Skip to Content

09. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XVIII. Mind and Supermind
 
The descent is accompanied by two things.
Page No.163
One is an essential faculty.       Para No.7
The other is the essential limitation.
They together fix Mind's nature and action.
The faculty is svabhava.
The limitation is svadharma.
Here is the mark of the divine fiat.
It assigned it its office.
Thus Mind becomes the instrument of the Supreme Maya.
It is from the self-conception of the Self-existent.
It was done at its very birth.
That office was determined then.
To translate infinity into finite is the office.
It is to measure off, limit, depiece.
It is done in our consciousness.
It is done by excluding the true sense of infinity.
18. மனமும் சத்தியஜீவியமும்
 
அருள் மழையுடன் வருவன இரண்டு.
ஒன்று அடிப்படைத் திறன்.
அடுத்தது அடிப்படை அளவீடு.
இவையிரண்டும் சேர்ந்து மனத்தின் சுபாவத்தையும் செயலையும்
நிர்ணயிக்கின்றன.
இதன் பெயர் சுபாவம்.
அளவின் பெயர் சுதர்மம்.
தெய்வத்தின் சுவடு இங்கே தெரியும்.
மனம் அதன் உரிமையை இங்ஙனம் பெறுகிறது.
எனவே மனம் மாயையின் உயர்ந்த கருவியாகிறது.
சுய வாழ்வின் சுயக் கருத்தின் வெளிப்பாடு இது.
இதை மனம் பிறக்கும் பொழுதே பெறுகிறது.
அதன் வேலை அப்பொழுதே நிர்ணயிக்கப்படுகிறது.
அனந்தத்தை அந்தமாக - அகண்டத்தைக் கண்டமாகச் – செய்வது அவ்வேலை.
அளந்து, அளவீடிட்டு, துண்டாடுவது அது.
இதை நம் ஜீவியத்தில் செய்கிறோம்.
அனந்தத்தின் அதி உயர்வை விலக்கும் முறையிது.
Therefore Mind is the nodus of the great Ignorance.
It is because it divides and distributes.
Therefore Mind was mistaken for the cause of the universe.
It was mistaken for a while even as divine Maya.
But divine Maya comprehends Vidya and Avidya.
They are Knowledge as well as the Ignorance.
There must be the original consciousness.
It will include finite as well as infinite.
The finite is only the appearance of the infinite.
The finite is the result of the action of the infinite.
It is a play of the conception of the infinite.
The finite cannot exist except by the infinite.
The one is the background of the other.
It is itself the form of that stuff and action of that force.
The original consciousness contains both views.
It does so at the same time.
It is intimately conscious of the relationship of the one with the other.
In that consciousness there is no ignorance.
There the infinite is known.
The finite is not separated from the infinite.
The finite is not an independent reality.
Still there is a subordinate process.
It is a process of delimitation.
Otherwise no one could exist.
It is a process by which Mind, Life and Matter come into the phenomenal being.
The Mind divides and reunites.
Life is ever divergent and convergent.
எனவே மனம் அறியாமைக்கு அச்சாணி.
துண்டாடி, விநியோகம் செய்வது அதன் வேலை.
இக்காரணத்தால் மனம் உலகை சிருஷ்டித்தது என நினைக்க
வேண்டியதாயிற்று.
கொஞ்ச நாள் வரை மனத்தையே மாயைஎனவும் கருதினர்.
தெய்வீகமாயைக்கு ஞானமும், அஞ்ஞானமும் புரியும்.
வித்யாஎன்பது ஞானம்; அவித்யாஎன்பது அஞ்ஞானம்.
இவையிரண்டையும் உட்கொண்ட ஆதி ஜீவியம் இருக்க வேண்டும்.
இதனுள் சிறியதும் பெரியதுமிருக்கும்.
சிறியது பெரியதன் தோற்றம்.
பெரியதன் செயலால் சிறியது ஏற்பட்டது.
அனந்த ஞானத்தின் லீலை இது.
சிறியது பெரியதன் ஆதரவின்றி இருக்க இயலாது.
ஒன்று மற்றதற்குப் பின்னணி.
அச்சக்தியின் செயலாகவும் அதன் ரூபமாகவும் அதுள்ளது.
ஆதி ஜீவியத்துள் இரண்டும் இணையும்.
ஒரே சமயத்தில் அது நடக்கும்.
சிறியதன் உறவு அதற்கு நெருக்கமாகத் தெரியும்.
அந்த ஜீவியத்துள் அஞ்ஞானமில்லை.
