Skip to Content

09.அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது

அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து

இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது

 (சென்ற இதழின் தொடர்ச்சி....)          

                                                                                                                                      N.அசோகன்

2. இப்பொழுது முன்னேற்றத்திற்குப் பணம் மற்றும் டெக்னாலஜியை விட ஆர்கனைஷேஷன் தான் முக்கியமென்ற கருத்தைப் பார்ப்போம்:

      இந்தியர்களிடம் இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த உடனடியாக என்னதேவை என்று கேட்டால் அநேகமாகப் பெரும்பாலோர் நிறைய முதலீடும், நவீன டெக்னாலஜியும் இருந்தால் 20 வருடங்களில் அமெரிக்காவை எட்டிப் பிடித்துவிடலாம் என்றுதான் சொல்வார்கள்.   10  ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டு, கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளது இப்பொழுது நடக்கின்ற 10ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் 16,00,000 கோடி செலவிடத் தீர்மானித்துள்ளார்கள்இதற்கு முன் அமுல்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களிலும் சேர்த்து கிட்டத்தட்ட இதே அளவிற்கு 16,00,000 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.  இவ்வளவு செலவாகியபின்பும் நாம் எதிர்பார்த்த முன்னேற்றம் வந்துள்ளதா என்றுகேட்டால் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினால் அங்கேதான் organisationனுடைய அருமையே நமக்குப் புரிய வருகிறது.ஆர்கனைஷேஷன் என்றால் திட்டமிட்ட, முறைபடுத்தப்பட்ட செயல்பாடு என்றர்த்தமாகும். ஆங்கிலத்தில் சொன்னால் systematic coordinated actionஎன்று சொல்லலாம்.

      நம்முடைய வாழ்க்கையில் பலவிடங்களில் திட்டமிட்ட, முறையான மற்றும் systematicசெயல்பாடுகளைக் கொண்டு வந்துள்ளோம். உதாரணமாக traffic movementsஐ எடுத்துக் கொள்ளுங்கள்.  Traffic signals மற்றும் போலீஸ்காரர்களை வைத்து நாம் trafficஐக் கட்டுப்படுத்தாவிட்டால், முறைப்படுத்தாவிட்டால், traffic movementsஇல் எவ்வளவு குழப்பம் வரும் என்று நினைத்துப் பாருங்கள்பள்ளிகளில் attendance, register, timetable, working hours மற்றும் பரிட்சைகள் இல்லாமல் போனால் பள்ளியை ஒழுங்காக நடத்தவே முடியாதுஎன்று தெரிகிறதுகம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும் production, விற்பனை, அக்கௌண்ட்ஸ், ஸ்டாக் மற்றும் financeஎன்று பல பிரிவுகளிருக்கும். இப்பிரிவுகளுக்கிடையே முறையான coordination இல்லாமல் ஒரு கம்பெனி செயல்பட்டால்  அக்கம்பெனியால் லாபகரமாகச் செயல்பட முடியாது என்று நமக்குத் தெரிகிறதுவிற்பனைக்கு ஏற்றபடி உற்பத்தி இருக்கவேண்டும்.உற்பத்திக்கு ஏற்றபடி stock இருக்கவேண்டும்இது சம்பந்தமான வரவு செலவுகளை அக்கௌண்ட்ஸ் பிரிவினர் updateஆக வைத்திருக்க வேண்டும். செலவிற்குத் தேவையான பணத்தை finance பிரிவில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த coordination இல்லாமல், விற்பனை குறைவாக உள்ளபொழுது உற்பத்தியை அதிகரித்தாலோ, உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நேரத்தில் stock குறைந்தாலோஎன்ன வருமானம் வருகிறது, என்னசெலவாகிறது என்று அக்கௌண்ட்ஸ் பிரிவில் கணக்கில்லை என்றாலோ, செலவிற்கேற்ற நிதிவசதி finance பிரிவில் இல்லை-யென்றாலோ, கஸ்டமர் கேட்கிற qualityproductionஇல் கொடுக்க முடியவில்லை என்றாலோ, அங்கே organisation இருக்காதுவேலை கெட்டுவிடும்; லாபமென்பதைப் பார்க்க முடியாது.

