Skip to Content

05. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/80) புருஷனை அதிகாரம் செய்யும் சுபாவத்தை சக்தி, தானே ஈஸ்வர சக்தியானாலும் கைவிடுவதில்லை. புருஷனை அதிகாரம் செய்தாலொழிய அது பணிவதில்லை.

  • சரணாகதியை மீறிய சக்தியின் அனந்தம்.
  • பெருங்காய டப்பிக்கு வாசனை போகாது.
  • வெள்ளைக்காரன் போய் 60 ஆண்டுகளானாலும் அவன் வாடை நாடெங்கும் உள்ளது.
  • மாற்றம் பெரு மாற்றமானாலும், பழைய குணம் ஓரளவிருக்கும்.
  • டார்சியை மணந்த பின்னும், பெம்பர்லியில் குடி வந்த பின்னும் மனம் விக்காமை விட்டு நகரவில்லை.
  • M.A., Ph.D., கணக்கில் எடுத்த அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியரும் 12x8=96 என்பதை மனதில் தமிழில் சிறு வயதில் கற்ற வாய்ப்பாட்டின் மூலம் அறிகிறார். அடிப்படை அழிவதில்லை.
  • துரும்பைக் கிள்ளிப் போட்டு மாப்பிள்ளை என்றாலும் அது துள்ளும். அது மாப்பிள்ளை சுபாவம்.
  • பெண் பரம்பரையாய் அடிமை.
  • தகப்பன், கணவன், மகனுக்குப் பணிந்து வாழ்வது அவள் வாழ்வு.
  • சுபாவத்திலேயே பெண் பணிவுடையவள்.
  • ஆண்மை ஆட்சி செலுத்தினாலன்றி அவள் பெண்மை பூர்த்தியாகாது என்பது பெண் சுபாவம்.
  • தாய்மை அவளுக்குரியது என்பது போல், பணிவுக்கும் அவள் உரியவள்.
  • ஆழ்மனம் மேல்மனத்திற்கு எதிராக இது வளரும் பொழுது அதுவும் வளர்வது பரிணாமம்.
  • திட்டத்திட்டத் திட்டுக்கல் என்பது வாய்ச்சொல்.
  • ஊரில் ஒருவன் மாறாக, எதிராக, தவறாக முன்னுக்கு வருவதை ஊரெல்லாம் கண்டிக்கும் நேரம் உண்டு. அதன் முதல் விளைவு அவனுடைய செல்வம், பதவி மேலும் உயர்வது.
  • அனைவரும் அவனையே நினைத்துக் கொண்டிருப்பதால் அவர்களுடைய தெம்பு அவனுக்குப் போகிறது.
  • வாலியை எதிர்ப்பவர் தெம்பு பாதி வாலிக்குப் போகும்.
  • பவ்யம், பணிவு, அடக்கம், ஒடுக்கம் மனத்தில் வளர்ந்தால் ஆழ்மனத்தில் இவற்றிற்கு எதிரானவை கூடவே வளரும்.
  • உலகமுழுவதும் ஆள்பவனுக்கும் அதற்கெதிரான குணம் தன்னையறியாமல் உள்ளே உருவாகும்.
  • பகவான் சரணாகதியைப் பற்றி பிரதானமாகப் பேசுகிறார்.
  • சரணாகதிக்குரிய சட்டத்தைக் கூறுகிறார்.
  • என்ன நிபந்தனையில் சரணாகதி பரிமளிக்கும் என்கிறார்.
  • திருவுருமாற்றத்திற்கு இன்றியமையாதது சரணாகதி என்கிறார்.
  • வாழ்வின் சிறுமைகளைக் கடந்தாலும் அவற்றின் சுவடு தெரியும் என்கிறார்.
  • திருவுருமாற்றத்தில் அது இருக்காது என்கிறார்.
  • ஈஸ்வர சக்தியில் சாதிப்பது திருவுருமாற்றம் என்கிறார்.
  • இத்தனையையும் கடந்தும் பெண் கட்டுப்பாட்டினுள் இருக்கமாட்டாள். அவள் அதை மீறும்பொழுது சற்று இழுத்துப் பிடிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்.
  • பிரபஞ்சத்தில் சஞ்சாரம் செய்தாலும், பிரம்மம் சித்தித்தாலும், பகவான் போன்ற பெரியவர்கள் அடிப்படை சத்தியங்களைப் புறக்கணிப்பதில்லை.
  • இக்கருத்தை பகவான் The Life Divine Chapter IIவில் கூறுகிறார்.
  • Aldous Huxley என்ற ஆங்கிலேயப் பெரியார் இக்கருத்தைப் பாராட்டி தன் கட்டுரையொன்றில் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துகிறார்.
  • பருந்தும், குருவியும் எவ்வளவு உயரம் வானில் பறந்தாலும் மாலையில் தன் கூடு தேடி வரவேண்டும் என்பது யதார்த்தம்.
  • பகவான் கொள்கை பூலோக சுவர்க்கம்.
  • பூலோகமே சுவர்க்கமானாலும் பூலோகத்தின் அடிப்படைகள் முழுவதும் அழிவதில்லை.
  • சரணாகதியை மீறும் சக்தி எளிதல்ல.
  • அந்த சக்தியும் அனந்தமானது.
  • எதையும் புறக்கணிப்பது உயர்ந்த இலட்சியமாகாது.

