Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

P.147 Else this great, blind inconscient universe

பெரிய குருடான ஜடமான இப்பிரபஞ்சம்

  • புதைந்துள்ள தன் மனத்தை வெளியிட்டிருக்க முடியாது
  • விலங்கும் மனிதனும் கண்ணை மறைத்துச் செயல்படுவது போல்
  • பிரபஞ்சத்தை சிருஷ்டித்த புத்திசாலித்தனமாக
  • ஆரம்பத்தில் மங்கிய மனத்தின் திறன் தென்பட்டது
  • ஜடமும் ஊமை வாழ்வும் மறைக்கும் சலனம் போல்
  • சிறு ஓடை வாழ்வின் பெரும் பிரவாகமாக அது ஓடிற்று
  • மாறும் வானத்தின் கீழே துள்ளி தடம்மாறும் ஓட்டம்
  • பளபளக்கும் பிரம்மாண்டமான பிரவாகத்தின் அலையூடே
  • உணர்வாகத் தெறித்து உணர்ச்சியலைகளாகப் பெருகியது
  • ஆழ்ந்த உலகின் அறிய முடியாத ஆழத்தில்
  • முண்டி மோதும் அலைகள் நுரைத்தெழும் ஜீவியத்தின் ஓட்டம்
  • குறுகிய கால்வாயில் வேகமாகத் துள்ளும்
  • நெருக்கமான நடையில் வளரும் அனுபவம்
  • மேலுலக ஒளியில் அது மிதந்தோடியது
  • அதன் ஆழ்ந்த குட்டையின் அடிமனப்பிறப்பில்
  • தெரிய முடியாத பெருவாழ்வை எட்ட
  • சொந்த நினைவில்லை, இலட்சியம் ஏதுமில்லை
  • அறியாத பாரம் விவரமற்ற தேடல்
  • நிலையற்ற மேலோட்டம் நெருங்கி வந்தது
  • உணர்ச்சி, கத்திக் குத்து, கூரான ஆசை
  • பாசத்தின் துள்ளல், சிறு உணர்வின் அழுகுரல்
  • தசையும் சதையும் தற்செயலாய் ஏற்கும் உறவு
  • இதயத்தின் ஏக்கம், சொல்லையிழந்த உணர்வின் வேகம்
  • ஞானத்தின் மின்னல், எண்ணம் பெறாத ரூபம்
  • ஆழ்மன உறுதி அல்லது பசியின் வேகம்
  • நுரையிடும் மேற்பரப்பில் மங்கிய பொறிகள்
  • நிழலுருவத்தின் நெகிழ்ச்சி சுழலும் சுழற்சி
  • காலத்துள் ஜட சக்தியின் பிரவாகம்
  • திருஷ்டியுள்ள சக்தியின் தெளிவான அழுத்தம்
  • அனைத்தையும் குழப்பிய மொத்தையாக இழுத்த பாங்கு
  • பளபளக்கும் ஒரே புள்ளியைச் சுற்றி வரும் அமைப்பு
  • செழிப்பான அரங்கின் முக்கியமான மையம்
  • ஐக்கிய ஜோதியின் அடையாளமான உருவம்
  • அரைகுறை உணர்ச்சி வெள்ளத்துள்ளலை அது ஆரம்பித்து வைத்தது
  • மாயையும் நிலையெனத் தோன்றியது

*****

 

ஜீவிய மணி
 
எதிர்பார்ப்பது எட்டிப் போகும்.
 
 
******



book | by Dr. Radut