     ஆகவே பணம், டெக்னாலஜி இருந்தால் மட்டும் போதும்; வேலை நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆர்கனைஷேஷன் இருந்தால்தான் முறையானவொரு coordination இருக்கும்; எதிர்பார்த்த பலனும் கிடைக்கும். நம்மிடம் நிறைய எனர்ஜி இருக்கிறதுஒரு குறிப்பிட்ட காரியத்தைச் சாதிக்க வேண்டுமென்ற நோக்கம் இருக்கும்பொழுது அந்த எனர்ஜிக்கு ஒரு direction கிடைக்கிறது. அப்பட்சத்தில் அந்த எனர்ஜி ஒரு forceஆக மாறுகிறதுநம்மிடம் systematic செயல்பாடு இருக்கும் பொழுது அந்த force ஒரு productive power ஆக மாறி நமக்கு நல்ல பலன் கொடுக்கிறதுஒரு கம்பெனியில் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள், முதலாளி முதலீடு செய்கிறார். ஊழியர்களின் உழைப்பும் முதலாளியின் முதலீடும் லாபமென்ற பலனாக மாறவேண்டும்.  அந்நிறுவனத்தின் செயல்பாட்டில் நாம் எதிர்பார்க்கும் ஆர்கனைஷேஷன் மற்றும் coordination இருக்கும்பட்சத்தில் அந்த உழைப்பும், முதலீடும் வருமானம் மற்றும் லாபமாக மாறும்அதன் பலனாக, கம்பெனி வளரும்மாறாக, கம்பெனி systematicஆகச் செயல்படவில்லை, அங்கே coordinationஇல்லை என்றால், உழைப்பும், முதலீடும் வீணாகின்றன. வருமானமும், லாபமும் வாராமல் நஷ்டம்தான் வருகின்றதுஆகவே ஆர்கனைஷேஷன் தான் நம்முடைய எனர்ஜியை விரயமாகவிடாமல் productive powerஆக மாற்றி நல்ல பலனாக மாற்றித் தருகிறது.

      நம்முடைய சொந்த வாழ்க்கையிலும், நம்முடைய அன்றாட வேலையிலும் நாம் ஸிஸ்டமாட்டிக்காக செயல்பட ஒரளவு கற்றுக் கொண்டுள்ளோம். ஆனால் தேசிய அளவில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முயலும் பொழுது நமக்கு systematicஆக செயல்படத் தெரியவில்லை. அதனால் நம் வளர்ச்சி தாமதமாகிறது; பணம் விரயமாகிறது. Town planningஐ எடுத்துக் கொள்ளுங்கள்இந்தவொரு விஷயத்திலேயே நம்மிடம் organisation எவ்வளவு குறைவாகவுள்ளது என்று பார்த்துவிடலாம். Approval இல்லாமல் வீடு கட்டுவது,   தாழ்ந்த பகுதிகளில் வீடு கட்டிக் கொள்வது, water pipe, drainage pipe, electric மற்றும் telephone cable போட வீதிகளில் அடிக்கடி பள்ளம் பண்ணுவது, demandற்கு ஏற்றபடி மின் supply கொடுக்க முடியாமல் அடிக்கடி power-cutஐக் கொண்டு வருவது, மழைக்காலங்களில் மழைநீர் வடிய வழி இல்லாமல் தாழ்ந்த இடங்களில் எல்லாம் வெள்ளம் வந்து வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வெளியேறுவது, சாலைகள் குறுகலாக இருப்பதால் traffic நெரிசல் வருவது என்ற இவையெல்லாம் நம்மிடம் proper town planningகூட இல்லையென்பதைக் காட்டுகிறது. அமெரிக்காவில் உள்ள நகரங்களில் இத்தகைய குறைபாடுகளை பார்க்கவே முடியாது. விசாலமான சாலைகள், water pipe, drainage pipe, electric cable, telephone cable approvalஎன்று எல்லாம் வந்த பிறகுதான் township அங்கே உருவாகும். இங்கே வீடு முதல் வந்துவிடுகிறதுபின்புதான் வீதியும் மற்றெல்லாம் வருகின்றனஇத்தகைய செயல்பாடு organisation தலைகீழாக இருப்பதைக் காட்டுகிறது.

      Town planningஇலேயே இவ்வளவு குறைபாடுகள் என்றால், தேசிய முன்னேற்றம்என்ற பெரிய வேலையை எடுத்துக்கொண்டால் நம்முடைய செயல்பாட்டில் இன்னும் எவ்வளவு பெரிய குறைகளிருக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்முதலிரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் பல கோடிகளைச் செலவு செய்து heavy industriesஐ உருவாக்கினார்கள்பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தபொழுது ஒரு சிலவாயிரம் பேருக்குத்தான் வேலை கிடைத்ததுகோடிக்கணக்காகச் செலவு செய்தும் ஒரு சிலவாயிரம் பேருக்குத்தான் வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது என்பதைப் பார்த்த பொழுது நேருஜீ அவர்களுக்குப் பெரிய ஏமாற்றம் வந்தது.

