம்,

சக்தி, அழகு, அன்பு, சந்தோஷம், மௌனம், சாந்தி ஆகியவை ஆத்மாவின் அம்சங்கள்.

நாம் மனத்தால் அல்லது உணர்வால் அல்லது உடலால் செயல்படுகிறோம்.

ஆத்மாவால் செயல்படுவது சிறப்பு.

எப்படி ஆத்மாவால் செயல்படுவது?

ஒருவரைச் சந்தித்தால், அவரைப் பற்றிச் சிந்தித்தால் அவர் புரிவார்.

இவர் உயரமானவர், நல்லவர், அடக்கமானவர், அந்தஸ்துள்ளவர் எனப் புரிவது மனத்தால் அவரை அறிவதாகும்.

அவரைக் கண்டவுடன் பிடித்துவிட்டால் உணர்வால் செயல்படுவதாகும்.

சிந்திக்காமல், உணராமலிருந்தால் மௌனம் எழும். அவர் முகம் பிரகாசமாகத் தெரியும். அவர் உள்ளத்தில் ஆத்மாவின் அம்சம் ஒன்று தெரியும். மௌனமாகப் பார்த்தால் அவரிடம் உள்ள மௌனம் தெரியும்.

பார்த்தவுடன் சிரிக்கிறோம், விசாரிக்கிறோம், சந்தோஷப்படுகிறோம் என்றால் அது உறவு. உறவில் நாம் மௌனத்தை மறந்துவிடுகிறோம்.

மீண்டும் அவரைச் சந்திக்கும் பொழுது மௌனமாக இருந்தால் அவரிடம் மௌனம் உண்டு, இல்லைஎனத் தெரியும்.

அல்லது அவர் போனபின் அவரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்தால் நம்

சந்திப்பின் பின்னால் உள்ள மௌனம் தெரியும்.

நாம் எந்த வேலை செய்தாலும், அந்த வேலையில் நாம் நம்மை மறந்து விடுகிறோம்.

அப்பொழுது வேலை தெரிகிறது; வேலையை எப்படிச் செய்தோம், அதன் நிறைவு என்ன, குறைவு என்ன என நாம் அறிவோம்.

வேலையை மறந்து உள்ளே போனால் வேலை தானே நடக்கும்.

வேலையின் பின்னால் உள்ள மௌனம் தெரியும்.

மௌனம் தெரிவதுபோல் மேலே சொன்ன 12 அம்சங்களில் ஒன்று தெரியும்.

மனம் குவிந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட அம்சங்கள் தெரியும்.

மனம் உள்ளேயுள்ள ஆத்மாவில் குவிந்து அடங்கினால் வெளியில் வேலையில் உள்ள ஆத்மா தெரியும்.

உள்ளே போய் ஆத்மாவைக் கடந்த அன்னை தெரிந்தால் வேலையில் உள்ள அன்னை தெரியும்.

The Life Divine படிக்கும் பொழுது இதைப் பயின்றால் புத்தகத்தில் பகவான் உருவம் பவித்திரமாகத் தெரியும்.

Blesssing Packet தபாலில் வந்தது. வயதானவர் ஆப்பரேஷனுக்காக Blessing packet ஐக் கேட்டிருந்தார்.

பாக்கட்டைப் பிரித்து உள்ளேயுள்ள புஷ்பத்தை எடுத்தால், அதன் மீது ஒரு துளி ரத்தம் குதத்தில் தெரிந்தது. பௌத்திரம் (piles) ஆப்பரேஷன்.

அன்பர் கண்டது patientக்குரிய அன்னை!

19. மௌனத்தின் பின்னால் உள்ள மௌனத்தைக் காண்பது.

Silence behind Silence.

உலகில் ஆன்மீகம் மௌனமாக வெளிப்படும்.

மௌனத்தின் பின்னாலுள்ள மௌனம் சிருஷ்டியில் ஆன்மீகம் செயல்படும் வகை.

சிந்தனையற்ற நிலை மௌனம் மனத்தில் எழும் நிலை.

உலகை அறியும் அவா மனத்தினுடையது.

உலகை அறிவால் தழுவி உணர விரும்பாதவன் மனம் மௌனமாகும்.

ஓடும் எண்ணம் நிற்பதும், சிந்தனையழிவதும், மனம் புரிய விழைவது மறைவதும் மனத்தில் மௌனத்தின் பல நிலைகள்.

ஜடம், உணர்வு பெற்று, அறிவு பெற்றதால் மனம்என்ற கருவி ஏற்பட்டது.

அதற்கு முன் மனம் சிருஷ்டிக்கப்படவில்லை.

மனம் யோகத்தால் பகவானுக்கும், அன்னைக்கும் அழிந்தது.

மனம் அழிவது என்றால் மனம் ஏற்படுமுன் இருந்த நிலை மனம் ஏற்பட்டு செயல்படாமலிருக்கும் நிலையை எய்துவது.

பதவி வருமுன் அதிகாரமில்லை.

பதவி வந்தபின் அதிகாரம் உண்டு.

பதவி அதிகாரத்தை அளித்தபின் அதிகாரத்தைச் செலுத்தாவிட்டால் ஏற்படுவது அடக்கம்.

உள்ள திறமையைச் செயல்படுத்தாத அடக்கம் மௌனத்தை உற்பத்தி செய்யும்.

கருவியிருந்து திறமையைச் செயல்படுத்தாதது முதல் நிலை.

கருவியில்லாததுபோன்ற நிலை ஏற்படுவது இரண்டாம் நிலை.

முதல் நிலைக்குரியது மௌனம்.

இரண்டாம் நிலைக்குரிய மௌனம், மௌனத்தின் பின்னுள்ள மௌனம்.

மௌனம் சக்தியை எழுப்பும்.

உலகில் செயல்படத் தேவையான சக்தியது.

அது பகுதியான செயல் என்பதால் அந்த மௌனம் பகுதியானது.

முழுமையான செயல் காலத்தைக் கடந்தது.

காலத்தையும், கடந்ததையும் கடந்துள்ள நிலைக்குரியது மௌனத்தின் பின்னுள்ள மௌனம்.

செயலற்றுப் போகும் நிலையில் எழுவது மௌனம்.

அம்மௌனம் செயலால் கலையும்.

மௌனம் கலையாமல் செய்யும் செயல் மௌனத்தின் பின்னுள்ள

மௌனத்தை எழுப்பும்.

மௌனம் உற்பத்தியைப் பெருக்கும் (productivity).

உலகில் அதிக உற்பத்தியுள்ள நாடுகளில் மௌனம் (physical silence) உண்டு.

மௌனத்தின் பின்னாலுள்ள மௌனம் சிருஷ்டிக்கும் (creative).

உலகில் புதியது எது எழவேண்டுமானாலும் அது மௌனம் உள்ள நாடுகளில் எழும்.

ஆன்மீகத்தில் புதியது எழவேண்டுமானால் அது மௌனத்தின் பின்னாலுள்ள மௌனத்தில் எழும். இந்திய விடுதலை போராட்டமின்றி எழுந்து, 45 நாடுகட்கு விடுதலையளித்த வினோதம் அம்மௌனத்திற்கு உரியது.

தொடரும்....


 

****


 


 


 



book | by Dr. Radut