அங்கு அனந்தம் உண்டு.
சிறியது அங்குப் பெரியதினின்று பிரிக்கப்படவில்லை.
சிறியது தனித்தது அன்று.
இருப்பினும் முக்கியச் செயலுக்கு உபசெயலுண்டு.
இது வரையறை செய்யும் வகை.
இல்லாவிட்டால் எதுவும் ஜீவிக்க முடியாது.
மனம், உயிர், உடல் இவ்வகைத் தோற்றமாக எழுந்தன.
மனம் பிரித்து இணைக்கிறது.
வாழ்வு விரியும், விரிந்து சுருங்கும்.
Substance is infinitely divided and self-aggregates.
All by one principle and one original act.
This is the subordinate process of the eternal Seer and Thinker.
It is perfectly luminous.
HE is perfectly aware of Himself and all.
He knows well what He does.
HE is conscious of the infinite and finite HE is creating.
It may be called the divine Mind.
It is obvious it is a subordinate process.
It is really not a separate process.
What works is the Real-Idea of the Supermind.
It works through the apprehending movement.
It is a movement of the Truth-Consciousness.
Prajnana is the apprehending consciousness.
Page No.164
Para No.8
The All is indivisible.
The All has a consciousness.
The indivisible All is working.
Prajnana places that working before the consciousness of the All.
The working is active and formative.
It is a process.
The working is the object of creative knowledge.
That consciousness is originative.
It is cognisant as a possessor.
It is the witness of its own working.
It is as the poet views his own poem.
The poem is the creation of his own consciousness.
The result looks as if it is different from its creator.
It is not even different from that creative force.
Yet it is self formation.
ஜடப்பொருள் அளவுகடந்து பகுக்கப்பட்டுத் தொகுக்கப்படுகிறது.
அனைத்திற்கும் ஒரே சட்டம், ஒரே செயல்.
ஞானியும் ரிஷியுமான இறைவனுக்கு இது உபசெயல்.
இது ஒளி பொருந்திய பாதை.
இதற்கு இறைவனையும் அனைத்தையும் தெரியும்.
தான் என்ன செய்கிறான் என அவன் அறிவான்.
தான் சிருஷ்டிக்கும் சிறியதையும் பெரியதையும் அவன் அறிவான்.
இதை தெய்வீக மனம் எனலாம்.
இது உபசெயல் என்பது தெளிவு.
இது தனிச் செயலன்று.
இங்குச் செயல்படுவது முழுஎண்ணம், சத்தியஜீவியம்.
இது பிரக்ஞா மூலம் செயல்படுகிறது.
இது சத்தியஜீவியத்தின் ஒரு சலனம்.
பிரக்ஞா என்பது காலத்துள் உள்ள சத்தியஜீவியம்.
முழுமைஎன்பது பகுக்கப்பட முடியாது.
முழுமைக்கு ஜீவியம் உண்டு.
முழுமை செயல்படுகிறது.
பிரக்ஞா முழுமையின் செயலை முழுமைமுன் வைக்கிறது.
அச்செயல்கள் தீவிரமானவை, ரூபம் பெறுபவை.
அது ஒரு முறை.
சிருஷ்டிக்குரிய ஞானத்திற்கு இவ்வேலைகள் ஓர் இலக்கு.
ஜீவியம் அவற்றின் உற்பத்தி ஸ்தானம்.
பெற்றதை ஆட்சி செய்யும் வகையில் ஜீவியம் அதை அறிகிறது.
தன் செயலுக்குத் தானே சாட்சி.
கவி தன் காவியத்தைக் காண்பதுபோல் முழுமை அதைக் கண்ணுறும்.
காவியம் தன் ஜீவியத்தின் செயல் எனக் கவி அறிவான்.
அப்படி நோக்குவதால் காவியம் கவியினின்று வேறுபட்டதாகத் தெரியும்.
உண்மையில் காவியம் சிருஷ்டிக்கும் சக்தியினின்று வேறுபட்டதன்று.
இருந்தாலும் அது தானே தன்னை ரூபம் பெறச் செய்தது.
It is so all the time.
It is no more than the play.
It is a self formation of his own being in itself.
It is indivisible from the creator.
It is the fundamental division.
It is made by Prajnana.
It leads to all the rest.
It creates the Purusha.
The Purusha is the conscious soul.
The Purusha knows and sees.
He creates by his vision.
He also ordains.
He creates Prakriti.
It is the Force-Soul.
It is called the Nature-Soul.
Prakriti is his knowledge and vision.
Prakriti is his creation.
It is his all-ordaining power.
Both . Purusha and Prakriti . are one Being.
Both are one existence.
We see the forms.
We see them created.