     அமெரிக்கா நம் நாட்டைவிட மூன்று மடங்கு பரப்பளவு அதிகம் கொண்ட நாடாகும். ஆனால் அங்கே மக்கள்தொகை 30 கோடிதான். அமெரிக்காவின் பரப்பளவில் மூன்றிலொரு பங்கேவுள்ள நம் நாட்டில் 2005ஆமாண்டில் 110 கோடியாக மக்கள்தொகை பெருகியுள்ளது.  பரப்பளவு மும்மடங்கு குறைவு, ஆனால் மக்கள்தொகை மும்மடங்கு அதிகமென்றால் ஒட்டுமொத்தமாக 9 மடங்கு மக்கள்தொகை அதிகமாக உள்ளது என்றர்த்தமாகிறதுஒன்று, நம் நாட்டின் வருமானத்திற்கேற்ற அளவிற்கு மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்அல்லது, மக்கள்தொகைக்கு ஏற்றபடி வருமானத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்இரண்டுமில்லாமல் வருமானம் குறைவாகவும், மக்கள்தொகை அதிகமாகவுமிருப்பது நம்முடைய வருமானத்திற்கும், நமக்குள்ள மக்கள் தொகைக்கும் சரியான coordination இல்லை என்பதைக் காட்டுகிறது.

      பசுமைப் புரட்சி திட்டத்தைத்தான் நம் நாட்டில் முதல்முறையாக வெற்றிகரமாக அமுல்படுத்தினார்கள். அதற்குக் காரணம் அத்திட்டத்தில் இருக்கவேண்டிய organisationஉம் systematic செயல்பாடுமிருந்தனநெல் மற்றும் கோதுமை விளைச்சலை உயர்த்த I.R..8 போன்ற புது ரக நெற்பயிர்களை அறிமுகப்படுத்திய பொழுது, விலை இறங்கிவிடும் என்று விவசாயிகள் பயந்தார்கள். அச்சமயம் விவசாயத்துறை அமைச்சராக இருந்த C.சுப்பிரமணியம் அவர்கள் minimum floor price ஒன்றை வழங்கினார். வரப்போகின்ற கூடுதல் மகசூலை வைப்பதற்கு godownகளை நிறுவினார். விவசாயிகளுக்கு வேண்டிய கூடுதல் உரம், பூச்சிமருந்து, விதை ஆகியவை கிடைக்க வழி செய்தார். இவ்வேலைகளை எல்லாம் செய்வதற்கு Food Corporation of India என்றவொரு புதிய ஸ்தாபனத்தையே நிறுவினார். அவருக்கிருந்த அந்த organisational sense இந்திய அரசியல்வாதிகளைப் பொருத்தவரை மிகவும் அபூர்வமான பொக்கிஷமாகும்பசுமைப் புரட்சி வெற்றிகரமாக நிகழ்ந்ததைப் போலவே பால் உற்பத்தியைப் பெருக்க அரசாங்கம் கொண்டுவந்த வெண்மைப் புரட்சியும் வெற்றியடைந்துள்ளதுஇதற்கு முக்கிய காரணகர்த்தா குஜராத்தில் Anand Diary Cooperativeஐத் துவக்கி வைத்த Verghese Kurien ஆவார். நாடெங்கிலும் பரவிய Milk Cooperative களின் மூலம் வெண்மைப் புரட்சியையும் வெற்றிகரமாக நம் நாடு சாதித்துள்ளதுஇன்று பால் உற்பத்தியில் உலகத்தில் நம் நாடு முதலிடம் வகிக்கிறது.

     பசுமைப் புரட்சியையும், வெண்மைப் புரட்சியையும் வெற்றிகரமாக சாதித்த நம் நாடு தொழிற்புரட்சிக்குச் சரியான அணுகுமுறையை கையாண்டால் அதிலும் வெற்றி காணலாம்நம் நாட்டு இளைஞர்கள் employmentஇல் கிடைக்கும் securityஐத்தான் நாடுகிறார்களேவொழிய சொந்தமாகத் தொழில் செய்ய முன்வருவதில்லைஆனால், self-employmentஇல் பெருவருமானம் காத்திருக்கின்றது.  Self-employmentஇல் இறங்கவேண்டும் என்றால் அதற்குண்டான riskஐ எடுக்க வேண்டும்.அந்த riskஐ எடுப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது.