********

II/81) மேலே போகப் போகக் கவர்ச்சி இனிமையில் வளர்கிறது. உடலால் பெண்மையை ஆளும் ஆண் "ஆண்மையின் வலிமை சரணாகதியால் பெண்மையில் பூர்த்தியாகிறது" என்கிறான். அதுவே ஈஸ்வர நிலை.

  • ஆண்மை பெண்மையை ஆள்கிறது. பெண்மைக்கு அடங்கும் ஆண்மை பெண்மையில் பூரிக்கிறது.
  • நம் பரம்பரைக்கு இது எதிரானதாகத் தோன்றும். உண்மையில் எதிரானதல்ல.
  • மக்களாட்சி என்பது தலைவர், பொதுமக்களுக்குப் பணிவது.
  • இது மன்னராட்சியை விட உயர்ந்தது.
  • குரு என்றால் சிம்ம சொப்பனம் என்றாலும், எந்த குரு, சிஷ்யனின் பெருமையை அறிகிறாரோ அவரே உன்னதமான குரு என்பது தத்துவம்.
  • மாணவனை குரு சமமாக சத்தியத்தின் முன் உட்கார அழைப்பது ஒரு ஸ்லோகம்.
  • குரு ஒரு ஸ்தாபனம், சிஷ்யன் ஒரு ஸ்தாபனம்.
  • ஸ்தாபனம் குறுகியது.
  • ஸ்தாபனத்தைக் கடந்து குரு ஒரு கடல், மாணவன் ஒரு சமுத்திரம்.
  • வயதாகும் பொழுது ஆத்மா இறுகிப் போவதால் சிஷ்யன் பிஞ்சு மனம் என்பதால் கடலெனும் குரு, ஏரியாகச் சுருங்கியபின் சமுத்திரமான சிஷ்யன், பரந்து விரிகிறான்.
  • மனைவிக்குப் பணியும் கணவன் ஆன்மாவில் பணிவதால் அவன் ஆத்மா விரிந்து மலர்கிறது.
  • சர்க்கார் ஆபீசுகளில் உயர்ந்த பதவி I.A.S..
  • கிளார்க்காகவோ, சிறு N.G.O.வாகவோ கெஜட் பதவி ஆபீசர் கீழே வேலை செய்யும் பொழுது ஆபீசர் உயர்ந்தவர்.
  • கிளார்க் I.A.S. எழுதியிருந்தால், பாஸ் செய்துவிட்டால், ஆபீசர் ஆயுள் முழுவதும் எட்ட முடியாத உயரத்திற்குப் போவார்.
  • சிறு N.G.O.க்களை திறமை கருதி I.A.S..க்கு எடுப்பார்கள்.
    அப்படிப் போனாலும் ஆபீசர் நிலையை அவர் கடப்பார்.

    சிறியது சிறியதே. பெரியது பெரியதே.
    சிறியது தன்னை உணர்ந்தால் பெரியதினும் பெரியதாகும்.

  • அணு சிறியது.
  • அதனுள் பிரம்மாண்டமான சக்தி உறைகிறது என நாம் அறிவோம்.
  • சிறியது, பெரியது என்பது ஊரார் நினைப்பு, சமூகக் கண்ணோட்டம்.
    பிரம்மத்தின் நோக்கில் சிறியதும் பெரியதும் ஒன்றே.
    சிறியது தன் பெரிய நிலையை உணர்ந்தால், இன்றுள்ள பெரியதை விடப் பெரியதாகும்.
  • இதைப் பெறும் நிபந்தனை:

    மனம் விரும்பிச் சிறியது பெரியதற்கு சரணடைவதே அந்த நிபந்தனை.

  • கண்டம் finite, அகண்டம் infinite என்பவை தத்துவம்.
  • ஊர் சிறியது, உலகம் பெரியது.
    குழந்தை சிறியது, தகப்பனார் பெரியவர்.
    கோலிக்குண்டு சிறியது, குன்று பெரியது.
    சிறியது கண்டம், பெரியது அகண்டம்.
  • சிறியதையும், பெரியதையும் சிருஷ்டித்தது
    பிரம்மம் மிகப் பெரியதை விடவும் பெரியது.
    ஏனெனில் அதை சிருஷ்டித்ததும் பிரம்மமே.
  • பெரிய கணவன், சிறிய மனைவிக்கு அன்பால் அல்லது இயலாமையால் பணிந்தால் பெண் பிரம்மாண்டமாகத் தோன்றுகிறாள். அவன் விழிப்படைந்தால் அவள் அடங்குவாள்.
  • திருமணம் ஆனவுடன் மனைவி பத்ரகாளி, ஆர்ப்பாட்டக்காரி, தன்னடக்கமற்றவள், தனக்கு கணவன் அடங்க வேண்டும் என்று விரும்புபவள். இவளை அன்பாலோ, ஆதரவாலோ, பணிவாலோ, பழக்கத்தாலோ கட்டுப்படுத்த முடியாது என்று கண்ட பென்னட் அவள் இஷ்டத்திற்கு விட்டுவிட்டார்.
    குடும்பம் அவள் சாம்ராஜ்யமாயிற்று.
    அவலமான நிலை ஏற்பட்டவுடன் அவர் மாறினார்.
    அவர் மாறியவுடன் நிலைமை மீறியது.
    அவள் இருந்த இடம் தெரியாமற் போய்விட்டது.
    அவள் ஆண்டது தோற்றம்.
    அவருடைய ஆட்சி உண்மை.

தொடரும்....

*******



book | by Dr. Radut