They are multiple forms.
They are forms of that Being.
It is placed by Him as knowledge before Himself as Knower.
It is again placed by Himself as Force before Himself as Creator.
The last action of the apprehending consciousness awaits.
It takes place when Purusha extends his being.
He is present at every point of himself.
இதுவே எப்பொழுதும் நடப்பது.
இது லீலை தவிர வேறேதுமில்லை.
இது கவியின் ஜீவன் தானே ரூபமெடுப்பது; தன்னுள்ளே ரூபம் பெறுவது.
காவியம் கவியிலிருந்து
பிரிக்கப்பட முடியாதது.
இது அடிப்படைப் பிளவு.
இதைச் செய்வது பிரக்ஞா.
மற்றவை அனைத்தும் இதிலிருந்து
எழுந்தவை.
இதுவே புருஷனை உற்பத்தி செய்கிறது.
புருஷன் என்பது விழிப்பான ஆத்மா.
புருஷனுக்குத் தெரியும். அவனுக்குப் பார்வையுண்டு.
அவன் சிருஷ்டியை அவனே சிருஷ்டிக்கிறான்.
நிர்வாகம் செய்வதும் அவனே.
பிரகிருதியை அவனே உற்பத்தி செய்கிறான்.
பிரகிருதி என்பது சக்தியின் ஆத்மா.
அது இயற்கையின் ஆத்மா.
பிரகிருதி அவனுடைய ஞானம், திருஷ்டி.
பிரகிருதி அவன் படைப்பு.
இது அவனது முழு நிர்வாகம்.
புருஷனும் பிரகிருதியும் ஒரே ஜீவன்.
இரண்டிற்கும் இருப்பு ஒன்றே.
நாம் ரூபங்கள்.
அவை உற்பத்தியாவதை நாம் காண்கிறோம்.
நாம் பல ரூபம் பெற்றிருக்கிறோம்.
அவை ஜீவனின் ரூபங்கள்.
அவன் முன்னே அறிபவனாக ஞானம் வருகிறது.
மீண்டும் அவன்முன்னே சிருஷ்டிக்கர்த்தாவாக, சக்தியாக அது
வைக்கப்படுகிறது.
பிரக்ஞாவின் கடைசிச் செயல் காத்திருக்கிறது.
புருஷன் தன் ஜீவனை விரிவுபடுத்தும்பொழுது அது நடக்கிறது.
அவனே அனைத்துமாதலால் அவனுள் எல்லா இடங்களிலும் அவன்
இருக்கிறான்.
He is also present in his totality.
He inhabits every form.
He regards the whole separately as if he views.
He views from each of the standpoints he has taken.
He views and governs the relations of each soul-form of himself
with other soul-forms.
He does so from the standpoint of will and knowledge
appropriate to each particular form.
Thus the elements of division have come into being.
Page No.165
Para No.9
Three changes take place in infinity, omnipresent reality and the
multiplicity of the soul-forms.
The infinity changes into Time and Space.
It does so in the extension of the One.
Time and Space are conceptual.
It is a translation.
The omnipresence changes into multiplicity.
It is a multiplicity of the conscious-soul.
It is done by the One by a self-conscious extension.
The multiplicity of the soul forms changes into divided habitations.
The conscious soul is the many Purushas of the Sankhya.
The divided habitation is of the extended unity.
The divided habitation is inevitable.
It is because the multiple Purushas do not each inhabit a separate world of their own.
They do not each possess a separate Prakriti.
They do not build a separate universe.
Rather, all enjoy the same Prakriti.
அவன் தன் முழுமையுள்ளும் இருக்கிறான்.
அவன் எல்லா ரூபங்களிலும் வதிகிறான்.
முழுமையைத் தான் காண்பதற்காக வேறாகக் காண்கிறான்.
அவன் பெற்ற ஒவ்வொரு கண்ணோட்டத்திருந்தும்
அவன் காண்கிறான்.
ஒவ்வோர் ஆத்ம ரூபத்தையும் அதன் மற்ற ஆத்ம ரூபத்துடனுள்ள
தொடர்பை அவன் கண்ணுற்று, நிர்வாகம் செய்கிறான்.
ஒவ்வோர் ஆத்ம ரூபத்திற்கும் பொருத்தமான கோணத்திலிருந்து
ஞானம், உறுதி நோக்கால் அதைச் செய்கிறான்.
இவ்வழி பிரிவினை என்ற அம்சம் உற்பத்தியாகிறது.
அனந்தம், எங்கும் நிறை பரம்பொருள், ஆத்ம ரூபத்தின் அனந்த ரூபங்கள்
ஆகியவற்றில் இம்மாறுதல்கள் நிகழ்கின்றன.
அனந்தம் காலமும் இடமுமாக மாறுகிறது.
ஒன்று தன்னை நீட்டுவதால் இது நிகழ்கிறது.
காலமும் இடமும் கருத்துக்குரியவை.
இது இடம் மாறுவது.
எங்கும் நிறைபவன் எல்லா ஜீவராசிகளுமாகிறான்.
பன்மை என்பது விழிப்பான ஆத்மாவுக்குரியது.