     அமெரிக்காவில் யாரும் அரசாங்க உத்யோகத்தையோ, அதில் கிடைக்கும் securityஐயோ பெரிதாகக் கருதுவதில்லை. சுயதொழில்,enterprise என்றுதான் செல்கின்றனர்சொந்தமாகச் சாதிக்க முடியாதவர் தான் வேறு வழியில்லாமல் அரசாங்கப் பணிக்கு அங்கே செல்கின்றனர்.  ஆனால் இங்கே அரசாங்கப் பணிக்குத்தான் முதலிடம் என்ற மனோபாவம் நிலவி வருகின்றது.

    Self-employmentஐ ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் training course எல்லாம் நடத்துகிறது. 100 பேர் course ற்கு வந்தால் ஏதோவிரண்டு பேர்தான் உண்மையில் self-employmentஇல் இறங்குகின்றனர்அமெரிக்கர்களுக்கு இயற்கையாக வருவது இங்கே நமக்கு சொல்லிக் கொடுத்தாலும் வருவதில்லைநம் மனநிலை மாறி நம் நாட்டு இளைஞர்களும் தொழில்முனைவர்களாக தலையெடுத்தால் நம் நாட்டிலும் செல்வவளம் பெருகி அடுத்த 20 வருடங்களில் நாமும் அமெரிக்காவிற்கு நிகரானவர்கள் ஆவோம்.

     இன்று அமெரிக்கா பெரிய corporationகளும், பெரும் பணக்காரர்களும், பெரிய high-rise buildingஉம் நிரம்பிய நாடாக காட்சியளிப்பதால் பெரிய முதலீடு கிடைத்தால் நம் நாட்டையும் இப்படி மாற்றலாம்என்று நமக்குத் தோன்றுகிறதுஆனால் பெரிய முதலீட்டைப் போட்டு அமெரிக்கர்கள் இந்த முன்னேற்றத்தைக் கொண்டு வரவில்லைமூன்று நூற்றாண்டுகளாக அவர்கள் வெளிப்படுத்திய கடினவுழைப்பு, திறமை, systematic செயல்பாடு மற்றும் value-implementationஉடைய இறுதி பலனிது. பலனைக் காரணமாக நாம் நினைப்பது விஷயத்தைத் தலைகீழாகப் புரிந்து கொள்வதாகும்.  17-ஆம் நூற்றாண்டில் அங்கு குடியேறியவர்கள் பெரிய முதலீட்டை நம்பி அங்குச் செல்லவில்லைதம்முடைய உடலுழைப்பை நம்பித்தான் அங்குச் சென்றார்கள். 30 அல்லது 40 தலைமுறைகளாக அவர்கள் ஈட்டிய வருமானமும், அதிலிருந்து வந்த சேமிப்பும்தான் இன்று பெரிய முதலீடாக நமக்குக் காட்சியளிக்கிறது

     அந்த உழைப்பையும், திறமையையும், systematic செயல்பாட்டையும் நாம் வளர்த்துக் கொள்ளாமல் பெருமுதலீட்டிற்காகக் காத்திருப்பது வீண்வேலை. அப்படியே பெரிய முதலீடு கடனாகக் கிடைத்தாலும் அதற்குண்டான முழுப்பலனை நாம் அவ்வளவு சுலபமாகப் பார்க்க முடியாது; நிறைய விரயமாகும். அவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் அமெரிக்கர்களுடைய திறமையும், செயல் நேர்த்தியும் நமக்கும் வரவேண்டும்.

3. சுதந்திரமான சூழலில்தான் முன்னேற்றம் வருமென்ற மூன்றாவது கருத்தை நாம்  இப்பொழுது பார்ப்போம்:

     அமெரிக்கா சுதந்திரத்திற்குப் பெயர்போனது என்ற சிறப்புப் பட்டத்தை 18-ஆம் நூற்றாண்டிலேயே வாங்கிவிட்டதுஐரோப்பாவில் சுதந்திரமாக வாழ முடியாதவர்கள் எல்லாம் சுதந்திரத்தைத் தேடி அமெரிக்காவிற்கு வந்தார்கள். சுதந்திரமாக வாழ முடிந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம், நல்ல வருமானத்தையும், வசதியையும் பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு வந்தார்கள். அந்த நம்பிக்கை வீண்போகவில்லைஅமெரிக்கா சுதந்திரத்தோடு வருமானத்தையும்,வசதியையும் சேர்த்தே அங்கு வந்தவர்களுக்கு வழங்கியது.

