Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

55. மனச்சாட்சி பொன் விலங்கு - உதவி உபத்திரவமாகிறது.

  • மனச்சாட்சியற்றவன் மனிதனிலன்.
  • ஊரில் பெரியவன் அநியாயம் செய்கிறான், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
  • எவரும் அடிபட்டவனுக்குச் சாட்சி சொல்லவோ, ஆதரவு தரவோ, நியாயம் கூறவோ முன் வருவதில்லை.
  • என்ன மனிதர்கள், மனச்சாட்சியில்லாதவர்கள் என்கிறோம்.
  • பயந்து சொல்லாதவர் பலர், பணக்காரனுக்குப் பரிந்து சொல்லாதவரும் உண்டு.
  • எப்படியானாலும் மனச்சாட்சியில்லாதவர்.
  • பயம் உள்ளவரை ஒருவன் மனிதனாக முடியாது என்கிறார் அன்னை.
  • மனிதன் என்பதற்குத் தைரியம், மனச்சாட்சி, நேர்மை, மனிதத்தன்மை அடையாளம்.
  • அன்னையிடம் வந்தபின் உலகில் பெரிய விஷயங்கள் எதிராவது வழக்கம்.
  • பிரகலாதனுக்கு அந்த இக்கட்டான நிலை ஏற்பட்டது.
  • மனச்சாட்சிக்குப் பணிந்தால் பாவம் செய்யும் நிலையுண்டு.
  • சிறுவனைத் துரத்தி வரும் ரௌடியிடம் நம் வீட்டில் அவன் ஒளிந்துள்ளதைக் கூறுவது மெய்யா, பொய்யா என்பது தர்ம சங்கடம்.
  • நம்மிடம் பெருந்தொகையை ஒப்படைத்தவர் காலமானார்.
  • அவர் மகன் சூதாடி. பணத்தைக் கேட்கிறான். தகப்பனார் கொடுத்தது அவனுக்குத் தெரியாது.
  • மகனுடைய பிள்ளைகள் கல்யாணம், படிப்புக்குச் சில ஆண்டுகள் கழித்துப் பயன்படும் பணம் அது.
  • உள்ளதை ஒப்புக் கொண்டால் மகன் அதைப் பெற்று சூதில் இழப்பான்.
  • அவன் பணம், மறுக்க உரிமையில்லை, நாமென்ன செய்ய முடியும் என்றால் குழந்தைகள் வாழ்வு வீணாகும்.
  • மறுப்பது பொய், மனச்சாட்சிக்கு விரோதம்.
  • இந்த நிலை அனைவருக்கும் வாராது.
  • உயர்ந்தவனுக்கும், தாழ்ந்தவனுக்கும் இந்த இக்கட்டான நிலையில்லை.
  • மனச்சாட்சியைக் கடந்து தெய்வத்தையடையும் - அன்னையை ஏற்கும் - கட்டத்தில் உள்ளவர்க்கே இது வரும்.
  • இந்த நேரம் மனச்சாட்சி பொன் விலங்கு. உடைக்கப்பட வேண்டும்.
  • கரண்டில் மாட்டிய நண்பனைக் காக்க முடியாது. நாமும் சேர்ந்து உயிரிழக்கலாம்.
  • உதவி செய்தால் உபத்திரவம் வரும். அவனுக்குப் பலனில்லை.
  • எல்லையில் உள்ளவர்க்கே எழும் பிரச்சனைகள் இவை.
  • எல்லையை எட்டாதவர்க்கும், எல்லையைக் கடந்தவர்க்கும் இல்லை.
  • நேருவும், பட்டேலும் உயிர் போனாலும் மகாத்மாவுக்குப் பணிந்தார்கள்.
  • மகாத்மா நாட்டைப் பிரிக்கக் கூடாது என்கிறார். பிரிக்காவிட்டால் சுதந்திரமில்லை.
  • நேருவுக்கும் பட்டேலுக்கும் மனச்சாட்சி குறுக்கே நின்றது.
  • அதை மீறி, மகாத்மாவை மீறினர்.
  • எளிய மனிதனுக்கு வரும் பிரச்சனையில்லை.
  • அன்னையை ஈடுபாடாக ஏற்கும் வரை இது எழாது.
  • ஈடுபாடு அதிகமானால், தவறாது எழும்.
  • மனம் அன்னையில் லயித்தால், பிரச்சனை தானே விலகும்.
  • பிரச்சனை மனிதனுக்கு.
  • பிரச்சனை விஷயத்திற்கில்லை.
  • மனம் அளவு கடந்து தெளிவுபடாமல் இக்கட்டத்தைத் தாண்ட முடியாது.
  • முன்கூட்டி இது நமக்கு வரக்கூடாது எனப் பிரார்த்திப்பவர்க்கு வாராது.
  • வழியில்லை என்பது அன்னையிடம் அறவேயில்லை.

தொடரும்.....

*********

 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனித முயற்சியை அருளாக மாற்றுவது சரணாகதி.
 
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னை அருளின் மந்திரம்.
 
*******
 



book | by Dr. Radut