Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/6. ஆர்ப்பாட்டமான அழிவு, இல்லாததை இருப்பதாக்கும் ஆர்வம்

  • ரேஸ், சீட்டு, குடி, தாசி வீடு ஆகியவை அழிவை நாடும் ஆர்ப்பாட்டம்.
  • இவற்றை நாடியவர் அழிவிலிருந்து தப்பியது குறைவு.
  • ஏன் ஒருவருக்கு இந்தச் சுபாவம் வருகிறது என்பதைச் சொல்ல முடிவதில்லை. காரணம் என்று தெரிந்த அளவில் சொல்பவை.
    • ஜாதகப்படி நடப்பது.
    • முதல் தலைமுறை பணம், இரண்டாம் தலைமுறையில் அழிவை நாடும்.
    • உள நூல்படி ஒருவர் முன்னுக்கு வரும்பொழுது எதிரான குணங்களைக் கட்டுப்படுத்தினால், அவைகள் பிள்ளைகள் வாழ்வில் வெளிப்படும்.
    • பெறும் பெரும் செல்வம் பண்பால், அறிவால், தர்ம நியாயத்தால் பெறாமல், உழைப்பால், முயற்சியால் பெற்றால் அடுத்த தலைமுறை அழிக்கும்.
    • தகப்பனார் உயர்ந்தவராகவும், தாயார் அல்பமானவராகவுமிருந்தால் அல்லது மாறியிருந்தால், பிள்ளைகள் ஆர்ப்பாட்டத்தை நாடுவர்.
    • மட்டமான ஊரில் பெரும் செல்வம் பெற்றால், இது நடக்கும்.
  • தத்துவப்படி சச்சிதானந்தம் முடிவு. அது மோட்சம் தரும்.
  • பகவான் கூறுவது சத்தும், அசத்தும் ÷சேர்ந்து, இணைந்து, உயர்ந்து பூரண யோக இலட்சியமான திருவுருமாற்றம் தரும்.

    அழிவான ஆர்ப்பாட்டம் முடிவில் திருவுருமாற்றமாகும்.
    திருவுருமாறும் என்றால் இன்று இல்லாததை இருப்பதாக்கும்.

  • சமூகம் மாறும்பொழுது நாம் இதைக் காணலாம்.
    அமெரிக்க வாழ்வு முழுவதும் இன்று நடுத்தெருவில் நின்றவன், வாழ்நாள் முடியும்பொழுது மேயராக, செனட்டராக, பணக்காரனாக, வக்கீலாக, ஜனாதிபதியாக ஆனான் என்பதாகும்.
  • பஸ் கிளீனர், கண்டக்டர் டிரைவராகி, ஒரு பஸ் வாங்கி, அறுபது பஸ்ஸிற்கு முதலாளியானதுண்டு. இதைச் சாதித்தவன் முன்ஜென்மத்தில் அழிவை விரும்பி நாடியவன். முன்தலைமுறையில் ஆர்ப்பாட்டம் செய்தவனாகும்.

    இன்றைய அழிவு நாளைய பெருமை.

  • அடுத்த ஜென்மத்தில், அடுத்த தலைமுறையில் வருவது காலம்.
  • அன்னை அன்பர் அருளைப் பெறுபவராதலால், மனம் உணர்ந்து திருந்தினால், சில ஆண்டுகளில் இது நடக்கும்.
  • தினமும் இரண்டு சினிமா சில சமயம் மூன்று படம் பார்த்து வாழ்ந்த பட்டதாரி, அன்னையைக் கண்டு சிகöரட்டையும், சினிமாவையும் விட்டதனால் ஒரு நண்பருமில்லாதவருக்கு, ஜில்லா முழுவதும் பிரபலம் ஏற்பட்டது.
  • ஆர்ப்பாட்டமும் அழிவும் தானே வரும், மனிதன் தேடிப்போவான், நண்பரால் வரும், தலைவிதியால் எழும். எப்படி வந்தாலும் அன்பன் என்ற நிலையில் ஆர்ப்பாட்டம் நிலைக்காது. திருவுருமாற்றம் நிலைக்கும்.
  • சுபாவத்தை அறிந்தவன் கவி.
    சுபாவத்தைக் கண்டு கொள்வது ஜாதகம்.
    எப்படிச் சுபாவம் உருவாகிறது என்று ஒரு சாத்திரம் உலகில் இதுவரை உருவாகவில்லை. அது உலக வரலாற்றின் மனோதத்துவ இரகஸ்யம்.

**********



book | by Dr. Radut