     நம் நாட்டில் உயர்ஜாதி மக்கள் தாழ்த்தப்பட்டவர்களை எப்படி அடக்கி ஒடுக்கி வைத்திருந்தார்கள், அவர்களுடைய முன்னேற்றத்தை எப்படி எல்லாம் தடுத்தார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். வேறு வழியில்லாமல் அவர்களும் பல நூற்றாண்டுகளாக முடங்கிக் கிடந்தார்கள்இந்தியாவிற்கு விடுதலை கிடைத்து, ஜனநாயக ஆட்சி வந்து, காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் போன்ற பெருந்தலைவர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடி, அவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர்தான் இந்தியச் சமூகம் அவர்களையும் முன்னேற அனுமதித்துள்ளது. 

    இதே மாதிரியான சுதந்திரமில்லாத சூழ்நிலைதான் ஐரோப்பாவில் 17ஆம் நூற்றாண்டிலிருந்து இரண்டாம் உலகப்போர் முடியும் வரை நிலவியதுஏழைக் குடியானவர்களும், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த உழைப்பாளிகளும் இப்படி வாழ்க்கையில் முன்னேறும் சுதந்திரமில்லாமல் அடிமைகள்போலக் கட்டுண்டு இருந்தார்கள். அரசர்களும், பிரபுக்களும் ஆட்சிசெய்த காலமதுஉயர்குடி மக்களுக்கு இருந்த உரிமைகளும் சலுகைகளும் பொதுமக்களுக்கோ, சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்களுக்கோ இல்லாமலிருந்தது.

     இப்படி அடங்கி ஒடுங்கி வாழ்ந்த ஏழை மக்களுக்கு அமெரிக்கா என்றவொரு புது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஅங்குச் சென்றால் சுதந்திரமாக வாழலாம், வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்ற செய்தி காதில் தேனாக ஒலித்தது.

     பணக்காரன், ஏழை, உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் சுதந்திரமாகச் செயல்பட ஒரு நாட்டில் சமஉரிமை வழங்கப்பட்டதென்றால் அங்கு மக்கள் எவ்வளவு உற்சாகமாகச் செயல்பட்டிருப்பார்கள் என்பதை நாமெண்ணிப் பார்க்க வேண்டும்பிரான்சில் பிரெஞ்சு புரட்சி 1789-இல் வெடித்த பொழுது மக்களுக்கு இப்படித்தான் சமவுரிமைகள் கிடைத்தனபொதுமக்களும் உற்சாகம் கொண்டு வாழ்க்கையில் முன்னுக்குவர தீவிர முயற்சிகள் எடுத்தார்கள்ஆனால் 15 வருடங்களிலேயே நெப்போலியன் மீண்டும் முடியாட்சியைக் கொண்டு வந்ததால் புரட்சியினால் கிடைத்த சுதந்திரம் மீண்டும் பறிபோனதுஆனால் அமெரிக்காவில் அப்படியொரு தடங்கல் வரவேயில்லை.  1776இல் சுதந்திர நாடாகத் தன்னை அமெரிக்கா அறிவித்துக் கொண்டதுதாய்நாடான இங்கிலாந்து அதை எதிர்த்துப் போர் தொடுத்தது.  1783-இல் அமெரிக்கா போரை வென்று தன் சுதந்திரத்தை நிலைநாட்டிக்கொண்டதுஅதன் பின்னர் படிப்படியாக அமெரிக்க மக்களுக்குச் சுதந்திரம் அதிகரித்ததேயொழிய குறையவில்லைஆப்பிரிக்காவிலிருந்து வந்த நீக்ரோக்களை அடிமைகளாக வைத்திருந்தது அமெரிக்காவின் சுதந்திரத் தோற்றத்திற்குப் பெரிய களங்கமாக அமைந்தது. அமெரிக்காவில் 1861-65இல் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் விளைவாக நீக்ரோக்களுக்கும் அடிமைத்தளையிலி- ருந்து விடுதலை கிடைத்தது.

