Skip to Content

10. Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

Sri Aurobindo and the Tradition

ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

CHAPTER 1 – THE HUMAN ASPIRATION:

  1. Tradition accepts our present condition of obscurity, suffering and death.
    Sri Aurobindo wants us to take a more deliberate view and see the contradictions as complements.

    தெளிவின்மை, துன்பம், மரணம் ஆகியவற்றால் ஆன நம் தற்போதைய நிலையை மரபு ஏற்கிறது.
    அதற்கு அப்பாற்பட்டு சிந்தித்து, முரண்பாடுகளை நாம் உடன்பாடுகளாகக் காண வேண்டும் என்று ஸ்ரீ அரவிந்தர் விரும்புகிறார்.

  2. Tradition does not disturb the disharmony between the parts of our being.
    Sri Aurobindo harmonises each part with the next to discover the Marvel of life.

    நம் ஜீவனின் பகுதிகளுக்கிடையே உள்ள பிணக்குகளை மரபு கவனிப்பதில்லை.
    ஸ்ரீ அரவிந்தர் வாழ்வின் அற்புதத்தைக் கண்டறிய ஒவ்வொரு பகுதியையும் அடுத்த பகுதியோடு இணக்கமுள்ளதாக்கினார்.

  3. Tradition knows of the evolution up to now.
    Sri Aurobindo speaks of the further evolution of Man into the Supramental Being.

    இதுவரை நிகழ்ந்த பரிணாமத்தையே மரபு அறியும்.
    மனிதன் சத்திய ஜீவனாக மாறும், இனி வரப்போகும் பரிணாமத்தைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் பேசுகிறார்.

  4. Tradition accepts the status quo as it is.
    Sri Aurobindo does not want us to stop in the middle.

    மரபு தற்போதைய நிலையை அப்படியே ஏற்கிறது.
    ஸ்ரீ அரவிந்தர் நாம் நடு வழியில் நின்றுவிடுவதை விரும்பவில்லை.

    CHAPTER 2 – THE MATERIALIST DENIAL:

  5. Tradition Calls Matter the garb of the Spirit.
    Sri Aurobindo goes on to reconcile Matter with the Spirit.

    ஜடத்தை ஆன்மாவின் ஆடையென மரபு கூறுகிறது.
    ஸ்ரீ அரவிந்தர் ஆன்மாவிற்கும், ஜடத்திற்குமுள்ள வேறுபாடுகளைக் களைகிறார்.

தொடரும்....

********

ஜீவிய மணி
 
முடியாததில்லை;
முயலாததுண்டு
 

*******



book | by Dr. Radut