இதைச் செய்வது ஒன்று. தன்னை முனைந்து நீட்டுவதால் இது நடக்கிறது.
பல ஆத்மாக்கள் பல பிரிந்த நிலையிலுள்ள ஜீவன்களாகின்றனர்.
விழிப்பான ஆத்மா என்பது சாங்கியம் கூறும் பல புருஷர்கள்.
பிரிந்த ஜீவன்கள் என்பது ஐக்கியம் அடுத்த கட்டத்திற்குச் செல்வது.
பிரிந்த ஜீவன் தவிர்க்க முடியாதது.
பல ஜீவன்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பிரகிருதியைப் பெற்றிருக்கவில்லை
என்பதால் ஏற்படுகிறது.
அவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பிரகிருதியில்லை.
அவை தனிப் பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பதில்லை.
அனைத்துப் புருஷர்களும் ஒரே பிரகிருதியை அனுபவிக்கின்றனர்.
(They must do as they are soul-forms of the One.
They are presiding over the multiple creations of His Power).
Yet, they have relations with each other.
The relations are in the one world of being created by the one Prakriti.
The Purusha in each form actively identifies himself with each.
He delimits himself in that.
He sets off his other forms against it in his consciousness.
That consciousness contains his other selves.
They are identical with him in being.
But they are different in relations.
It is different in various extent.
It is so in various range of movement and various view of one substance, force, consciousness and delight.
Each is actually deploying at any given moment all these or in any given field or space.
In the Divine Existence it is not a binding limitation.
It is granted.
It is perfectly aware of itself.
It is not an identification to which the soul is enslaved.
Nor is it incapable of exceeding the limits.
The identification with the body is an enslaving limitation.
The limitation of the conscious ego is binding.
One particular movement of our consciousness in Time
determines our particular movement in Space.
Still, there is a free identification from moment to moment.
It is inalienable self-knowledge of the divine soul.
It will prevent the binding limitation.
(அவை ஒன்றின் ஆத்மரூபங்கள்என்பதால் அப்படிச் செய்கின்றன.
அவை அவனுடைய சக்தி ஏராளமாக சிருஷ்டிப்பதை தலைமை
தாங்குகின்றன).
அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
பிரகிருதி சிருஷ்டித்த ஒரே உலகில் இவ்வுறவுகள் உள்ளன.
ஒவ்வொன்றிலும் உள்ள புருஷன் மற்ற புருஷர்களுடன் தீவிரமாக
இரண்டறக் கலக்கிறது.
தன்னை அதனுள் அவன் அடக்கிக்கொள்கிறான்.
பிற ரூபங்களைத் தன்ஜீவியத்தில் பிரதிபலிக்க அனுபவிக்கிறான்.
ஜீவியம் பிற ஆத்மாக்களைத் தன்னுட் கொண்டுள்ளது.
அவை ஜீவனில் அவனோடு ஒரே மாதிரியானவை.
அவை தொடர்பால் வேறுபடுகின்றன.
வேறுபாட்டின் அளவு மாறும்.
மாறும் வேறுபாட்டின் மாற்றங்கள் அப்படிப்பட்டவை. ஆனந்தம், ஜீவியம், சக்தி, பொருள் ஆகியவை மாறும்பொழுது மாறும்.
எந்த நேரமும் இவையெல்லாம் நடக்கின்றன. எந்த இடத்திலும் இவை
நடந்தபடியிருக்கின்றன.
தெய்வீகவாழ்வில் இப்பிரிவினை அவசியமில்லை.
அதற்கு உத்தரவுண்டு.
அது தெளிவாகத் தன்னையறியும்.
இந்த ஒற்றுமைக்கு ஆத்மா அடிமையில்லை.
தன் எல்லையை அதனால் கடக்க முடியாது.
உடலோடு ஒன்றுவது ஒரு மீள முடியாத தடை.
விழிப்பான அகந்தையின் தடை தவிர்க்க முடியாதது.
காலத்தின் அசைவு இடத்தின் சலனத்தை நிர்ணயம் செய்யும்.
இருப்பினும், நிமிஷத்திற்கு நிமிஷம் சுதந்திரமான ஒற்றுமை எழுகிறது.
தெய்வீக ஆத்மா பெற்ற விலக்க முடியாத சுயஞானம் இது.
மீளமுடியாத அடிமையை அது தடுக்கும்.
It is an apparent rigid chain of separation.
It is a succession in Time.
Our consciousness is fixed and chained.
Contd....
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நெருங்கி வாழ்ந்தால் ஜீவனற்று விரக்தி ஏற்படும். நிலை உயர்ந்தால் நெருக்கமான வாழ்வு நெருக்கத்தின் இனிமையையும் நிறைவையும் தரும்.
 