     முன்னேற்றத்திற்குச் சுதந்திரம் ஒன்றுதான் வழி, வேறு வழியில்லை என்று சொல்லவில்லைகட்டுப்பாட்டின்மூலமும் ஒரு நாடு முன்னேற்றம் பெறலாம். ஆனால் மக்கள் சந்தோஷமாக இருப்பார்களா என்பது சந்தேகந்தான்சோவியத் யூனியனும், சீனாவும் கம்யூனிஸ ஆட்சியின் கீழ் மக்களைக் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து தம் நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தினஇரு நாடுகளின் பொருளாதார பலம், அரசியல் பலம் மற்றும் ராணுவ பலமெல்லாம் அதிகரித்தனஅதை நாம் முன்னேற்றம்என்று எடுத்துக் கொள்ளலாம்ஆனால் மக்கள் சந்தோஷமாக இல்லை.  1990-இல் ரஷ்யாவில் மக்கள் கம்யூனிஸ ஆட்சியைக் கவிழ்த்துத் தம்முடைய சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொண்டார்கள்.  1989-இல் சீனாவிலும் மக்கள் Beijing தலைநகரில் எதிர்ப்புப் போராட்டங்களை நிகழ்த்தினார்கள்.

     அதிகாரத்தின்கீழ் வரும் முன்னேற்றத்தைவிட சுதந்திரத்தின்கீழ் வரும் முன்னேற்றத்தையே மக்கள் அதிகம் விரும்புகின்றார்கள்.  ஏனென்றால் சுதந்திரமான முன்னேற்றத்தில் சந்தோஷமும் கலந்துள்ளது.  அதிகாரத்தின்கீழ் வரும் முன்னேற்றத்தில் அதிருப்தி கலந்துவிடுகிறது.  1975இல் இந்திரா காந்தி அம்மையார் எமர்ஜென்சியை கொண்டு வந்து இரண்டாண்டுகள் இந்திய மக்களைக் கடுமையான கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தார்கள்நாட்டின் பொருளாதார நிலை முன்னேறியது; அரசாங்க அலுவலகங்களில் வேலை ஒழுங்காக நடந்தது; குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டன; இருந்தாலும் மக்களின் பேச்சுரிமை, பத்திரிகைகளின் press freedom, எதிர்கட்சி அரசியல்வாதிகளின் பேச்சுரிமை எல்லாம் பறிபோயின. எமர்ஜென்சியை விலக்கி அதன்பின் தேர்தல் நடந்தபொழுது மக்கள் தங்களுடைய அதிருப்தியை முழுவதும் வெளிப்படுத்தி இந்திரா காந்தி அம்மையாரையும், காங்கிரஸ் கட்சியையும் தோற்கடித்தனர்.

     இரண்டு வருடக் கட்டுப்பாடே தாங்கவில்லை என்றால் நெடுநாளைய கட்டுப்பாடு எப்படி தாங்கும்? இதை வைத்துப் பார்க்கும்பொழுது அதிகாரத்தின்கீழ் வரும் முன்னேற்றத்தைவிட, சுதந்திரத்தின்கீழ் வரும் முன்னேற்றம்தான் மக்களை சந்தோஷப்படுத்துகிறது; அதுதான் நீடித்து நிலைக்கும் என்றாகிறது.

     அமெரிக்காவிற்குச் செல்கின்ற இந்திய இளைஞர்கள் திரும்பி வர தயங்குவதற்கு அங்குள்ள வசதிமட்டும் காரணமில்லை. அங்கு நிலவும் சுதந்திரமும் ஒரு முக்கியக் காரணம்.  இங்கே ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்டாலோ, அல்லது employmentஐ விட்டு விட்டுச் சுயமாகத் தொழில் தொடங்க விரும்பினாலோ, சொந்தவூரை விட்டு வெளி மாநிலத்தில் வேலை தேடினாலோ, சைவ சாப்பாட்டிலிருந்து அசைவ சாப்பாட்டிற்கு மாறினாலோ உற்றார், உறவினர் கேள்வி கேட்பார்கள்; கண்டிப்பார்கள்; கூடாதென்று சொல்வார்கள். ஆனால் அமெரிக்காவில் இத்தகைய உறவினர் தலையீடு என்பதோ neighbouroodஇல் உள்ளவர்கள் தலையீடு என்பதோ மிகவும் குறைவுஇதுவொரு மிகப் பெரிய சுதந்திரமாகும்இச்சுதந்திரத்தை அந்நாட்டு மக்கள் பெரிதும் விரும்புகின்றார்கள். அங்கே ஒருவருக்கு 18 வயது ஆகிவிட்டால் அவருடைய எதிர்காலத்தை அவரே நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரம் கிடைக்கிறதுஅச்சுதந்திரம் அவருடைய படிப்பு, வேலை மற்றும் திருமணம் என்று எல்லாவற்றிலும் வெளிப்படும்உற்றார், உறவினருடைய பொறாமை மற்றும் போட்டியால் உள்ளூரில் இருந்தால் பிழைக்க முடியாது என்று முடிவு செய்து சிலர் வெளியூருக்குச் சென்று settleஆகி முன்னேற முயற்சி எடுக்கும் சம்பவங்கள் நம் நாட்டில் நிகழ்கின்றன. ஆனால் அமெரிக்காவில் அவரவர் சொந்த வேலைகளைப் பார்ப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாகவுள்ளதுஅதனால் அடுத்தவர்கள் வாழ்க்கையில் தலையீடுவதோ, போட்டிப்-பொறாமையினால் அடுத்தவர் முன்னேற்றத்தைக் கெடுக்க முயல்வதோ அங்கே மிகவும் குறைவு. அங்கிருக்கும் வசதியைவிட இந்தச் சுதந்திரமான சூழ்நிலைதான் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுகிறதுஅங்குள்ள தனிநபர் சுதந்திரம் இங்குள்ளவர்களுக்குக் கிடைக்குமளவிற்கு இங்கே சூழ்நிலை மாறினால், இந்தியாவின் முன்னேற்றம் பலமடங்கு விரைவு பெறுவதைக் காணலாம்.

