Skip to Content

14. அன்பான அமிர்த அபரிமிதம்

அன்பான அமிர்த அபரிமிதம்

கர்மயோகி

  • கண்டு கொண்டால் சித்திக்கும்.
  • கண்டு கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் தவறாது சித்திக்கும்.
  • கண்டு கொண்டால் அருள் சித்திக்கும், கண்டு கொள்ளாவிட்டால் அதிர்ஷ்டம் சித்திக்கும்.
    அருள் என்பது அனைவரும் பெறும் அதிர்ஷ்டம்.
  • மூலவனே முறை.
  • சிறியது சிறப்பானால், பெரியது பலிக்கும்.
  • மூலம் புரிந்தவர்க்கு மூலையிலும் தெரியும்.
  • திருமணம் சொர்க்க வாயில்.
  • ஆத்மா கண்டதை அறிவு மறக்காது.
  • ஆண்டவனுக்குச் செய்யும் சேவை அனைவருக்கும் செய்யும் சேவை.
  • மனிதனுக்குச் சேவையுரியதல்ல.
  • மனிதனுக்குச் செய்யும் சேவை மரணத்தை உறுதிப்படுத்தும்.
  • விலகியவரை விரும்பி நாடும் மனம் திருவுருமாறாது.
    விலகியவரும் விரும்பி நாடும் வழி நடப்பது திருவுருமாற்றம்.
  • உலகம் சிறியது, உள்ளொளி பெரியது.
  • புறத்தில் காண்பது உலகமல்ல, தோற்றம்.
  • உலகமும், பிரபஞ்சமும், பிரம்மமும் உள்ளேயுள்ளன. வெளியில் எதுவும் இல்லை.
  • நிர்மலமானது நிதர்சனமானது.
  • ஆதாயம் ஆண்டவனை விலக்கும், அனைத்தையும் விலக்கும்.
  • புனர்ஜன்மம் தேவையில்லாதவர்க்குப் பூர்வஜன்மம் தெரியும்.
  • பிறரில் காணாத பிரம்மம் பிரம்மமில்லை.
  • மௌனம் விரதம்.
    மௌனத்தைக் கடந்த மௌனம் ஆனந்தம்.
  • எவருக்கும் வேண்டாதவனுக்கு, அனைவரும் வேண்டும்.
  • கேட்பது உலகம், பெறுவது பிரபஞ்சம்.
  • உள்ளம் திருவுள்ளமாவது திருவுருமாற்றம்.
  • அக்ஷர பிரம்மம் முடிவில்லை; ஸ்ரீ அரவிந்த பிரம்மமே முடிவு.
  • அக்ஷரத்தைக் கடந்த ஸ்ரீ அரவிந்தம்.
  • எது வந்தாலும் முடிவில்லாமல் வரும்.
    வரும் வழி நமக்கேற்றதாகும்.
  • எந்த நேரமும் பிரம்மம் இடையறாது கொடுத்துக் கொண்டிருக்கிறது.
    நாம் பெறுவது நாம் கேட்பது.
    பிரம்மம் கொடுக்கத் தயாராக இருக்கிறது, நாம் கேட்பதில்லை.
    கேட்கும் பொழுது எதைக் கேட்பது என அறிவதில்லை.
  • சரணாகதி எளியது, பெரியது.
    பெரியது மிக எளியது.
    எளியது பெரியது என்பது பிரம்ம ஞானம்.
  • நம்பிக்கை உடனே பலிக்கும்.
    க்ஷணத்தில் பலிக்காதது அருளல்ல.

*****



book | by Dr. Radut