Skip to Content

08. அஜெண்டா

அஜெண்டா

August 15 is the day when all past errors are effaced (Volume I, Page 326).

ஆகஸ்ட் 15ஆம் தேதி கடந்த தவறுகள் கரையும் நாள்.

  • எந்த ஸ்தாபனத்திற்கும் முக்கிய நாட்கள் உள்ளன. அன்று குறிப்பிட்ட வேலைகள் விசேஷமாக நிறைவேறும்.
  • ரயில்வே ஸ்டேஷனில் ரயில் வரும் நேரம் அப்படிப்பட்டது.
  • ஸ்டாக் மார்க்கட்டில் விலையேறும் நேரம் உண்டு, சரியும் நேரம் உண்டு.
  • அரசியல் வாழ்வில் தேர்தல் முக்கிய நேரமாகும். அன்று எவரும் எந்த உயர்வையும் நாடலாம்.
  • பள்ளிக்கூடம், கல்லூரிகளில் ஆரம்ப நாட்கள், பரீட்சை தினம் முக்கிய நாளாகும்.
  • மனிதனுக்கு இளமை முக்கிய பருவம், திருமண நாள் வாழ்வைப் புனிதப்படுத்தும் நாளாகும்.
  • பகவான் பிறந்த நாள் எவருடைய கடந்த கால தவறும் கரையும் நாள்.
    • 1945 ஆகஸ்ட் 15, உலக யுத்தம் முடிந்தது.
    • 1947 ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை பெற்றது.
    • 1962 ஆகஸ்ட் 15 அன்று பகவான் ஆசிரமத்தின் மீது அமர்ந்திருந்தார்.
    • பக்தர்கள் ஆகஸ்ட் 15இல் தங்கள் வாழ்வின் குறை கரைவதைக் காணலாம்.
  • ஆகஸ்ட் 15 நிறைவு நிறையும் நாள். குறையின் தொகுப்பு நிறைவை நோக்கி நகர்வது இயல்பு. அங்குக் கரைவதும் இயல்பு, இயற்கை, முறை, எதிர்பார்க்கக் கூடியது.
  • தம் சொந்த வாழ்வில் திரண்டு வந்த குறைகள் திடீரெனக் கரைந்த அனுபவமுள்ளவர் அதை நினைவு கூர்ந்து அதற்குரிய தேதியை நினைத்துப் பார்த்தால் இவ்வனுபவம் புரியும்.
  • பல அன்பர்கள் ஆசிரமம் வந்த நாள் அன்னையை முதலில் அறிந்த சமயம் ஆகஸ்ட் 15 என அறிவர். அந்த நாள் ஆகஸ்ட் 15ஆக இருப்பது வழக்கம்.
  • ஒரு இன்ஜீனீயரை முதலாளியாக்க முயன்றபொழுது அதற்குரிய மூலகாரணம் என முயற்சியை மட்டும் எடுக்க மறுத்துவிட்டார். வருஷம் 7 ஆயிற்று. கடன் வளர்ந்தது, வருமானமில்லை, சர்க்கார் சம்பந்தப்பட்ட காரியங்களில் நிலுவை வளர்ந்தது. அப்பொழுது வந்த முதலாளி
    • முழு முதலும் போட சம்மதித்தார்.
    • இதுவரை ஏற்பட்ட கடன்களைக் கொடுக்கச் சம்மதித்தார்.
    • தொழிலில் பங்கு கொடுத்து, சம்பளம் தர முன் வந்தார்.
      இது தரிசன சமயம். ஆகஸ்ட் 15க்கு உரிய விசேஷமிது.
  • மனித இதயம், குறிப்பாக ஆத்மா பகவானை நோக்கித் திரும்புவது பூமி இறைவன் வரும் தருணத்தை அறிவதாகும்.
  • அதை அறிவிக்க வந்தவர் பகவான்.
  • அவர் பிறந்த நாள் பூமிக்குப் பொற்கிழி, ஆன்மீகப் பரிசு.
  • பூமி விழித்து, பரம்பொருளை அழைத்தால் இதுவே அத்தருணமாகும் என்கிறார் பகவான்.
  • ஆகஸ்ட் 15 ஆயிர வருஷமாக இந்த முக்கியத்வமுடையது.

*******



book | by Dr. Radut