4. முன்னேற்றம் விரைவுபடவேண்டுமென்றால் முன்னேற்றத்திற்கு ஒத்துவாராத பழைய விஷயங்களைக் கைவிட வேண்டும்:

வாழ்க்கை என்பது ஓர் இடையறாத முன்னேற்றப் பயணமாகும். எங்கேயும் நாம் நிரந்தரமாக நிலைத்து நிற்க முடியாதுகாலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் மாறிக் கொண்டேயிருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் வாழ்க்கையின் வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடியும்நிறையவிடங்களில் நாம் காலத்தின் ஓட்டத்திற்கேற்ப மாறிக் கொண்டு தான் வருகிறோம். ஆனால் நிறையவிடங்களில் மாறாமலும் பழையதையே பிடித்துக் கொண்டுமிருக்கிறோம். ஒரு காலத்தில் நாம் விறகடுப்பில் சமையல் செய்து கொண்டு, மாட்டுவண்டியில் பயணம் செய்துகொண்டு, ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி வைத்து எழுதிக் கொண்டிருந்தோம்ஆனால் இப்பொழுது விறகடுப்பிலிருந்து gas stoveற்கும், மாட்டுவண்டியிலிருந்து பஸ்ஸுக்கும், ஓலைச்சுவடியிலிருந்து பேப்பருக்கும் நாம் மாறிவிட்டோம்யாராவது gas stoveஐத் தவிர்த்து விறகடுப்பில்தான் சமையல் செய்வேன் என்று பிடிவாதம் செய்தாலோ, பஸ்ஸைத் தவிர்த்து மாட்டுவண்டியிலேயே போவேன் என்று பிடிவாதம் செய்தாலோ நாம் அவர்களைக் கேலிசெய்கிறோம். ஆனால் ஜனநாயக ஆட்சியும், மதச்சார்பற்ற அரசும் வந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிய பிறகும், நாம் ஜாதி-மத வேறுபாடுகளை வலியுறுத்திக் கொண்டிருப்பதும், அரசாட்சி முடிந்து நீண்டநாள் ஆகியும் நம் நாட்டு முதலமைச்சர்கள் முடிசூடா மன்னர்கள் போல் ஆட்சி செலுத்துவதும், முன்னேற்றத்திற்கு ஒத்துவாராத பழைய விதிமுறைகளையும், பாலிசிகளையும் அரசாங்கம் இன்னமும் வைத்திருப்பதும், சுயதொழில் தான் முன்னேற்றமுள்ளது என்று தெரிந்த பிறகும் நாம் அரசாங்க வேலையைத் தேடி ஓடுவதும், கல்வித்துறையில் எவ்வளவோ முன்னேற்றம் வந்த பிறகும் நாம் ஞாபகசக்தியை மட்டும் வலியுறுத்தும் தேர்வு முறைகளை நம்பிக்கொண்டிருப்பதும் வேண்டாத விஷயங்களை இன்னமும் நாம் பிடித்துக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை?