ஆதாயம் முதல் நிலை. அர்ப்பணம் அடுத்தது.
 
 
****
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பெருமாறுதல், திடீரென எழும் வளர்ச்சி, அடிக்கடி அருள் செயல்படுதல் ஆகிய நிலையிலுள்ளவர்கட்கு, அடிக்கடி பரிசுகள் கிடைக்கும். எதிர்பாராத பெரும்பலன் வரும்.
அவர்கள் மனநிலையின் பக்குவத்திற்கேற்பவே அவை அமையும். சூழ்நிலையால் நிர்ணயிக்கப்படா. உண்மையில் அவை சூழலைச் சுட்டிக்காட்டுபவை. சூழல் அவர்களுக்கு
அனுப்பும் அழைப்பாகவும் அமையும்.
 
அதிக ஆர்வம் அனைவரையும் ஈர்க்கும்.
மேலும் உயர்வது தனிமையைத் தரும்.
 
*****
பிரிக்கும் தொடர் செயலுக்குரிய தோற்றம் அது.
அது காலத்திற்குரிய தொடர்.
நமது ஜீவியம் குறிப்பிடப்பட்டு விலங்கிடப்பட்டுள்ளது.
தொடரும்.....
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எண்ணமும், உணர்வும், உடலுணர்வும் ஓரிடத்தில் மட்டும் செயல்படுபவை. மேல் மனத்தில் அவற்றால் ஒன்றுசேர
இயலாது. ஆழத்தில் சேரும். அவை சேர்வது உள்ளே போகும் வழி.
 
இணைந்த எழுச்சிகள் சேரும் ஆழம்.
 
****
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒரு கருத்து உன் எண்ணத்தில் பலமுறை வரலாம். ஒரு அனுபவம் பல்வேறு அளவுகளில் மனதில் மீண்டும் மீண்டும் வரலாம். பழைய கருத்து புதுவேகத்தோடு அடுத்த முறை
மனதில் எழுந்தால் அது புதுக்கருத்தாகத் தோன்றும்.
பழைய அனுபவம் சற்று உயர்ந்து மீண்டும் வந்தால், அது புது அனுபவமாகத் தோன்றும்.
 
மயிரிழை மாறினால் பழைய அனுபவம் புதியதாக இருக்கும்.
 
*****



book | by Dr. Radut