     இங்கேதான் அமெரிக்கர்கள் நம்மிடமிருந்து மிகவும் வேறுபடுகிறார்கள். முன்னேற்றம் வேண்டுமென்றால் முடியாட்சியோ, பிரபுக்களின் ஆட்சியோ தடையாகயிருக்கும் என்று தெரிந்தவுடன் அவற்றை உதறி எறிந்து ஜனநாயகத்திற்கு மாறினார்கள்அரசாங்கம் மதச்சார்பற்ற கொள்கையை ஏற்றவுடன், மதவிஷயமான கருத்து வேறுபாடுகள் நாட்டில் கலவரத்தை உண்டுபண்ணுமளவிற்கு அவற்றை வளர அனுமதிப்பதில்லை. அயோத்தியில் ராமஜென்மபூமி விஷயமாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் கலவரங்கள் நம் நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் எந்த அளவிற்குப் பாதித்துள்ளன என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்மத்திய அரசின் கவனம் இப்பிரச்சினையால் எந்த அளவிற்குத் திசைமாறியுள்ளது, அரசாங்கத்தின் முன்னேற்றப் பணிகள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பவை எல்லாம் நமக்கு விளங்க வேண்டும். 

      வேண்டாத விஷயங்களை ஒரு பக்கம் பிடித்துக் கொண்டுள்ளோம் என்றால், இன்னொரு பக்கம் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமான விஷயங்களின் அருமையை உணராமலும் உள்ளோம். தேவையில்லாததை வலியுறுத்துவது தவறு என்றால், தேவைப்படுவதின் அருமையை உணராமலிருப்பதும் தவறுதான். கம்ப்யூட்டரையும் internetஐயும் வைத்துக் கொண்டு நாம் எவ்வளவோ நம்மறிவை அபிவிருத்தி செய்து கொள்ளலாம்ஆனால் பல பேர் வெறும் e-mail அனுப்புவதற்காக மட்டும் கம்ப்யூட்டரையும் internetஐயும் பயன்படுத்திக் கொள்கின்றனர். Educational softwareஇப்பொழுது நிறைய வந்துவிட்டது. Language teachingமற்றும் Science teachingஎல்லாம் இந்த softwareஐ வைத்துக் கொண்டு சிறப்பாகச் செய்யலாம்ஆனால் இன்று இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மாணவ- மாணவிகள் கம்ப்யூட்டரில் செலவிடும் நேரம் குறைவுஒரு மாதத்திற்கு ஒரு மணி நேரம் தான் ஒதுக்குகிறார்கள்ஒரு studentற்கு ஒரு கம்ப்யூட்டர் என்றிருந்தால் ஒவ்வொரு studentற்கும் நேரம் அதிகரிக்கும். ஆனால் student எண்ணிக்கை அதிகமாகவும் computerகளின் எண்ணிக்கை குறைவாகவுமிருப்பதால் இப்படி ஒரு studentக்குக் கிடைக்கும் நேரம் குறைக்கப்பட்டுவிடுகிறதுமதர் சர்வீஸ் சொஸைட்டி நடத்தும் Primrose schoolஇல் கம்ப்யூட்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மாணவ-மாணவியர் கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவு செய்வதற்கு வழி செய்துள்ளோம்.  Computerமூலம் teaching வழங்கப்படுவதால் பிள்ளைகளின் அறிவும் அபாரமாக விருத்தியடைந்துள்ளதுஇத்தகைய teaching முறைகளும், கம்ப்யூட்டர் பிரயோகமும் நாடெங்கும் Primrose பள்ளி அளவிற்குப் பரவினால் இளைய தலைமுறையினரின் அறிவு பல மடங்கு விருத்தியடையும். அதன் பலன் நம் நாட்டின் முன்னேற்றத்திலும் தெரியும்.

தொடரும்....

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தன்னுடைய ஆசைகளையும், கசப்பான அவற்றின் எதிர் நிலைகளையும் அறிவதும், அவை தன்னுள் சந்திக்கும் பாணியையும் அறிவது முக்கியமான ஞானமாகும். உணர்வைத் தெளிவுப்படுத்தும் திறனுடையதாகும்.

ஆசையையும், கசப்பையும் அறிவது ஞானம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

தான் சொல்லியதையே மறுத்துப் பேசுபவர்களை நாம் பார்க்கிறோம். சிந்தனை ஆரம்பித்த முதல் நிலையில் ஒரு கருத்து தோன்றுவதும், பின்னால் அதைவிடத் தெளிந்த கருத்து தோன்றுவதும் இயற்கை. அதுவே இந்த முரண்பாட்டுக்குக் காரணம்.

சிந்தனைக்குப் புதியவன் முன்பின் முரணாகப் பேசுவான்.


 


 


 



book | by Dr. Radut